என் தம்பி விஜய்யின் 'கத்தி' படத்தை நான் ஏன் எதிர்க்க வேண்டும்?: சீமான் பாய்ச்சல்
சென்னை: என் தம்பி விஜய்யின் கத்தி படத்தை நான் ஏன் எதிர்க்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
விஜய், சம்ந்தா நடிக்கும் கத்தி படத்தின் தயாரிப்பாளரான லைக்கா மொபைல் நிறுவன உரிமையாளர் இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு நெருக்கமானவர் என்ற தகவல் பரவியுள்ளது. இதனால் கத்தி படத்திற்கு பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் இயக்குனரும், நாம் தமிழர் கட்சி தலைவருமான சீமான் முன்னணி தமிழ் நாளிதழுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது,

கத்தி
கத்தி படத்தில் தமிழர்களுக்கு எதிரான காட்சியோ, கருத்துகளோ இருந்தால் அந்த படத்தை எதிர்க்கும் முதல் ஆள் நான் தான். ஆனால் படத்தில் என்ன உள்ளது என்றே தெரியாமல் யாரோ கிளப்பிய சர்ச்சைக்காக அதை எதிர்க்க நான் ஒன்றும் எதுவும் தெரியாத மூர்க்கன் இல்லை.

விஜய்
கத்தி படத்தில் நடித்துள்ள விஜய், அதை இயக்கியுள்ள ஏ.ஆர். முருகதாஸ் ஆகியோர் நம் சொந்த தமிழ் பிள்ளைகள் ஆவர்.

சீமான்
படத்தின் தயாரிப்பு நிறுவனம் குறித்து என்னவெல்லாமோ கூறி அதை ஏன் சீமான் எதிர்க்காமல் உள்ளார் என்று கேட்பவர்கள் அவர்களே போராட வேண்டியது தானே. என்னை உசுப்பிவிட்டு வேடிக்கை பார்க்க நான் என்ன கோவில் காளையா?

தாணு
கலைப்புலி தாணு ஒரு படம் பண்ணுங்கள் என்று என்னிடம் 2 ஆண்டுகளாக கூறி வருகிறார். இந்நிலையில் நான் லைக்கா மொபைல் நிறுவனத்திற்கு பணம் பண்ண காத்திருக்கிறேனா?. எதையாவது கூறினால் சீமான் சீறிக் கொண்டு வருவார் என்று கனவு காண வேண்டாம்.

தம்பிகள்
பிறர் உசுப்பேற்றிவிடுவதற்காக நான் என் சொந்த தம்பிகளை எதிர்க்க முடியுமா? லைக்கா மொபைல் நிறுவனம் தமிழகத்தில் இல்லை. அந்நிறுவனம் செயல்படும் லண்டனில் சென்று எதிர்ப்பை தெரிவிக்க வேண்டியது தானே என்றார் சீமான்.


Click it and Unblock the Notifications











