Trisha: விஜய்க்கும் த்ரிஷாவுக்கும் என்ன பிரச்சனை?.. லியோ படத்தை கண்டுக்கவே இல்லையே..?

சென்னை: நடிகர் விஜய்யுடன் 14 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஜோடி போட்டதை சந்தோஷமாக ஷேர் செய்திருந்த நடிகை த்ரிஷா லியோ படத்தின் செகண்ட் சிங்கிளான பேட் ஆஸ் பாடல் ரிலீஸ் மற்றும் லியோ ஆடியோ லான்ச் ரத்து என எதையுமே கண்டுக் கொண்டது போல தெரியவில்லையே என விஜய் ரசிகர்களே புலம்பி வருகின்றனர்.

லியோ படத்தை விட்டு விட்டு தனது தி ரோடு, டைகர் ஷெராஃபின் கணபத் பட டீசர் என சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக மற்ற படங்களை புரமோட் செய்து வரும் த்ரிஷா லியோவை கழட்டி விட்டது ஏன் என்கிற கேள்வி திரையுலகையே புரட்டிப் போட்டுள்ளது.

Why Trisha not even retweet that Leo Second Single Badass? is she avoid Leo?

ஒரு பக்கம் லோகேஷ் கனகராஜுக்கும் விஜய்க்கும் மோதல் என்கின்றனர். இன்னொரு பக்கம் த்ரிஷா இப்படி லியோவை கண்டும் காணாமல் இருப்பது என நடிகர் விஜய்யை சுற்றி அப்படி என்னதான் நடக்கிறது என்கிற கேள்வி தான் எழுகிறது.

கடைசியாக போட்ட காட்டமான ட்வீட்: "கீப் காம்.. நீயும் உன் டீமும் யாருன்னு தெரியும்", என நடிகை கடைசியாக காட்டமாக ட்வீட் போட்டதற்கு பிறகு லியோ படம் பற்றி எந்தவொரு அப்டேட் ட்வீட்டையும் போடவில்லை என தெரிகிறது. திரிஷாவின் திருமண வதந்தி பரவிய நிலையில், கடுப்பான நிலையில் தான் த்ரிஷா அமைதியாகி விட்டார் என நினைத்த விஜய் ரசிகர்களுக்கு வரிசையாக அவர் மற்ற படங்களுக்கு மட்டும் புரமோஷன் செய்கிறாரே, லியோவை ஏன் கண்டுக் கொள்ளவில்லை என்கிற கேள்வியை எழுப்பி உள்ளனர்.

Why Trisha not even retweet that Leo Second Single Badass? is she avoid Leo?

கண்பத் டீசரை வெளியிட்ட த்ரிஷா: முன்னதாக தான் நடித்த ரோடு படத்திற்கு புரமோஷனை செய்த நடிகை த்ரிஷா இன்று பாலிவுட் நடிகர் டைகர் ஷெராஃப் நடித்துள்ள கண்பத் படத்தின் தமிழ் டீசரை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ஆனால், இதுவரை லியோ படம் குறித்து ஒரு ட்வீட்டையோ அந்த பேட் ஆஸ் பாடலை ஷேர் செய்யவோ த்ரிஷாவுக்கு நேரமே கிடைக்கவில்லையா? அல்லது என்ன பிரச்சனை என்கிற கேள்வி எழுந்துள்ளது.

என்ன பிரச்சனை?: கடைசியாக நடிகர் விஜய்யின் பிறந்தநாளான ஜூன் 22ம் தேதி அவருடன் காஷ்மீரில் எடுத்த போட்டோவை போட்ட த்ரிஷா அதன் பின்னர் தனக்கும் லியோ படத்துக்கும் எந்தவொரு சம்மந்தமும் இல்லாத மாதிரியே இருந்து வர என்ன காரணம் என சினிமா வட்டாரங்கள் சிஐடி வேலைகளை செய்து வருகின்றனர். நடிகர் விஜய்க்கும் த்ரிஷாவுக்கும் இடையே பிரச்சனையா? அல்லது லோகேஷ் கனகராஜ் த்ரிஷாவுக்கு பெரிய ஸ்கோப் கொடுக்கவில்லையா? அஜித்தின் விடாமுயற்சி படத்தில் இணைந்து விட்டதால் லியோவை கழட்டி விட்டுட்டாரா? என ஏகப்பட்ட கேள்விகள் கிளம்பி உள்ளன. லியோ படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியாவது நடக்குமா? அதில் த்ரிஷா பங்கேற்பாரா? என்றும் நிறைய கேள்விகள் மட்டுமே லியோ படத்தை சுற்றி சுழன்று வருகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X