ரஜினியின் பலே ஐடியா.. இதற்குத் தான் நயன் காதலரை சந்தித்தாரா?

இயக்குநரும், நயனின் காதலருமான விக்னேஷ் சிவன் ரஜினியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

Recommended Video

Actor RajiniKanth Movie Update: ரஜினியை மும்பையில் சந்தித்து பேசினார்- வீடியோ

சென்னை: நடிகர் ரஜினியை இயக்குநர் விக்னேஷ் சிவன் சந்தித்தது இதற்குத் தான் என புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

ரஜினி தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் படத்தில் நடித்து வருகிறார். நேற்று முன்தினம் இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் மும்பையில் தொடங்கியது. இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க இருக்கிறார்.

இந்நிலையில், இயக்குநரும், நயனின் காதலருமான விக்னேஷ் சிவன் ரஜினியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படம் தொடர்பாக பல்வேறு யூகங்கள் இணையத்தில் உலா வருகின்றன.

ரஜினியின் புதிய பார்முலா:

ரஜினியின் புதிய பார்முலா:

அதன்படி, சமீபகாலமாக இளம் இயக்குநர்களின் படங்களில் நடிக்க ரஜினி அதிக ஆர்வம் காட்டி வருகிறார். அந்தவரிசையில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அவர் புதிய படமொன்றில் நடிக்க திட்டமிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

தில்லு முல்லு மாதிரி:

தில்லு முல்லு மாதிரி:

அப்படம் தில்லு முல்லு போன்று முழுக்க முழுக்க நகைச்சுவை கதைகளத்தில் உருவாக இருப்பதாகத் தெரிகிறது. முழுநீள காமெடி படத்தில் ரஜினி நடித்து நீண்ட நாட்களாகி விட்டது. இதனால் அப்படி ஒரு படத்தில் நடிக்க அவர் முடிவு செய்திருப்பதாகவும், அது தொடர்பாகத் தான் விக்னேஷ் சிவனை அவர் சந்தித்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தர்பார் பாடல்கள்:

தர்பார் பாடல்கள்:

இது தவிர தர்பார் படத்தில் விக்னேஷ் சிவன் இரண்டு பாடல்களை எழுதுகிறார். அதில் ஒன்று ரொமான்ஸ் பாடல் ஆகும். தர்பார் படத்தில் பாடல் எழுதுவது தொடர்பாகவே அவர் ரஜினியை சந்தித்ததாகவும் கூறப்படுகிறது.

கே.எஸ்.ரவிக்குமாருடன் சந்திப்பு:

கே.எஸ்.ரவிக்குமாருடன் சந்திப்பு:

முன்னதாக ரஜினி மும்பை புறப்படுவதற்கு முன் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமாரைச் சந்தித்தார். எனவே, அவரது இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவும் ரஜினி யோசித்து வருவதாகத் தெரிகிறது. ஏற்கனவே ரஜினி-கே.எஸ்.ரவிக்குமார் கூட்டணியில் வெளிவந்த படங்கள் எல்லாமே மாபெரும் வெற்றி பெற்றவை. அந்த வரிசையில் மீண்டும் நகைச்சுவை தூக்கலாக ஒரு படத்தில் நடிக்க ரஜினி ஆசைப்படுகிறாராம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X