திரிஷாவுக்கு என்ன ஆச்சு.. சமூக வலைதள போஸ்ட்டுகள் எல்லாம் திடீரென டெலிட் ஆகியிருக்கு?
சென்னை: நடிகை திரிஷாவின் சமூக வலைதள போஸ்ட்டுகள் எல்லாம் திடீரென டெலிட் செய்யப்பட்டு இருப்பது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
Recommended Video
கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கும் மேல் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் திரிஷா.
அழகான சிரிப்பாலும், அற்புதமான நடிப்பாலும், ஏகப்பட்ட ரசிகர்களை கட்டிப்போட்டுள்ளார்.

டிக்டாக் தடைக்கு முன்பாக
இந்த லாக்டவுனில் டிக்டாக்கில் இணைந்த நடிகை திரிஷா, டிக்டாக் தடை செய்வதற்கு முன்பாக செம ஆக்டிவாக இருந்தார். ஏகப்பட்ட டான்ஸ் வீடியோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் ஷேர் செய்து வந்தார். ஆனால், டிக்டாக் தடைக்கு பின்னர், சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருப்பதை ரொம்பவே குறைத்துக் கொண்டுள்ளார்.

பதிவுகள் நீக்கம்
2.4 மில்லியன் இன்ஸ்டாகிராம் ரசிகர்களை கொண்டுள்ள நடிகை திரிஷாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து ஏகப்பட்ட பதிவுகள், லாக்டவுன் நேரத்தில் அவர் நடனமாடிய வீடியோக்கள் என அனைத்துமே நீக்கப்பட்டுள்ளன. தற்போது வெறும் 7 பதிவுகள் மட்டுமே இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த திடீர் டெலிட்டுக்கு என்ன பின்னணி என்பது தெரியவில்லை.

மீண்டும் ஜெஸ்ஸி
சமீபத்தில், கெளதம் மேனன் இயக்கத்தில் சிம்புவுடன் இணைந்து வீட்டில் இருந்தபடியே ‘கார்த்திக் டயல் செய்த எண்' குறும்படத்தில் நடித்திருந்தார் திரிஷா. விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் தொடர்ச்சியாக உருவாக்கப்பட்டு இருந்த அந்த குறும்படத்தில் மீண்டும் ஜெஸ்ஸியின் மேஜிக்கை ரசிகர்கள் கண்டு ரசித்தனர்.

வைரலான வதந்தி
அதனை தொடர்ந்து, சிம்புவும் திரிஷாவும் திருமணம் செய்து கொள்ளப் போவதாக வதந்தி ஒன்று வைரலானது. ஆனால், சிம்பு தரப்பும், திரிஷா தரப்பும் அதனை மறுக்கவோ, ஆதரிக்கவோ இல்லை. அதனை அப்படியே கடந்து செல்லட்டும் என விட்டு விட்டனர்.

என்ன ஆச்சு
இந்நிலையில், திரிஷா திடீரென தனது பழைய போஸ்ட்டுகளை எல்லாம் டெலிட் செய்ய என்ன காரணம் என்று ரசிகர்கள் குழம்பி வருகின்றனர். மேலும், அவரது இன்ஸ்டா கணக்கு ஹேக்கிங் செய்யப்பட்டதா என்றும் சந்தேகித்து வருகின்றனர். சமீபத்தில், சன் டிவியில் வெளியான கில்லி படம் தொடர்பாக திரிஷா பதிவிட்டு இருப்பதே அவரது கடைசி இன்ஸ்டா போஸ்ட் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரம்மாண்ட படங்கள்
மோகன்லாலின் ராம், திரிஷா லீடு ரோலில் நடித்து வரும் ராங்கி, திரைக்கு வர தயாராக இருக்கும் பரமபதம் விளையாட்டு மற்றும் மணிரத்னத்தின் பிரம்மாண்டமான வரலாற்று படமான பொன்னியின் செல்வன் என திரிஷாவின் கைவசம் பல படங்கள் உள்ளன. 96 படத்திற்கு பிறகு மீண்டும் செம பிசியாகி உள்ளார்.


Click it and Unblock the Notifications











