twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    லண்டனில் மெர்சல் படத்தில் 50 நிமிட காட்சிகள் நீக்கம்: குமுறும் சதீஷ்

    By Siva
    |

    சென்னை: லண்டனில் மெர்சல் படத்தில் பல காட்சிகளை நீக்கிவிட்டதாக நடிகரும், டான்ஸ் மாஸ்டருமான சதீஷ் தெரிவித்துள்ளார்.

    மெர்சல் படத்தில் வரும் ஜி.எஸ்.டி., டிஜிட்டல் இந்தியா காட்சிகளுக்கு பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்தது. அந்த காட்சிகளை நீக்க வேண்டும் என்று அடம் பிடித்தது.

    இந்நிலையில் மெர்சல் குறித்து நடிகரும், டான்ஸ் மாஸ்டருமான சதீஷ் அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளார்.

    லண்டன்

    லண்டனில் மெர்சல் படத்தில் பல இடத்தில் கத்தரி போட்டுள்ளனர். இதை பாஜக செய்திருக்கும் என்று நினைக்கவில்லை. அவ்ளோ சீன் கிடையாதுன்னு தெரியும். ஆனால் ஏன் இத்தனை கட் என்று சதீஷ் ட்வீட்டியுள்ளார்.

    காட்சி

    காட்சி

    மெர்சல் படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க பாஜக அடம்பிடித்தவுடன் அதை நீக்க தயாரிப்பு தரப்பு முதலில் சம்மதம் தெரிவித்தது. பின்னர் எந்த காட்சியையும் நீக்க முடியாது என்று தயாரிப்பாளர் ஹேமா ருக்மணி ட்வீட்டினார்.

    படம்

    படம்

    மெர்சல் படம் இந்தியாவில் 2 மணிநேரம் 50 நிமிடம் ஓடுகிறது. ஆனால் லண்டனில் வெறும் 2 மணிநேரம் தானாம். அந்த அளவுக்கு காட்சிகளை கத்தரி போட்டுவிட்டார்களாம்.

    மகிழ்ச்சி

    மகிழ்ச்சி

    பாஜக கொடுத்த பிரச்சனையால் மெர்சல் இந்தியாவில் மட்டும் அல்ல வெளிநாடுகளிலும் பாக்ஸ் ஆபீஸில் நல்ல வசூலை பார்த்துள்ளது. விரைவில் ரூ. 200 கோடி வசூலை தொட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Dance choreographer cum actor Sathish tweeted, 'Mersal too many cutts in London 😡😡😡😡.i don think Bjp would have done it avalo scene kadaiyathu nu theriyum. But y so many cutts'
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X