சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படம் தாமதமாக காரணம் இதுதான்... தீயாய் பரவும் தகவல்!
சென்னை: சூர்யா நடிப்பில் உருவாகி வரும் எதற்கும் துணிந்தவன் படம் தாமதமாவதற்கான காரணம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. தற்போது டிஜே ஞானவேல் இயக்கத்தில் ஜெய் பீம் படத்தில் நடித்து வருகிறார்.
இதேபோல் பாண்டிராஜ் இயக்கத்தில் எதற்கும் துணிந்தவன் படத்தில் நடித்து வருகிறார் சூர்யா. இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்கிறார்.

முடிந்ததா? இல்லையா?
இந்தப் படத்தின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டுவிட்டதாக கூறப்பட்டது. ஆனாலும் படப்பிடிப்பு முடிந்ததாக படக்குழு இன்னும் அறிக்கவில்லை. இதனால் படப்பிடிப்பு முடிந்ததா? இல்லையா? என ரசிகர்கள் குழப்பமடைந்தனர்.

பிரம்மாண்ட பாடல்
இந்நிலையில் படத்தின் தாமதத்திற்கான காரணம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி எதற்கும் துணிந்தவன் படத்தில் ஒரு ட்ரிக்கி டான்ஸ் காட்சிப் படுத்தப்பட வேண்டியது இன்னமும் மிச்சம் உள்ளது. இந்த பிரம்மாண்ட பாடலில் ஏராளமான நடிகர் நடிகைகள் நடிக்கவுள்ளனர்.

தீயாய் நடக்கும் ரிஹர்சல்
இந்தப் பாடல் மாஸ்ஸான டான்ஸ் ஸ்டெப்புடன் உருவாகிறது. இதற்காக மற்ற நடிகர் நடிகைகள் ரிஹர்சலில் ஈடுபட்டுள்ளனர். யாருடைய நேரமும் வீணாகிவிடக் கூடாது என்பதற்காக முன் கூட்டியே பக்கா பிரிப்ரேஷனுடன் தயாராகி வருகின்றனர். தற்போது படத்தின் ஹீரோயினான பிரியங்கா மோகனும் பாடலுக்கான ரிஹர்சலில் பங்கேற்றுள்ளார்.

பொங்கலுக்கு ரிலீஸ்
இந்தப் படத்தின் பாடல் தீபாவளிக்கு பிறகு காட்சியாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. படப்பிடிப்புக்கான செட் அமைக்கும் பணிகளும் தயாராகி வருகிறது. இதனை தொடர்ந்து படப்பிடிப்பு வரும் நவம்பர் மத்தியில் நிறைவடையும் என தெரிகிறது. இந்தப் படம் வரும் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என தெரிகிறது.

பெண்களுக்கு எதிரான குற்றம்
எதற்கும் துணிந்தவன் படம் சமூக பிரச்சனையை சொல்லும் படமாக உருவாகிறது. பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்களை சொல்லும் படமாக எதற்கும் துணிந்தவன் படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் சூர்யாவின் கதாப்பாத்திரம் வெயிட்டானதாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. எதற்கும் துணிந்தவன் படத்திற்கு டி இமான் இசையமைக்கிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











