தல, தளபதி ரசிகர்களுக்கே விபூதி அடிக்கப் பார்த்த யோகிபாபு
சென்னை:யோகி பாபு வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து தல, தளபதி ரசிகர்கள் கடுப்பாகியுள்ளனர்.
அஜித், விஜய் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் மோதிக் கொள்வது வழக்கமான ஒன்றாகிவிட்டது. அவர்கள் எப்பொழுது அடித்துக் கொள்வார்கள், எப்பொழுது சேர்வார்கள் என்று யாராலும் கூற முடியாது.

நேர்கொண்ட பார்வை படம் ரிலீஸானபோது அக்கறையுடன் வாழ்த்தினார்கள் தளபதி ரசிகர்கள். இந்நிலையில் அஜித் மற்றும் விஜய்யுடன் சேர்ந்து நடித்த யோகி பாபு ஒரு வேலை செய்துள்ளார். அதாவது சிவப்பு நிற சட்டையில் அஜித் மற்றும் விஜய் இருக்கும் புகைப்படங்களை சேர்ந்து ட்விட்டரில் வெளியிட்டார்.
சூப்பர் என்று கூறி அவர் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த தல, தளபதி ரசிகர்கள் எங்களுக்கே விபூதி அடிக்கப் பார்க்கிறீர்களா என்று கிளம்பிவிட்டார்கள். யோகி பாபு எதை மனதில் வைத்து அந்த புகைப்படத்தை வெளியிட்டாரோ தெரியவில்லை. ஆனால் அந்த புகைப்படத்தால் பிரச்சனை தான் கிளம்பியுள்ளது.
சிவப்பு நிற சட்டையில் அஜித் தான் அழகாக உள்ளார் என்று தல ரசிகர்களும், விஜய் தான் க்யூட்டாக இருக்கிறார் என்று தளபதி ரசிகர்களும் தெரிவித்துள்ளனர். ஏன் யோகிபாபு இந்த தேவையில்லாத வேலை. அந்த அஜித், விஜய் ரசிகர்களின் குணம் பற்றி நன்கு தெரிந்தும் இப்படி பத்த வச்சிட்டீங்களே என்று நெட்டிசன்கள் தெரிவித்துள்ளனர்.
தயாரிப்பாளர் ஐசரி கணேஷின் உறவினரான வருண் ஹீரோவாக நடிக்கும் பப்பி படத்தில் யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது. ஆனால் பப்பி போஸ்டரை வெளியிட்ட வேகத்தில் தல, தளபதி புகைப்படத்தை வெளியிட்டு வம்பில் மாட்டிக் கொண்டார் யோகி பாபு.
யோகி பாபு ரஜினியின் தர்பார், விஜய்யின் பிகில், சிவகார்த்திகேயனின் நம்ம வீட்டுப் பிள்ளை ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார். கோலிவுட்டின் பிசியான நகைச்சுவை நடிகராக உள்ளார் யோகி பாபு என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











