»   »  தமிழ் சினிமாவை எடப்பாடி அரசு ஆட்டிப் படைப்பது ஏன் தெரியுமா?

தமிழ் சினிமாவை எடப்பாடி அரசு ஆட்டிப் படைப்பது ஏன் தெரியுமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

கருணாநிதி, ஜெயலலிதா காலங்களில் தமிழ் சினிமா இருந்த நிலையே வேறு. அவர்கள் ஹச்சென்று தும்மினால், கோடம்பாக்கத்திலிருந்து கர்ச்சீப்போடு ஓடுவார்கள். எதிர்த்து ஒரு வாரத்தை.. ம்ஹூம்.

ஆனால் ஒரு ஆளுமை மறைந்துவிட்டது. மற்றொருவரோ பேச்சின்றி முடங்கிக் கிடக்கிறார். ஓபிஎஸ், எடப்பாடி எல்லாருமே ஜெயலலிதாவின் அடிப்பொடிகள்தானே... அவர்கள் என்ன செய்துவிட முடியும் என நினைத்து, அனைத்து நடிகர்களுமே பொது வெளியில் அரசை விமர்சிக்கத் தொடங்கி விட்டனர். பொதுப் பிரச்சினைகளில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Why Tamil Nadu govt take position against Tamil Cinema?

குறிப்பாக கமல் ஹாஸன் தமிழக அரசை ஊழல் மலிந்த அரசு என பகிரங்கமாகவே குற்றம்சாட்டி வருகிறார். விஜய்யும் அவரது அப்பாவும் 6 ஆண்டுகளுக்குப் பிறகு அரசியல் பேச ஆரம்பித்துள்ளனர்.

இதனால் தங்கள் அரசியல் வாழ்க்கைக்கு சிக்கல் வருவதற்கு முன்பு சினிமாகாரர்களுக்கு செக் வைக்க விரும்பிய ஆளுங்கட்சி கேளிக்கை வரியை வைத்து தொழிலை முடக்கப் பார்க்கிறது. இதுதான் கள யதார்த்தம். ஆனால் பலருக்கும் தெரியாத சமாச்சாரம்.

இதிலிருந்து மீண்டு வர முன்னணி நடிகர்கள் குரல் கொடுக்க தொடங்கியுள்ளனர். ரஜினி ரொம்பவே விவரமாக மாநில அரசின் தலையில் டீசன்டாகக் குட்டியுள்ளார். கமலோ, வா நண்பா சேர்ந்து களமிறங்கலாம் என ரஜினியை அழைத்துள்ளார். இது அரசு மட்டத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

ஆனாலும் அத்தனை சுலபத்தில் இறங்கி வர மறுக்கிறது. திரையரங்க உரிமையாளர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து அரசிடம் பேசினார்கள். அந்தப் பேச்சுவார்த்தையின்போது, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கேட்ட கேள்விகள் தியேட்டர்காரர்களை அதிர வைத்துள்ளது.

விரைவில் எடப்பாடிக்கு ஒரு பாராட்டு விழாவை கோடம்பாக்கத்தில் எதிர்ப்பார்க்கலாம்!

English summary
Why Tamil Nadu govt is taken a position against Tamil Cinema? Here is the reason.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil