»   »  தனுஷுக்கு பிடிக்காத சந்தானத்துடன் இணையும் செல்வராகவன்... இதான் பின்னணியா?

தனுஷுக்கு பிடிக்காத சந்தானத்துடன் இணையும் செல்வராகவன்... இதான் பின்னணியா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சந்தானம் காமெடியனாக உச்சத்தில் இருந்த நேரம் அது. தனுஷ் எப்போதுமே தனியாகவே இருப்பார். மற்ற ஹீரோக்களுடன் அதிகம் நட்பு பாராட்ட மாட்டார். சந்தானத்துக்கு சிம்பு, ஆர்யா, உதயநிதி எல்லோருமே நண்பர்கள்தான்.

தனுஷ் தன் படத்துக்கு கால்ஷீட் கேட்டு சந்தானம் மறுக்கவே சந்தானத்துக்கு போட்டியாக சிவகார்த்திகேயனை வளர்த்துவிட்டார். தான் ஹீரோவாக்கி அழகு பார்த்த சிவாவே ஓரிடத்தில் தன்னை பற்றி வாயை விட்டு அது தனுஷ் காதுகளுக்கு வந்து, அதனால் இருவரும் பிரிந்தது எல்லாம் அதன்பின் வரிசையாக நடந்தது.

Why Selvaraghavan chose Dhanush's envy Santhanam?

சந்தானம் நடித்த வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்துக்கு இசையமைக்க அனிருத்துடன் நேரடியாக பேசிப் பார்த்தார் சந்தானம். ஆனால் அவர் தனுஷ் பேச்சைக் கேட்டு மறுத்துவிட்டார்.

ஃப்ளாஷ்பேக் எல்லாம் இப்படி இருக்க செல்வராகவன் எப்படி சந்தானத்தை இயக்க ஒப்புக் கொண்டார்? தனுஷுக்கும் செல்வராகவனுக்குமான மோதல் தான். இரண்டாம் உலகம் தோல்விக்கு பின்னிருந்தே ஒரு அழகான காதல் கதையுடன் தனுஷ் கால்ஷீட்டை கேட்டு வந்தார் செல்வராகவன்.

ஒரு ஹிட் கொடுத்துட்டு வா... பார்ப்போம் என்றுதான் கவுதம்மேனனை தயாரிப்பாளராகக் காட்டிவிட்டு அண்ணனுக்கு உதவி செய்தார் தனுஷ். செல்வாவும் இப்போதைய ட்ரெண்ட்படி உடனே ஹிட் கொடுக்க ஒரு பேய் சப்ஜெக்டை எடுத்து முடித்திருக்கிறார். ஆனால் தனுஷோ இப்போதைக்கு கால்ஷீட் கொடுக்கும் எண்ணத்தில் இல்லவே இல்லை.

இதை அறிந்த செல்வா தான் தனுஷை கடுப்பேற்றும் விதமாக சந்தானத்தை இயக்குகிறார் என்கிறார்கள். தனுஷுக்கு பிடிக்காத ஆர்யாவை செல்வா இரண்டாம் உலகத்தில் 'வெச்சு செஞ்சதை' சந்தானம் மறந்திருக்க மாட்டார்...!

English summary
Why director Selvaraghavan has chosen Santhanam for his next project? Here is the background story.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil