நமக்கு எல்லாம் இப்படியே அமையுது.. என்ன செய்ய? நொந்துகொண்ட சுந்தர்.சி!
சென்னை : முறை மாமன், முறை மாப்பிள்ளை, உள்ளத்தை அள்ளித்தா, மேட்டுக்குடி பல வெற்றித் திரைப்படங்களை இயக்கியவர் சுந்தர் சி.
அருணாச்சலம், அன்பே சிவம் போன்ற படங்களையும் இவர் இயக்கியுள்ளார்.
இயக்குனராக வெற்றி பெற்ற சுந்தர் சி, தலைநகரம் படத்தின் மூலம் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க தொடங்கினார்.

நானும் ரவுடி தான்
தலைநகரம் படத்தின் மூலம் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க தொடங்கிய சுந்தர்.சி, சண்டை, ஆயுதம் செய்வோம், அரண்மனை போன்ற பல படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார். தனக்கு கொடுக்கப்படும் கதாபாத்திரம் குறித்து தற்போது மனம் திறந்து பேசியுள்ளார் இயக்குனர், நடிகருமான சுந்தர் சி. இப்போது பட்டாம்பூச்சி என்ற படத்தில் இன்ஸ்பெக்டர் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் சுந்தர் சி.

காமெடி படங்கள்
உள்ளத்தை அள்ளித்தா, முறைமாமன், நாம் இருவர் நமக்கு இருவர், சுயம்வரம், வின்னர், கிரி போன்ற பல காமெடி படங்களை இயக்கியுள்ளார் சுந்தர் சி. இவர் இயக்கிய படங்களுக்கு எப்பொழுதும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இவரது படங்களுக்கு பேமிலி ஆடியன்ஸ் எப்பொழுதுமே அதிகம். அருணாச்சலம், அன்பே சிவம் போன்ற சென்டிமெண்ட் படங்களையும் இயக்கி தனக்கென ஒரு அங்கீகாரம் பதித்துள்ளார். இதுவரை முன்னணி இயக்குனர்களில் ஒருவராக இருந்து வருகிறார் சுந்தர் சி.

தொடக்கத்தில் நடிப்பு
முறைமாமன், அருணாச்சலம் படங்களில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த சுந்தர் சிக்கு தலைநகரம் படத்தின் மூலம் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ஹீரோவாக நடித்து முதல் படமே சூப்பர் ஹிட்டானது குறிப்பிடத்தக்கது. வீராப்பு, சண்டை, ஆயுதம் செய்வோம், பெருமாள் போன்ற பல படங்களில் நடித்துள்ளார். அரண்மனை, அரண்மனை 2, அரண்மனை 3 போன்ற படங்களும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

பட்டாம்பூச்சி எதிர்பார்ப்பு
இவரது நடிப்பில் பட்டாம்பூச்சி திரைப்படம் வெளிவர உள்ளது. இந்த படத்தில் சுந்தர் சி இன்ஸ்பெக்டர் குமரன் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் தனக்கு கொடுக்கப்படும் கதாபாத்திரங்கள் குறித்து மனம் திறந்து பேசி உள்ளார் சுந்தர் சி. எப்பொழுதும் தனக்கு இன்ஸ்பெக்டர் கதாபாத்திரம் அல்லது ரவுடி கதாபாத்திரம் மட்டுமே வழங்கப்படுகிறது என்று கூறியுள்ளார். பல படங்களில் ரவுடியாகவும், பல படங்களில் போலீஸ் அதிகாரியாக மட்டுமே நடித்து வருகிறார் சுந்தர் சி.

நோ நைட் ஒர்க்
பட்டாம்பூச்சி படத்தில் தனக்கு கொடுக்கப்பட்ட போலீஸ் அதிகாரி கதாபாத்திரம் மற்ற படங்களை விட சற்று வித்தியாசமானது என்று கூறியுள்ளார் சுந்தர் சி. பொதுவாகவே நைட் சூட்டிங்கில் நான் நடிப்பது இல்லை. இந்த படத்தில் அதிகமாக இரவில் நடித்திருக்கிறேன் என்று தனது கதாபாத்திரம் குறித்து சுவாரஸ்ய தகவல்களை கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











