For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  வரிசையாக முன்னணி நட்சத்திரங்களை சந்தித்து ஆசி பெறும் ஷங்கரின் மகள்.. இதுதான் காரணமா?

  |

  சென்னை: ஹீரோயினாக அறிமுகமாகவுள்ள இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி நடிகர் ரஜினிகாந்த்தை நேரில் சந்தித்து ஆசிர்வாதம் பெற்ற போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

  தமிழ் சினிமாவில் ஜென்டில்மேன் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ஷங்கர். தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை பூர்விகமாக கொண்டவர்.

  ஜி.வி.பிரகாஷ், கவுதம் மேனன் இணைந்து மிரட்டும் ஜி.வி.பிரகாஷ், கவுதம் மேனன் இணைந்து மிரட்டும்

  டிப்ளோமோ மெக்கானிக்கல் இன்ஜினியரிங் முடித்த ஷங்கருக்கு சினிமாவில் நடிக்க பேரார்வம். தனது டீம்முடன் சேர்ந்து மேடை நாடகத்தை அரங்கேற்றினார்.

  சில படங்களில் சிறு வேடம்

  சில படங்களில் சிறு வேடம்

  அதனை பார்த்து இம்ப்ரஸ் ஆன இயக்குநர் எஸ்ஏ சந்திரசேகர் ஷங்கரை தன்னுடன் ஸ்க்ரீன் ரைட்டராக சேர்த்துக் கொண்டார். தான் இயக்குநராக வலம் வருவதற்கு முன்பே வசந்த ராகம், சீதா ஆகிய படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்துள்ளார் ஷங்கர்.

  ஜென்டில் மேன் மூலம் அறிமுகம்

  ஜென்டில் மேன் மூலம் அறிமுகம்

  பின்னர் எஸ்ஏ சந்திரசேகர், பவித்ரன் ஆகியோரிடம் உதவி இயக்குநராக பணியாற்றினார் ஷங்கர். 1993 ஆம் ஆண்டு வெளியான ஜென்டில் மேன் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார் ஷங்கர். அர்ஜூன், மதுபாலா, கவுண்ட மணி, செந்தில் என பெரும் நடிகர் பட்டாளத்துடன் வெளியான இப்படம் பெரும் ஹிட்டானது. விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

  பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர்

  பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர்

  அதனை தொடர்ந்து காதலன், இந்தியன், ஜீன்ஸ், முதல்வன், பாய்ஸ், அந்நியன், சிவாஜி தி பாஸ், எந்திரன், நண்பன், ஐ, 2.0 உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். பிரம்மாண்ட இயக்குநர் என அழைக்கப்படும் ஷங்கர் தற்போது கமல்ஹாசனை வைத்து இந்தியன் 2 மற்றும் ராம்சரணை வைத்த ஒரு படமும் இயக்கி வருகிறார்.

  ஷங்கர் மகள் அதிதி சினிமாவுக்கு அறிமுகம்

  ஷங்கர் மகள் அதிதி சினிமாவுக்கு அறிமுகம்

  இயக்குநராக மட்டுமின்றி தயாரிப்பாளராகவும் வலம் வரும் ஷங்கர், சிறந்த இயக்குநருக்காக ஏராளமான விருதுகளையும் பெற்றுள்ளார். இந்நிலையில் இயக்குநர் ஷங்கர் தனது இளைய மகள் அதிதியை சினிமாவில் அறிமுகப்படுத்துகிறார். விருமன் படத்தில் கார்த்தி ஜோடியாக நடிக்க அவரை ஒப்பந்தம் செய்துள்ளனர்.

  ராஜமவுலியை சந்தித்த அதிதி

  ராஜமவுலியை சந்தித்த அதிதி

  அதிதியின் கதாபாத்திரம் வீரம் கொண்ட கதாபாத்திரமாக இருக்கும் என்றும் அவரது கதாப்பாத்திரத்திற்காக அவர் நடிப்பு பயிற்சிகள் எடுத்து தன்னை தயார்படுத்தி உள்ளார் என்றும் படக்குழுவினர் தெரிவித்தனர். முதல் முறையாக சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமாகவுள்ள அதிதி ஹைதராபாத் சென்று தெலுங்கு முன்னணி இயக்குனர் ராஜமவுலியை சந்தித்து ஆசி பெற்றார்.

  ரஜினியிடம் ஆசி பெற்ற ஷங்கர் மகள்

  ரஜினியிடம் ஆசி பெற்ற ஷங்கர் மகள்

  அந்த போட்டோக்கள் இணையத்தில் வைரலானது. இந்த நிலையில் தான் கதாநாயகியாக அறிமுகமாவதை முன்னிட்டு நடிகர் ரஜினிகாந்தை நேரில் சந்தித்துள்ளார் அதிதி. அப்போது அதிதிக்கு ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்தார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகிறது.

  பிரபலங்களுடன் சந்திப்பு ஏன்?

  பிரபலங்களுடன் சந்திப்பு ஏன்?

  நடிகர் ரஜினிகாந்த் ஷங்கர் இயக்கத்தில் சிவாஜி, எந்திரன், 2.0 ஆகிய படங்களில் நடித்துள்ளார். முதன் முதலாக சினிமாவில் தடம் பதிக்கும் அதிதிக்கு ஷங்கரின் மகள் என்ற லேபிள் மட்டுமே உள்ளது. ஆகையால் இப்போதிலிருந்தே பிரபலங்களை சந்தித்து செய்திகளில் இடம்பெற்று படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே மக்கள் மத்தியிலும் பரிட்சமாகி வருகிறார அதிதி

  மூத்த மகள் மருத்துவர் - திருமணம்

  மூத்த மகள் மருத்துவர் - திருமணம்

  இயக்குநர் ஷங்கர் தனது மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கு கடந்த ஜூன் மாதம் திருமணம் செய்து வைத்தார். ஐஸ்வர்யாவுக்கும் தொழிலதிபர் தாமோதரனின் மகன் ரோஹித்துக்கும் கடந்த ஜூன் மாதம் திருமணம் நடைபெற்றது. ஷங்கரின் மருமகன் ரோஹித் கிரிக்கெட் வீரராக உள்ளார். ஐஸ்வர்யா மருத்துவராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

  English summary
  Why Shankar's daughter meets celebrities in Cinema? Shankar's daughter Aditi meets Actor Rajinikanth. Aditi debut in Cinema with paring Karthy in Viruman film.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X