twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பொன்னியின் செல்வனில் வைரமுத்துவை பயன்படுத்தாதது ஏன்?.. இறுதியாக மணிரத்னம் அளித்த விளக்கம்

    |

    சென்னை: பொன்னியின் செல்வன் படக்குழுவினர் இன்று செய்தியாளர்களை சந்தித்தனர். மணிரத்னம் செய்தியாளர்கள் கேள்விக்கு பதில் அளித்தார்.

    சோழ மன்னன் குறித்த பொன்னியின் படத்தில் வைரமுத்து பாடல் எழுதாதது பெரும் குறையாக ரசிகர்களால் முன் வைக்கப்படுகிறது.

    இதுகுறித்த கேள்விகளை தவிர்த்து வந்த இயக்குநர் மணி ரத்னம் இன்று இறுதியாக பதிலளித்துள்ளார்.

    பொன்னியின் செல்வன்..சிம்பு நடித்தால் நான் விலகிக்கொள்கிறேன் என்று சொன்னேனா?..ஜெயம் ரவி விளக்கம் பொன்னியின் செல்வன்..சிம்பு நடித்தால் நான் விலகிக்கொள்கிறேன் என்று சொன்னேனா?..ஜெயம் ரவி விளக்கம்

    ரோஜாவின் சின்ன சின்ன ஆசை

    ரோஜாவின் சின்ன சின்ன ஆசை

    மணிரத்னம் படத்தில் புகழ்பெற்ற படங்களில் ஒன்று ரோஜா, பம்பாய். இதில் ரோஜா படத்தில்தான் ஏ.ஆர்.ரஹ்மான் அறிமுகமானார். அந்தப்படத்தின் அத்தனை பாடல்களும் சூப்பர் டூப்பர் ஹிட், வித்தியாசமான இசை கவித்துவமான வரிகளால் பெரிதும் ரசிக்கப்பட்டது. 'சின்ன சின்ன ஆசை, சிறகடிக்கும் ஆசை, மீன் பிடித்து மீண்டும் ஆற்றில் விட ஆசை' என்கிற வைரமுத்துவின் வரிகளை முணுமுணுக்காத வாய்களே இல்லை எனலாம். உயிரே உயிரே, குச்சி குச்சி ராக்கமா போன்ற பாடல்கள் அனைத்தும் வைரமுத்து எழுதியது. ஏ.ஆர்.ரஹ்மான், வைரமுத்து, மணிரத்னம் ஜோடி பெரும்புகழ் பெற்றது.

    வைரமுத்துவின் வைர வரிகள்

    வைரமுத்துவின் வைர வரிகள்

    வைரமுத்து கவிஞர் கண்ணதாசனுக்கு பிறகு பண்டைய இலக்கியங்களை தான் எழுதும் பாடல்களில் பயன்படுத்துவதில் வல்லவர். பாடல் வரிகளும் எளிமையாக புதுமையாக எழுதுவதில் வைரமுத்துவுக்கு நிகராக தற்போதைய காலகட்டத்தில் இருந்த வாலியும், முத்துகுமாரும் மறைந்து விட்டனர். தற்போதைய காலக்கட்டத்தில் நடிகர்களே சிலர் பாடல் என ட்யூனுக்கு எதையாவது எழுதுவதும், வார்த்தைகளே புரியாமல் ஆங்கில வார்த்தைகளை போட்டு இசையை போட்டு நிரப்பி வெளியிடுவதும்தான் பாடலாக உள்ளது.

     சோழ மன்னர் வரலாறு வைரமுத்துவின் பாடல் வரிகள் இல்லாமல்

    சோழ மன்னர் வரலாறு வைரமுத்துவின் பாடல் வரிகள் இல்லாமல்

    இந்நிலையில் பொன்னியின் செல்வன் 70 ஆண்டுகளாக பலரும் முயன்று முடியாமல் போக தற்போது வெளியாகும் நிலையில் அது மன்னர் காலம் அதுவும் சோழர் கால படம் என்பதால் வைரமுத்துவின் பாடல் இருக்கும் மீண்டும் ஏ.ஆர்.ரஹ்மான், வைரமுத்து, மணிரத்னம் காம்போ இருக்கும், தமிழில் உள்ள வியத்தகு வரிகளில் பாடல்கள் இருக்கும் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. ஒருபாடல் கூட வைரமுத்து எழுதவில்லை என்பது கூடுதல் ஏமாற்றமாக அமைந்தது.

    வைரமுத்துவை பயன்படுத்தாதற்கு இதுதான் காரணம்

    வைரமுத்துவை பயன்படுத்தாதற்கு இதுதான் காரணம்

    இந்நிலையில் இந்தப்பிரச்சினை அவ்வப்போது பேசப்பட்டு வந்த நிலையில் இதுகுறித்து மணிரத்னத்திடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது இது முக்கியமான கேள்வியா இப்ப கேட்கணுமா? என தவிர்த்து வந்தார். நேற்று செய்தியாளர் சந்திப்பிலும் இதே கேள்விக்கு இதே பதிலை சொல்லி தவிர்த்தார் மணி ரத்னம். இன்று அதே கேள்வி கேட்டபோது மணிரத்னம் தவிர்க்காமல் பதில் சொன்னார். "வைரமுத்துவை பயன்படுத்தாதற்கு காரணம் இளையவர்களுக்கு வாய்ப்பளிப்பதற்காகத்தான். புதுபுதுசா நிறையபேர் தமிழ் சார்ந்து ரிசர்ச் செய்யும் நிறைய ஆளுமைகள் இருக்கிறார்கள் அவர்களை பயன்படுத்தத்தான்" என்று கூறினார்.

    English summary
    Ponniyin Selvan team met the press today. Mani Ratnam answered questions from reporters. Vairamuthu's lack of songwriting in Ponni's film about the Chola king is considered a major flaw by fans. Director Mani Ratnam, who avoided questions about this, has finally answered today.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X