சூரரைப் போற்றுக்கு குவிந்த தேசிய விருதுகள்.. ஜெய் பீம் படத்துக்கு ஒன்று கூட இல்லை.. அதுதான் காரணமா?
சென்னை: ஆஸ்கர், கோல்டன் குளோப் மேடைகளிலேயே கிடைத்த அங்கீகாரம் தேசிய விருது விழாவில் ஒட்டுமொத்தமாக தமிழ் படங்கள் ஒதுக்கப்பட்டது போல உள்ளது என ரசிகர்கள் கொந்தளித்துள்ளனர்.
சார்பட்டா பரம்பரை, கர்ணன், ஜெய்பீம் உள்ளிட்ட படங்கள் 2021ம் ஆண்டு வெளியான நிலையில், 69வது தேசிய விருதுகள் அறிவிப்பு தற்போது அறிவிக்கப்பட்டது.

தெலுங்கில் ராஜமெளலி இயக்கிய ஆர்ஆர்ஆர் படத்துக்கு 4 தேசிய விருதுகள் குவிந்த நிலையில், புஷ்பா படத்துக்கு 2 தேசிய விருதுகள் குவிந்தன. ஆனால், தமிழில் கடைசி விவசாயி மற்றும் இரவின் நிழல் படத்தில் மாயா சாயா பாடலை பாடிய ஸ்ரேயா கோஷலுக்கு மட்டும் விருது கிடைத்துள்ளது.
சூரரைப் போற்று படத்துக்கு 5 தேசிய விருதுகள்: சிறந்த நடிகர்- சூர்யா, சிறந்த நடிகை - அபர்ணா பாலமுரளி, திரைக்கதை, பின்னணி இசை - ஜிவி பிரகாஷ், சிறந்த திரைப்படம் - சுதா கொங்கரா என 5 பிரிவுகளில் சூரரைப் போற்று கடந்த ஆண்டு விருதுகளை அள்ளியது.
மேலும், ஒட்டுமொத்தமாக தமிழ் சினிமா கடந்த ஆண்டு 10 தேசிய விருதுகளை அள்ளியது. ஆனால், இந்த ஆண்டு கடைசி விவசாயி படத்துக்கும் இரவின் நிழல் பாடலுக்கு மட்டுமே விருதுகள் கிடைத்துள்ளன.
ஜெய்பீமுக்கு ஒன்று கூட இல்லை: சூரரைப் போற்று திரைப்படத்தை விட பல மடங்கு மக்கள் வலியை திரையில் காட்டிய படமாக ஜெய்பீம் திரைப்படம் இருந்த நிலையில், ஆஸ்கர் விருதுக்கே அந்த படத்தை படக்குழு அனுப்பி இருந்தது. மேலும், ஆஸ்கரின் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலிலேயே ஜெய்பீம் படம் பற்றிய வீடியோவையே வெளியிட்டு இருந்தனர். இருந்தாலும், கடைசியில் பரிந்துரை பட்டியலில் கூட ஜெய்பீம் தேர்வாகவில்லை.

ஆனால், தேசிய விருதுகளை குவிக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த நிலையில், ஒரு விருதும் ஜெய்பீம் திரைப்படம் பெறவில்லை.
அந்த சர்ச்சை தான் காரணமா: நடிகர் சூர்யாவின் மேனேஜர் தங்கதுரை தேசிய விருதுகள் குழுவில் இருந்ததால் தான் சூர்யாவின் படத்துக்கு 5 விருதுகள் குவிந்தது என்கிற சர்ச்சை எழுந்தது தான் தற்போது ஒரு விருது கூட கிடைக்காமல் போனதுக்கு காரணமா என்றும் கேள்விகள் எழுந்துள்ளன.


Click it and Unblock the Notifications











