twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    Exclusive: "நான் யாரையும் மிரட்டல கட்டாயப்படுத்தல.. பிறகு ஏன் ஓடி ஒளியணும்”: ‘காஸ்டிங்’ மோகன்

    யாருக்காகவும் பயந்து தான் ஓடி ஒளிய வேண்டிய அவசியம் இல்லை என காஸ்டிங் மோகன் தெரிவித்துள்ளார்.

    |

    Recommended Video

    காஸ்டிங் இயக்குனர் மோகன் மீது பெண் ஒருவர் ஆதாரங்களுடன் பாலியல் புகார்- வீடியோ

    சென்னை: தான் எந்த தவறும் செய்யாத போது, தலைமறைவாக வாழ வேண்டிய அவசியம் இல்லை என காஸ்டிங் ஒருங்கிணைப்பாளர் மோகன் தெரிவித்துள்ளார்.

    தமிழ் சினிமாவில் நடிகர்களை தேர்வு செய்யும் காஸ்டிங் ஒருங்கிணைப்பாளராக பணியாற்றுபவர் மோகன். இவர் தன்னிடம் வாய்ப்பு கேட்டு வரும் பெண்களை பாலியல் ரீதியாக தவறாக பயன்படுத்தியதுடன், அவர்களை மிரட்டி விபச்சாரத்தில் ஈடுபதித்தியதாகவும் புகார் எழுந்தது.

    இதுகுறித்து ஆடியோ பதிவு ஒன்றை பெண் ஒருவர் நேற்று வெளியிட்டார். மேலும், மோகன் பெண்களுடன் உல்லாசம் அனுபவிக்கும் வீடியோவையும் அவர் வெளியிட்டார். இதனால் நேற்று கோலிவுட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    மன உளைச்சலில் இருக்கிறேன்

    மன உளைச்சலில் இருக்கிறேன்

    இந்நிலையில் இதுகுறித்து நம்மிடம் பேசிய மோகன், " என் வாழ்க்கையில் ஏதேதோ நடந்துவிட்டது. மிகுந்த மன உளைச்சலில் இருக்கிறேன். நான் ஒரு கண்ணியமான பதவியில் இருந்தவன்.

    உயரதிகாரியாக இருந்தவன் நான்

    உயரதிகாரியாக இருந்தவன் நான்

    ஒரு பெரிய மென்பொருள் நிறுவனத்தில் 14 ஆண்டுகளாக உயரதிகாரியாக வேலை பார்த்தவன் நான். சுமார் 400 பேர் கொண்ட பணியாளர் குழுவுக்கு தலைமையேற்று வழி நடத்தியவன். அப்படி இருக்கும் போது நான் ஏன் இந்த மாதிரி நடந்துகொள்ள போகிறேன்.

    வெளிச்சம் போட்டு காட்டிவிட்டனர்

    வெளிச்சம் போட்டு காட்டிவிட்டனர்

    எனது தனிப்பட்ட வாழ்க்கையை படம் பிடித்து வெட்ட வெளிச்சம் போட்டு காட்டிவிட்டனர். இதனால் எனது குடும்பத்தை இழந்து தவிக்கிறேன். அப்பா மட்டும் தான் என்னுடன் இருக்கிறார்.

    நான் எந்த தவறும் செய்யவில்லை

    நான் எந்த தவறும் செய்யவில்லை

    நான் எந்த தவறும் செய்யவில்லை. நான் யாரையும் மிரட்டவும் இல்லை, கட்டாயப்படுத்தவும் இல்லை. அப்படி இருக்கும் போது நான் ஏன் ஓடி ஒளிந்து தலைமறையாக இருக்க வேண்டும். அதனால் தான் எனது மொபைலைக்கூட அணைத்து வைக்காமல் இருக்கிறேன்.

    வழக்கறிஞருடன் ஆலோசனை

    வழக்கறிஞருடன் ஆலோசனை

    இந்த சம்பவம் குறித்து சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப் போகிறேன். அதுகுறித்து வழக்கறிஞருடன் ஆலோசித்து வருகிறேன்", என மோகன் கூறினார்.

    போலீசில் புகார்

    போலீசில் புகார்

    மோகன் மீது சென்னை காவல்துறை ஆணையரிடம் புகார் அளிக்க பாதிக்கப்பட்ட பெண்கள் முடிவு செய்துள்ளனர். இந்த புகார் பதிவு செய்யப்பட்ட பின்னர் மோகன் மீது நடவடிக்கை பாயும் என தெரிகிறது.

    English summary
    Why should I abscond, asks casting Mohan The victims of casting coordinator Mohan are giving police complaint on him today.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X