twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அன்புச்செழியனை ஏன் உத்தமர் என்கிறார் சீனு ராமசாமி - இதுதான் காரணமா?

    By Vignesh Selvaraj
    |

    Recommended Video

    அன்புச்செழியனை ஏன் உத்தமர் என்கிறார் சீனு ராமசாமி - இதுதான் காரணமா?- வீடியோ

    சென்னை : சசிகுமாரின் மைத்துனரும் தயாரிப்பாளருமான அசோக் குமாரின் தற்கொலை சம்பவம் தமிழ் சினிமா துறையினரை மிகவும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

    பல தயாரிப்பாளர்கள் ஃபைனான்சியர்களால் தாங்களும் பாதிக்கப்பட்டுள்ளோம் என்று பேட்டி கொடுத்து வருகின்றனர். இயக்குநர் சுசீந்திரன் அன்புச்செழியன் தொடர்பான அதிர்ச்சித் தகவல்களை நேற்று வெளியிட்டார்.

    லிங்குசாமி, கௌதம் மேனன், உட்பட பல பிரபல இயக்குநர்களும், தயாரிப்பாளர்களும் அன்புச்செழியனால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் எனும் உண்மையைப் போட்டு உடைத்துள்ளார் இயக்குநர் சுசீந்திரன்.

    சீனு ராமசாமி பேசும் அரசியல்

    முற்போக்கு சிந்தனை கொண்டவராக எண்ணப்படுகிற சீனு ராமசாமி தனது படங்களில் வலிந்து திணிக்காமல் போகிற போக்கில் அரசியல் பேசக்கூடியவர். அன்புச்செழியனை ஜாதிப் பாசத்திற்காகவே சீனு ராமசாமி ஆதரிக்கிறார் எனில் அவர் மீதான ரசிகர்களின் நம்பிக்கையின் மீது பலத்த அடி விழுகிறது. விஜய் சேதுபதியை வைத்து சீனு ராமசாமி இயக்கிய 'தர்மதுரை' படத்தில் கூட சீட்டுக்கட்டி ஏமாந்துபோகும் மக்களைப் பற்றிய காட்சிகளை வைத்திருப்பார். அவரே ஏன் ஒரு கந்துவட்டி பேர்வழியை ஆதரிக்கிறார் என்பதற்கான நேரடிக் காரணங்களைப் புரிந்துகொள்ள முடியவில்லை.

    சீனு ராமசாமியா இப்படி

    சீனு ராமசாமியா இப்படி

    எப்போதும் நியாயத்திற்கு ஆதராவாகக் குரல் கொடுக்கும் சீனு ராமசாமியா இப்படி தற்கொலைக்குக் காரணமான கந்துவட்டி ஆசாமியை ஆதரிக்கிறார் என ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதிலும் அன்புச்செழியனை 'உத்தமர்' போன்ற அதிகப்படியான வார்த்தைகளைப் பயன்படுத்தி முட்டுக்கொடுப்பதற்கான காரணம் என்ன என்பது தெரியாமல் விழிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக சீனு ராமசாமி ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தங்களது அதிருப்தியை வெளிக்காட்டியுள்ளனர். தமிழ் திரையுலகினர் பலரும் அன்புச்செழியன் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனக் கூறிவரும் நிலையில் இவரது ட்வீட் சர்ச்சைகளை ஏற்படுத்தி இருக்கிறது.

    அன்புச்செழியனுக்கு நெருக்கமானவர்கள்

    அன்புச்செழியனுக்கு நெருக்கமானவர்கள்

    இயக்குநர் சீனு ராமசாமி ஃபைனான்சியர் அன்புச்செழியனுக்கு ஆதரவாகப் பேசுவதற்கு அவருக்குள் இருக்கும் சாதிப்பாசம் தான் காரணமாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. அசோக் குமார் தற்கொலை விவகாரத்தில் சசிகுமார் அன்புச்செழியன் மீது புகார் கொடுக்க காவல் நிலையம் செல்வதற்கு முன்பு, அன்புச்செழியனுக்கு நெருக்கமானவரான இயக்குநர் பாலா, போலீஸ் ஸ்டேஷன் எல்லாம் வேண்டாம், பேசித் தீர்த்துக் கொள்ளலாம்' எனக் கூறினாராம். சினிமாவிலும் நிலவும் ஜாதி சார்ந்த நிலைகள்தான் இப்படி பல பிரச்னைகளையும் நீர்த்துப் போகச் செய்கின்றன.

    சீனு ராமசாமி பேசும் அரசியல்

    சீனு ராமசாமி பேசும் அரசியல்

    முற்போக்கு சிந்தனை கொண்டவராக எண்ணப்படுகிற சீனு ராமசாமி தனது படங்களில் வலிந்து திணிக்காமல் போகிற போக்கில் அரசியல் பேசக்கூடியவர். அன்புச்செழியனை ஜாதிப் பாசத்திற்காகவே சீனு ராமசாமி ஆதரிக்கிறார் எனில் அவர் மீதான ரசிகர்களின் நம்பிக்கையின் மீது பலத்த அடி விழுகிறது. விஜய் சேதுபதியை வைத்து சீனு ராமசாமி இயக்கிய 'தர்மதுரை' படத்தில் கூட சீட்டுக்கட்டி ஏமாந்துபோகும் மக்களைப் பற்றிய காட்சிகளை வைத்திருப்பார். அவரே ஏன் ஒரு கந்துவட்டி பேர்வழியை ஆதரிக்கிறார் என்பதற்கான நேரடிக் காரணங்களைப் புரிந்துகொள்ள முடியவில்லை.

    நடிகர்கள் மீதான வெறுப்பு

    நடிகர்கள் மீதான வெறுப்பு

    தமிழ் சினிமாவில் நடிகர்கள் அதிகம் சம்பளம் கேட்பதாக தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார்கள். அசோக் குமார் மறைவுக்கு நடிகர்கள் இரங்கல் தெரிவித்ததும், வன்மையான கண்டனங்களைப் பதிவு செய்ததும் கூட சீனு ராமசாமிக்கு எரிச்சலை ஏற்படுத்தி இருக்கக்கூடும். தயாரிப்பாளர்களின் கடன் சுமைக்கு நடிகர்களின் சம்பளமும் கூடக் காரணமே. அப்படி இருக்கையில் அன்புச்செழியனை மட்டும் குறை கூறுவதை ஏற்றுக்கொள்ளாமல் இப்படி ட்வீட் செய்திருக்கலாம்.

    English summary
    Sasikumar's brother-in-law and producer Ashok Kumar's suicide incident has plunged the Tamil film industry into the tragedy. Director Seenu Ramasamy tweeted on his Twitter page, "It is a sad thing to be misinterpreted the perfect person like anbuchezhiyan and I am on the side of justice."
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X