»   »  முஸ்லீம் அல்லாத நான் ஏன் பாங்கு சப்தம் கேட்டு எழுந்திருக்கணும்?: பாடகர் சர்ச்சை ட்வீட்

முஸ்லீம் அல்லாத நான் ஏன் பாங்கு சப்தம் கேட்டு எழுந்திருக்கணும்?: பாடகர் சர்ச்சை ட்வீட்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: நான் முஸ்லீம் அல்ல ஆனாலும் நான் தினமும் காலை பாங்கு சப்தம் கேட்டு எழுகிறேன். இந்த கட்டாய மத திணிப்பு இந்தியாவில் எப்பொழுது முடியும் என்று கேட்டுள்ளார் பிரபல பாடகர் சோனு நிகம்.

பிரபல பின்னணி பாடகர் சோனு நிகம். இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மராத்தி உள்ளிட்ட பல மொழிகளில் சினிமா பாடல்கள் பாடி வருகிறார். இது தவிர இசை ஆல்பங்களும் வெளியிடுகிறார்.

அவர் இன்று ட்விட்டரில் கூறியுள்ள கருத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பாங்கு

கடவுள் அனைவரையும் ஆசிர்வதிப்பாராக. நான் முஸ்லீம் அல்ல ஆனால் நான் தினமும் காலை பாங்கு சப்தம் கேட்டு எழுகிறேன். இந்த கட்டாய மத திணிப்பு இந்தியாவில் எப்பொழுது முடியும் என ட்வீட்டியுள்ளார் சோனு நிகம்.

முகமது

முகமது இஸ்லாத்தை உருவாக்கியபோது மின்சாரம் இல்லை. எடிசனுக்கு பிறகு இந்த சப்த தொல்லைகள் எனக்கு ஏன்? என ட்விட்டரில் தெரிவித்துள்ளார் சோனு.

மின்சாரம்

ஒரு மதத்தை பின்பற்றாதவர்களை எழுப்பிவிட மின்சாரத்தை பயன்படுத்தும் எந்த கோவில் அல்லது குருத்வாரா மீதும் எனக்கு நம்பிக்கை இல்லை. அப்ப ஏன்..? என கேட்டுள்ளார் சோனு.

சர்ச்சை

சர்ச்சை

பாங்கு குறித்த சோனு நிகாமின் ட்வீட்டை பார்த்த நெட்டிசன்களில் சிலர் அவருக்கு ஆதரவாகவும், சிலர் அவருக்கு எதிராகவும் ட்வீட்டி வருகிறார்கள்.

English summary
A tweet by singer, Sonu Nigam has sent twitterati into a frenzy. "God bless everyone. I am not a Muslim and I have to be woken up by Azaan in the morning. When will this forced religiousness end in India," Sonu Nigam tweeted.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil