திரையலகமும், ரசிகர்களும் கொண்டாடும் அஜித்...முக்கிய காரணம் இது தான்

சென்னை : உலகம் முழுவதும் இன்று உழைப்பாளர் தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், கோலிவுட் ரசிகர்கள் அஜித்தின் பிறந்த நாளை கொண்டாடி வருகின்றனர். அதிலும் இந்த ஆண்டு அஜித்தின் 50 வது பிறந்த நாள் என்பதால் ரசிகர்களும், திரையுலகினரும் பெரிய அளவில் கொண்டாடி வருகின்றனர்.

Recommended Video

Thala Ajith MGR -ன் வாரிசா? ரசிகர்களின் சர்ச்சை கிளப்பும் Poster

திரையுலக பிரபலங்கள் பலரும் அஜித்துடன் தாங்கள் எடுத்துக் கொண்ட ஃபோட்டோக்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து, அஜித்திற்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். திரையலகினரும், ரசிகர்களும் அஜித்தை தல என கொண்டாடுவதற்கு முக்கியமான 5 காரணங்கள் என்ன என்பதை இங்கே பார்க்கலாம்.

சொந்த முயற்சியில்

சொந்த முயற்சியில்

எந்த வித சினிமா பின்னணியும் இல்லாமல் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்த அஜித், தனது கடின உழைப்பால் முன்னணி நடிகர் என்ற அந்தஸ்திற்கு உயர்ந்தவர். ஆரம்பத்தில் நண்பர்களின் உதவியால் தனது திறமையை வளர்த்துக் கொண்ட அஜித், பல நடிகர்களுடன் இணைந்து நடித்தார். இது அஜித்திற்கு சினிமாவில் நட்புவட்டம் உருவாக காரணமாக இருந்தது.

சிறப்பு திறமைகள்

சிறப்பு திறமைகள்

நடிப்பை தாண்டி பல துறைகளிலும் அஜித் தனது திறமையை வளர்த்துக் கொண்டார். பல்வேறு தொழில்நுட்பங்களையும் பயின்று வந்தார். ஃபோடோகிராபியில் ஆர்வம் கொண்ட அஜித், கேமிராக்களை கையாளும் திறமையை வளர்த்துக் கொண்டார். சமீபத்தில் துப்பாக்கிச் சுடும் போட்டியில் பல்வேறு பதக்கங்களை பெற்றுள்ளார். கார், பைக் ரேஸ் போன்றவைகள் தான் ரசிகர்களுக்கு அவரிடம் மிக பிடித்தமான ஒன்று.

சக நடிகர்களுக்கு ஒத்துழைப்பு

சக நடிகர்களுக்கு ஒத்துழைப்பு

அஜித்துடன் இணைந்து நடித்த அனைவரும் அவரை பாராட்டி வருகின்றனர். அதற்கு காரணம் உடன் நடிக்கும் நடிகர், நடிகைகளிடம் அஜித் நட்புடன் பழகுவது தான். பல விஷயங்கள் குறித்து அவர்களுடன் அஜித் ஆலோசிப்பார். தனது வாழ்க்கை அனுபவங்களை அவர்களுடன் பகிர்ந்து கொண்டு, அவர்களுக்கு ஊக்கமளித்து ஒத்துழைப்பாக, ஆதரவாக இருப்பார்.

குடும்பத்தின் மீதான காதல்

குடும்பத்தின் மீதான காதல்

ஷாலினியை காதலித்து திருமணம் செய்து கொண்ட அஜித், திருமணத்திற்கு முன்பே, குடும்பத்திற்காக எப்போதும் நேரத்தை செலவிடுவதாக வாக்குறுதி அளித்துள்ளார். அதே போன்று சூட்டிங்கில் எவ்வளவு பிஸியாக இருந்தாலும் தற்போது வரை அந்த வாக்குறுதியை காப்பாற்றி, குடும்பத்திற்காக நேரம் ஒதுக்கி வருகிறார். ஒரு குடும்ப தலைவராக தனது பொறுப்புக்களை சரியாக நிறைவேற்றும் அஜித்தின் இந்த பண்பு பலரையும் கவர்ந்துள்ளது.

பொறுப்பான அப்பா

பொறுப்பான அப்பா

எத்தனை வேலைகள் இருந்தாலும் ஒரு பொறுப்பான அப்பாவாக, தனது மகளின் பள்ளிக்கு நேரில் சென்று அவளின் படிப்பு, மற்ற நடவடிக்கைகள் பற்றி விசாரித்து வருவதை வழக்கமாக கொண்டுள்ளார் அஜித். அதே சமயம் தனது குழந்தைகளின் பாதுகாப்பு கருதி, அவர்களை கேமிராக்களிடம் இருந்து விலக்கியே வைத்துள்ளார் அஜித். என்னை அறிந்தால், விஸ்வாசம் படங்களிலும் தனது பொறுப்பான அப்பா முகத்தை அஜித் வெளிக்காட்டி இருப்பார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X