Kanguva: சக்சஸ் மீட் எப்போ.. கங்குவா ஞானவேல் ராஜாவை நோக்கி கேள்வி எழுப்பும் வுட்லாண்ட்ஸ் தியேட்டர் ஓனர்!

சென்னை: கங்குவா படத்தின் தோல்விக்கு பல காரணங்கள் இருந்தாலும், படத்தின் மிகப்பெரிய தோல்விக்கும், கடுமையான நெகடிவ் விமர்சனங்களுக்கும் முக்கிய காரணமே படக்குழுவினர் கொடுத்த அதிகப்படியான ஹைப்தான் என ரசிகர்கள் மத்தியில் இப்போதும் பேச்சுகள் அடிபட்டுக்கொண்டு உள்ளது. படம் ரிலீஸ்க்குப் பின்னர் சூர்யாவின் மனைவி ஜோதிகா, தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் ஆகியோர் ரசிகர்களிடம் சாண்டைக்கு நிற்காத குறையாக கங்குவா படத்தை பாராட்டிக்கொண்டு இருந்தார்கள். இப்படியான நிலையில் கங்குவா படத்தின் தோல்விக்கான காரணங்கள் குறித்து சென்னையில் இருக்கக்கூடிய பிரபலமான தியேட்டர் ஓனர்கள் தெரிவித்துள்ள கருத்து பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

சூர்யா நடிப்பில் கடந்த நவம்பர் 14ஆம் தேதியில் உலகம் முழுவதும் பான் இந்தியா படமாக ரிலீஸ் செய்யப்பட்ட படம், கங்குவா. படத்தினை சிறுத்தை சிவா இயக்கினார். படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசை அமைத்தார். படத்தினை ஸ்டூடியோ க்ரீன் ஞானவேல் ராஜா தயாரித்தார். படம் ரிலீஸ்க்கு முன்னர், படக்குழுவினர், குறிப்பாக படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா படம் குறித்து பேசும்போதெல்லாம் பில்டப் மேல் பில்டப் கொடுத்துக்கொண்டே இருந்தார். படத்தின் அனைவரது ஈடுபாடும் பாராட்டத்தகுந்த வகையில் இருந்தாலும் படத்தின் கதை மற்றும் திரைக்கதை ஒர்க் அவுட் ஆகவில்லை. மேலும் படத்தின் பின்னணி இசை பெரும் விமர்சனத்தைப் பெற்றது.

suriya kanguva kanguva movie flop

ஹைப்: இதனால் படம் பெரும் தோல்விப்படமாக மாறியது. இது தொடர்பாக சென்னை ரோகினி தியேட்டர் ஓனர் பேசுகையில், “ படத்திற்கு தேவையற்ற ஹைப்பை படக்குழுவினர் கொடுத்து படத்தின் மீதான எதிர்பார்ப்பினை ரசிகர்கள் மத்தியில் அதிகரித்தனர். இதனால் படம் பார்க்க வந்த ரசிகர்கள் பெரும் அப்செட் மனநிலைக்குச் சென்றுவிட்டார்கள். குறிப்பாக படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா கொடுத்த பேட்டி ஓவர் ஹைப்பாக இருந்தது.

suriya kanguva kanguva movie flop

பின்னணி இசை: அதேபோல் வெற்றி திரையரங்க உரிமையாளர் பேசும்போது, படத்தின் தோல்விக்கு முக்கிய காரணமே ஹைப்தான். ஒரு சில படங்களுக்கு அந்த ஹைப் உதவவும் செய்கின்றது. ஆனால், கங்குவாவுக்கு அது சுத்தமாக ஒர்க் அவுட் ஆகவில்லை. மேலும் படத்திற்கு இவர்கள் கொடுத்த ஓவர் ஹைப் படத்தின் தோல்விக்கு முக்கிய காரணம். அதேபோல் படத்தின் பின்னணி இசையும் அதிக நெகடிவ் விமர்சனங்களைப் பெற்றுத் தந்தது.

suriya kanguva kanguva movie flop

சக்ஸஸ் மீட்: அதேபோல், சென்னையில் இருக்ககூடிய மற்றொரு முக்கியமான தியேட்டர் என்றால் அது வுட்லாண்ட்ஸ் தியேட்டர். அதன் உரிமையாளர் கங்குவா படம் குறித்து பேசுகையில், " கங்குவா படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசுகையில், பாஸை கையில் வைத்துக் கொள்ளுங்கள், டிசம்பரில் படத்தின் சக்ஸஸ் மீட் நடக்கும் எனக் கூறினார். நான் இப்போதும் பாஸ் வைத்துள்ளேன். ஆனால் நேரு ஸ்டேடியத்தில் சக்சஸ் மீட்டிங்கிற்கு எதுவும், புக்கிங் செய்யப்பட்டுள்ளதாக எனக்கு எந்தவிதமான தகவலும் இதுவரை வரவில்லை" எனக் கூறியுள்ளார். இது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X