விஷால் உடனான நட்பு பிரிந்ததற்கு காரணம் இதுதான்.. உண்மையை ஒத்துக்கொண்ட இயக்குனர் மிஷ்கின்

சென்னை : டார்க் ஜானரில் கமர்ஷியல் மசாலாக்கள் இல்லாத படங்களை இயக்க கூடியவர் இயக்குனர் மிஷ்கின்

மற்ற இயக்குனர்களிடம் சற்று வித்தியாசமாக யோசிக்கும் மிஷ்கின் இப்பொழுது பிசாசு 2 இயக்கி வருகிறார்

துப்பறிவாளன் படத்தை தொடர்ந்து துப்பறிவாளன் இரண்டிலும் விஷால் மற்றும் மிஷ்கின் இருவரும் இணைந்து பணியாற்ற இருந்து பின் இருவரும் ஏன் பிரிந்தனர் என்று காரணத்தை இயக்குனர் மிஷ்கின் தற்போது பகிர்ந்துள்ளார்.

டார்க் ஜானரில்

டார்க் ஜானரில்

என்னதான் தொடர்ந்து கமர்ஷியல் மசாலாக்கள் கொண்ட படங்கள் வசூல் சாதனை படைத்து வந்தாலும் டார்க் ஜானரில் கமர்ஷியல் மசாலாக்கள் இல்லாத படங்களுக்கும் ரசிகர்கள் தொடர்ந்து வரவேற்பு கொடுத்து வருகின்றார்கள். மிக முக்கியமாக நல்ல கதையம்சம் கொண்ட எந்த படமாக இருந்தாலும் ரசிகர்கள் தங்களது ஆதரவு கொடுத்து வருகின்றனர் அந்த வகையில் இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான பல படங்களை ரசிகர்கள் கொண்டாடி உள்ளனர். மற்ற இயக்குனர்களிடம் இருந்து சற்று வித்தியாசமாக யோசிக்கும் மிஷ்கின் தனது ஒவ்வொரு படங்களிலும் கைகள் மற்றும் கால்கள் மிக அதிகமாகவே பேசும். பெரும்பான்மையான காட்சிகளில் கை கால்களுக்கு மட்டுமே ஷாட் வைக்கும் வித்தியாசமான மேக்கிங்கில் கைதேர்ந்தவர் இயக்குனர் மிஷ்கின்.

டிடெக்டிவ் ஏஜென்ட்

டிடெக்டிவ் ஏஜென்ட்

ஒவ்வொரு படத்துக்கும் வித்தியாசம் காட்டும் இயக்குனர் மிஷ்கின் டிடெக்டிவ் ஏஜென்ட் கதை களத்தில் இயக்கிய படம் துப்பறிவாளன். விஷால் இந்த படத்தில் மிக வித்தியாசமான டிடெக்டிவ் ஏஜென்டாக நடித்து இருக்க ஆண்ட்ரியா, பிரசன்னா ,வினய் என பலர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். 2017ஆம் ஆண்டு வெளியான இந்தப் படம் மிகப் பெரிய வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது. வசூலிலும் விமர்சன ரீதியாகவும் நல்ல பாராட்டுக்களை பெற்ற துப்பறிவாளன் அதன் தொடர்ச்சியாக இரண்டாவது பாகத்தையும் இயக்குனர் மிஷ்கின் இயக்கி வந்தார்.

ஒருவர் மீது ஒருவர் பழி

ஒருவர் மீது ஒருவர் பழி

கிட்டத்தட்ட பாதி படம் நிறைவடையும் தருவாயில் மிஷ்கினுக்கும் விஷாலுக்கு மேற்பட்ட சில பிரச்சனைகள் காரணமாக அப்படத்திலிருந்து மிஷ்கின் விலகினார். அதன்பின் மிஷ்கின் மற்றும் விஷால் ஒருவர் மீது ஒருவர் ஒருவரை கடுமையாக பேசிக்கொண்டது திரையுலகினர் இடையே மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

எனக்கு சரியாகப் படவில்லை

எனக்கு சரியாகப் படவில்லை

இந்த நிலையில் விஷாலே துப்பரிவாளன் 2 மீதமுள்ள பகுதியை இயக்கி வருகிறார். இந்த நிலையில் விஷாலுடன் ஏற்பட்ட விரிசல் குறித்து மனம் திறந்து பேசிய மிஷ்கின் இப்போதும் விஷால் மீது எனக்கு எந்த ஒரு கோபமும் இல்லை. என்னுடைய தம்பி விஷயத்தில் விஷால் நடந்து கொண்ட சில விஷயங்கள் எனக்கு சரியாகப் படவில்லை அதனால் தான் இருவருக்கும் இடையே இருந்த நட்பு உடைந்ததற்கு காரணம் என கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X