ஏன், நாங்க தான் நாச்சியாரை எதிர்க்கணுமா?: மாதர் சங்கம் கோபம் #Nachiyaar

By Siva

Recommended Video

எதுக்கெடுத்தாலும் மாதர் சங்கம்தான் கிடைச்சுதா? - நாச்சியார் டீசர் சர்ச்சை- வீடியோ

சென்னை: நாச்சியார் டீஸருக்கு அனைவரும் எதிர்பார்த்தபடி மாதர் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

பாலா இயக்கத்தில் ஜோதிகா, ஜி.வி. பிரகாஷ் நடித்துள்ள நாச்சியார் படத்தின் டீஸர் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. காரணம் ஜோதிகா பேசிய கெட்ட வார்த்தை தான்.

இதை எல்லாம் இந்த மாதர் சங்கத்தினர் கண்டிக்க மாட்டாங்களா என்று ஆளாளுக்கு கேள்வி கேட்டனர். இந்நிலையில் ஜனநாயக மாதர் சங்க துணை தலைவி வாசுகி உமாநாத் தன் ஃபேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது,

டீஸர்

டீஸர்

நாச்சியார் டீசரில் வரும் கெட்ட வார்த்தைக்கு மாதர் சங்கம் என்ன செய்தது என்பது தான் இப்போது டிரெண்டிங் போல! சிம்புவின் கேவலமான பாடலைக் கண்டித்த பின் இந்த கேள்வி எந்த பிரச்சினை நடந்தாலும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தை நோக்கி வீசப்படுகிறது.

ஃபேஸ்புக்

ஃபேஸ்புக்

கேட்பவர்கள் கேள்வியை முக நூலில் பதிவு செய்வதே மிக பெரும் சமூக சேவையாக நினைத்து விடுகிறார்கள். சமூக பணி இவ்வளவு சுலபம் என எண்ணுவதே அவர்களின் அறிவு பற்றாக்குறையைக் காட்டுகிறது. இந்த கேள்வியில் சிம்பு பாடலின் வக்கிரம் உட்பட கடந்த காலத்தில் மாதர் சங்கம் எதிர்த்த பலவற்றை குறித்த பொருமலே வெளிப்படுகிறது.

மாதர் சங்கம்

மாதர் சங்கம்

நியாயமல்ல என்று நினைப்பதை யார் வேண்டுமானாலும் எதிர்க்கலாம். அதை விடுத்து மாதர் சங்கத்தை நக்கல் செய்வது, அறிக்கை விட்டோமே என்றால் ஏன் இயக்கம் நடத்தவில்லை என்பது, இயக்கம் நடத்தினோம் என்றால் மீடியாவில் வரவில்லை, பொய் சொல்கிறீர்கள் என்பது, போட்டோவை போட்டால் ஏன் போலீஸ் புகார் கொடுக்கவில்லை என கேட்பது........ இப்படி பட்டியல் நீள்கிறது. எனவே அநீதியை எதிர்ப்பது என்ற அக்கறை 'மாதர்சங்கம் எங்கே போனது?' என்ற கேள்வியில் வெளிப்படவில்லை. நிற்க....

ஆண்

ஆண்

நாச்சியார் டீசர் பிரச்சினைக்கு வருவோம். தே.. வார்த்தை பெண்ணை இழிவு படுத்தும் வார்த்தை. இதன் பூர்வாங்கத்தை பார்த்தால் ஆணின் கட்டற்ற பாலியல் தேவைக்காக உருவாக்கப்பட்ட ஒரு குலம். அந்த வழக்கம் மண்மூடி போவதற்கு பல போராட்டங்கள் நடந்துள்ளன. எனவே யதார்த்தம் என்கிற பேரில் இதை ஏற்க முடியாது.

காட்சி

காட்சி

குறைந்தபட்சம் முழு படத்தை பார்க்கும் போதாவது எந்த பின்புலத்தில் காட்சி அமைகிறது என்று புரிந்து கொள்ள முடியும். டீசரில் இணைக்க வேண்டிய அவசியம் என்ன? ஜோதிகாவை சொல்ல வைத்து shock ஏற்படுத்தி விளம்பரம் தேடும் ஏற்பாடு தவிர வேறென்ன? யதார்த்தத்தை காட்டுவது மட்டுமல்ல, மாற்றுவதும் சினிமாவின் நோக்கமாக இருக்க வேண்டும் என்று வாசுகி தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X