ஏன் அஜித், விஜய், சூர்யாவை இயக்கவில்லை? - சுசீந்திரனின் வெள்ளந்தி பதில்!
Recommended Video

இயக்குநர் சுசீந்திரன் எளிமையான மனிதர். பெரிய வெற்றிகளைப் பாரத்தும்கூட தன்னை மாற்றிக் கொள்ளாதவர்.
இப்போது அவர் இயக்கியுள்ள படம் நெஞ்சில் துணிவிருந்தால். தீபாவளிக்கு வரவேண்டிய படம், தள்ளிப் போயிருக்கிறது.

நேற்று அவருடனான சந்திப்பின்போது, "பெரும்பாலும் விஷ்ணு, விஷால் என்றுதான் இவருக்கு ஹீரோக்கள் அமைகிறார்கள். ஏன் அஜித், விஜய், சூர்யாவை வைத்து படம் இயக்கவில்லை," என்று கேட்டதற்கு அவர் சொன்ன விளக்கம் இது:
'சூர்யாவிடம் ஒரு கதை சொன்னேன். அந்த கதை அவருக்குப் பிடிக்கவில்லை. விஜய்யிடம் ஒரு கதை சொல்லியிருக்கிறேன். யோசிச்சு சொல்கிறேன் என்று சொல்லியிருக்கார்.
அஜித்திடம் கதை சொல்ல அனுமதி கேட்டிருக்கிறேன். இன்னும் அனுமதி கிடைக்கவில்லை. இதனால்தான் இவர்களை வைத்து இன்னும் படம் எடுக்கவில்லை," என்றார்.
சுசீந்திரனுக்கு மறக்க முடியாத தீபாவளி, ரஜினியின் தளபதி படம் வெளியான தீபாவளிதானாம்.
"நான் ரஜினியின் ரசிகன். அவர் நடித்த 'தளபதி' படத்தை தீபாவளி தினத்தில் பார்க்க வேண்டும் என்று கஷ்டப்பட்டு பார்த்தேன். மறக்க முடியாத தீபாவளி அது," என்றார்.
வெண்ணிலா கபடி குழு படத்தின் 2-ம் பாகம் உருவாக்கும் திட்டம் உள்ளதா என்று கேட்டதற்கு, "எந்த படத்தையும் 2 பாகத்தை எடுக்க எனக்கு உடன்பாடு இல்லை," என்றார்.


Click it and Unblock the Notifications











