மாம்பழத் திருடி படத்தில் சூப்பர் ஸ்டார் அண்ணன் நடிக்க காரணம் இதுதான் - இயக்குநர் ஓபன் டாக்

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் அண்ணன் சத்யநாராயண ராவ் நடிகராக அறிமுகமாகும் படம் மாம்பழத் திருடி. இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா, அண்மையில் சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேப்பில் நடந்தது. இந்த படத்தினை இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட இயக்குநர் ஏ.ஆர்.எம். ரசீம் இயக்கியுள்ளார். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவின்போது பலரும் இயக்குநர் ஏ.ஆர்.எம். ரசீம் இடம் கேட்ட முக்கியமான கேள்வி, இந்த படத்தில் எப்படி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அண்ணனை நடிக்க வைத்தீர்கள் என்பதுதான். இது குறித்து பின்னர் பதில் அளிப்பதாக இயக்குநர் ரசீம் தெரிவித்திருந்தார்.

Sathyanarayana Rao

இந்நிலையில், சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பு நடத்திய படத்தின் இயக்குந ரசீம், " இசை வெளியீட்டின்போதே இயக்குநர் மோகன்.ஜி, இயக்குநர் பேரரசு, இயக்குநர் ஆர்.பி. உதயகுமார், பத்திரிகையாளர்கள் என பலரும் எழுப்பிய கேள்வி, எப்படி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அண்ணனை நடிக்க வைத்தீர்கள்? என்ற கேள்வியைத்தான். குறிப்பாக இயக்குநர் மோகன்.ஜி, நான் சூப்பர் ஸ்டார் அண்ணனை நடிக்க வைக்க பெங்களூருக்குச் சென்றேன். சூப்பர் குடும்பத்திற்கு மிகவும் நெருக்கமானவரை அழைத்துக் கொண்டு போனேன். ஆனால் அவர் எனக்கு நோ சொல்லிவிட்டார். எனது படத்தில் நடிக்க சத்யநாரணயன ராவ் ஒப்புக் கொண்டதற்கு, நான் மிகவும் திறமைசாலி, நான் கதை சொல்லியதைப் பார்த்து அவருக்கு என்மீது நம்பிக்கை ஏற்பட்டு படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார். பல கோடிகளைக் கொடுத்து அவரை நாங்கள் நடிக்க வைத்தோம் எனக் கூறுவது பொருத்தமற்றதாக இருக்கும். உண்மையில் அவர்தான் எங்களுக்குச் செலவு செய்தார்.

Sathyanarayana Rao

ரஜினி அண்ணன்: உண்மையில் அவர் எனது படத்தில் நடிக்க முக்கிய காரணம், கடவுள் எனக்கு கொடுத்த வரம், பரிசு எனக் கூறலாம். எனக்கு முன்னர் பல இயக்குநர்கள் ஆவரிடம் போய் கதை சொல்லி உள்ளார்கள். அவர்களுக்கு எல்லாம் நோ சொன்ன அவர் எனது படத்தில் நடித்துள்ளார். படத்தின் பூஜையின் போது கூட எனது மனைவியிடம் பேசவேண்டும் என அவர் கூறீனார். நான் போன் போட்டு கொடுத்தேன். எனது மனைவியிடம் அவர் பேசுகையில், " இதற்கு முன்னர் பல இயக்குநர்கள் என்னிடம் கதை சொல்லி என்னை நடிக்கை வைக்க முயற்சித்துள்ளார்கள். ஆனால் அவர்களுக்கு எல்லாம் நோ சொல்லி வந்த என்னால், உனது கணவரிடம் அப்படிக் கூற முடியவில்லை. உனது கணவர் என்னிடம் கதை கூறும்போது எனக்குள் ஏதோ வைப்ரேசன் மாதிரி ஏற்பட்டது எனக்கூறினார்.

Sathyanarayana Rao

இறைவன்: நான் அவரிடம், அமெரிக்க அதிபரே வந்து கூறினாலும் நீங்கள் நடிக்க போயிருக்க மாட்டீர்கள். கடவுள் முடிவு செய்து நமது விதியை எழுதிவிட்டார்.இலங்கையில் இருந்து ஒருவர் வருவார். அவரது படத்தில் நீங்கள் நடிக்கவேண்டும் என இறைவன் ஏற்கனவே தீர்மானித்துவிட்டார் எனக் கூறினார். மாம்பழத் திருடி படத்தினைப் பொறுத்தவரையில் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் பெண்கள் மீதான வன்முறைகளைப் பற்றி இந்த படம் பேசுகின்றது.

Sathyanarayana Rao

நல்ல கதை: பெண்களுக்கான பாதுகாப்பு குறித்து சட்டத்தில் கட்டாயம் இருக்கும் என்று நினைக்கின்றேன். ஆனால் நான் ஒரு இயக்குநராக எனது பார்வையை இந்த படத்தில் கூறியுள்ளேன். மகாராஜா படத்தின் கதையும் பெண்கள் மீது நடத்தப்பட்ட வன்முறையை மைய்யப்படுத்தி எடுக்கப்பட்ட படம்தான். ஆனால் மகாராஜா படமும் மாம்பழத்திருடி படத்தின் கதையும் ஒரே கதையென நினைத்தேன். ஆனால் இரண்டும் வேறுவேறு கதை. சூப்பர் ஸ்டாரின் அண்ணன் நடித்துள்ளதால் மட்டும் இந்த படம் ஓடும் என நான் நினைக்கவில்லை. படத்தின் கதை பார்ப்பவர்களை கட்டிப்போடும் அளவிற்கு சிறந்த கதையாக இருப்பதால் இந்த படம் கட்டாயம் வெற்றி பெறும்." என பேசியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X