நான் அனுப்பவில்லை.. கடைசியில கமல் சொன்னத கவனிச்சீங்களா? சுரேஷ் வெளியேறியதற்கு காரணம் அதானா?
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து சுரேஷ் சக்கரவர்த்தி வெளியேறியதற்கான காரணம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து சுரேஷ் சக்கரவர்த்தி நேற்று வெளியேறினார். சிறப்பான போட்டியாளராக எண்டெர்டெய்ன்மென்ட் செய்து வந்த சுரேஷின் வெளியேற்றம் ரசிகர்களை அதிர்ச்சிய செய்துள்ளது.
மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்த சுரேஷ் சக்கரவர்த்தி எப்படி குறைந்த வாக்குகள் பெற்றிருக்க முடியும்? விஜய் டிவி வேண்டுமென்றே சதி செய்கிறது என்று குற்றம்சாட்டி விளாசி வந்தனர்.

இதோ வருகிறேன் சார்
இந்நிலையில் நேற்று அதிகாரப்பூர்வமாய் சுரேஷ் சக்கரவர்த்தியின் எவிக்ஷனை அறிவித்தார் கமல். உடனே, இதோ வந்துவிடுகிறேன் சார் என உற்சாகமாய் எழுந்து சென்று தனது உடைகளை எடுத்து வைத்தார்.

ஏற்கனவே தெரிந்தது போல்
சுரேஷ் சக்கரவர்த்தி எவிக்ட்டான போது ஹவுஸ்மேட்ஸ் முகத்தில் பெரிதாக அதிர்ச்சி எதுவும் இல்லை. அவர்கள் அனைவருமே அதனை முன்கூட்டியே தெரிந்தவர்கள் போன்று இருந்தனர்.

உங்களுக்கே தெரியவரும்
சனம் ஷெட்டி மட்டும் சுரேஷ் பின்னாலேயே வந்து, வெளியே செல்வதற்கான காரணத்தை கேட்டார். அப்போது காரணம் உங்களுக்கே தெரிய வரும் நான் சொல்லக்கூடாது என்றார் சுரேஷ் சக்கரவர்த்தி.

நான் அனுப்பவில்லை
சுரேஷ் சக்கரவர்த்தி சென்ற பிறகு பேசிய கமல், ஒவ்வொரு முடிவும் ஒரு தொடக்கம்தான் என்றார். மேலும் சுரேஷ் சக்கரவர்த்தியை நான் வெளியே அனுப்பவில்லை, நானாக அனுப்பினேன என்று நம்பாதீர்கள்.

விவாதியுங்கள்
அவர் வெளியே செல்வதற்கான காரணம் உள்ளேயும் இருக்கலாம்.. சுரேஷாகவும் இருக்கலாம்.. என்ன என்று விவாதியுங்கள்.. என்றார் கமல். இந்நிலையில் சுரேஷ் சக்கரவர்த்தி பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியதற்கான காரணமாக பல தகவல்கள் பகிரப்பட்டு வருகிறது.

குக்கு வித் கோமாளி சீசன் 2
அதன்படி விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ள குக்கு வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியில் சுரேஷ் சக்கரவர்த்தி பங்கேற்கலாம் என்று கூறப்படுகிறது. சுரேஷ் சக்கரவர்த்தி ஒரு சமையல் கலைஞர் என்பதாலும் சக்ஸ் கிட்சன் என்ற பெயரில் யூடியூப் சேனல் நடத்தி வருவதாலும் அதற்கான வாய்ப்பு அதிகம் என கூறப்படுகிறது.

சரியாக சாப்பிடாமல்
அதற்கு அடுத்தப்படியாக சுரேஷ் சக்கரவர்த்தி இந்த வாரம் முழுவதும் பிக்பாஸ் வீட்டில் தன்னை தானே தனிமை படுத்திக் கொண்டார். சரியாக சாப்பிடாமல் இருந்ததால் தன்னுடைய உடல் நலம் கருதி தன்னை வெளியேற்றுமாறு பிக்பாஸிடம் கேட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

ஓரிரு நாட்களில் தெரியவரும்
எது எப்படியோ.. சுரேஷ் சக்கரவர்த்தி வாக்குகள் அடிப்படையில் செல்லவில்லை என்பது உறுதியாகிவிட்டது. தான் வெளியேறுவதற்கான காரணம் தானகவே தெரியவரும் என கூறியிருக்கிறார் சுரேஷ் சக்கரவர்த்தி ஆக அவர் வெளியேறியதற்கான இன்னும் ஓரிரு நாட்களில் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











