Don't Miss!
- News முன்னோடி தமிழ்நாடு.. நம்ம ஆட்சியில் இது முக்கியம்! பட்டியல் போட்ட முதல்வர்..வியந்து பார்த்த INDIA!
- Technology OnePlus முரட்டு அடி.. AMOLED டிஸ்பிளே.. 32GB மெமரி.. GPS கனெக்டிவிட்டி.. 500mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Lifestyle உங்கள் குழந்தைகள் எடை குறைவாக உள்ளதா? இந்த 5 பொருட்களை உணவாக கொடுங்கள்.. பலன் கிடைக்கும்..!
- Sports இன்னும் 6 போட்டி.. 3ல் அடிவாங்கினால் சோலி முடிஞ்ச்.. பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்?
- Finance ரூ.12,500 முதலீடு செஞ்சா ரூ. 1 கோடி கிடைக்குமா.. செம சான்ஸ்..! சூப்பர் திட்டம்.. மிஸ் பண்ணிடாதீங்க!
- Automobiles இப்பவே 13,000த்த தொட்ருச்சா! இந்தியால இருந்து கொண்டு வந்த காருக்கு பேராதரவு வழங்கும் ஜப்பானியர்கள்!
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
முதல்வன் படத்தில் நடிகர் விஜய் நடிக்க மறுத்தது ஏன்? 21 ஆண்டுகளுக்கு பிறகு ரகசியத்தை பகிர்ந்த ஷங்கர்!
சென்னை: முதல்வன் படத்தில் நடிகர் விஜய் நடிக்க மறுத்தது ஏன் என 21 ஆண்டுகளுக்கு பிறகு இயக்குநர் ஷங்கர் மனம் திறந்து பேசியுள்ளார்.
1999ஆம் ஆண்டு பிரமாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் வெளியான படம் முதல்வன். இந்தப் படத்தில் அர்ஜூன் லீடிங் ரோலில் நடித்திருந்தார்.
அர்ஜூனுக்கு ஜோடியாக நடிகை மனீஷா கொய்ராலா நடித்திருந்தார். மேலும் ரகுவரன், மணிவண்ணன், விஜயக்குமார் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
காப்பி அடித்து மாட்டிக்கொண்ட ஷிவானி.. வெச்சி செய்யும் நெட்டிசன்கள் !
இந்தியில் ரீமேக்
பிளாக் பிஸ்டர் ஹிட்டான இந்தப் படம் பாக்ஸ் ஆபிஸீலும் கோடிக்கணக்கில் குவித்து பட்டையை கிளப்பியது. இந்தப் படத்தின் மூலம்தான் ஒரு மாஸ் டைரக்டரானார் ஷங்கர். இந்தப் படம் இந்தி மொழியிலும் ரீமேக் செய்யப்பட்டது.
21ஆண்டுகளுக்கு பிறகு
இந்நிலையில் இப்படத்தில் நடிகர் விஜய் நடிக்க மறுத்தது ஏன் என 21 ஆண்டுகளுக்குப் பிறகு மனம் திறந்து பேசியுள்ளார் ஷங்கர். முதல்வன் படத்தில் முதலில் லீடிங் ரோலில் நடிக்க ஷங்கரின் சாய்ஸாக இருந்தது நடிகர் விஜய் தானாம்.
அரசியல் த்ரில்லர்
ஆனால் அது வொர்க் அவுட் ஆகாததால் தன்னுடைய ஜென்டில்மேன் ஹீரோவான அர்ஜூனை நடிக்க வைத்துள்ளார் ஷங்கர். அரசியல் த்ரில்லர் படமான முதல்வன் படம் சிறந்த விமர்சனங்களை பெற்று பின்னர் பிளாக் பஸ்டர் ஹிட்டானது.
அசோசியேட் மூலம்
இந்நிலையில் 'முதல்வன்' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பை விஜய் ஏன் நிராகரித்தார் என்பதை இயக்குநர் ஷங்கர் மனம் திறந்து பேசியுள்ளார். 'முதல்வன்' படத்திற்காக விஜயை நடிக்க ஷங்கர் தனது குருவும் விஜய்யின் தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகரை தன்னுடைய அசோசியேட் மூலம் அணுகியுள்ளார் ஷங்கர்.
கவலைப்பட்ட அப்பா
ஆனால் இருவருக்கும் இடையிலான பேச்சுவார்த்தை சரியாக நடக்கவில்லை. பின்னர் எஸ்.ஏ. சந்திரசேகர் தனது மகன் சிறந்த வாய்ப்பை இழந்ததைப் பற்றி கவலைப்பட்டார், ஷங்கரிடம் அவருடன் நேராக விவாதித்திருக்க வேண்டும் என்று கூறினாராம்.
மிஸ் பண்ணிவிட்டாரே
இதனை தொடர்ந்து இந்தியில் மெகா ஹிட்டான 3 இடியட்ஸ் படத்தின் ரீமேக்கான நண்பன் படத்தில் விஜய் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. முதல்வன் படத்தில் நடிகர் விஜய் நடிக்கும் வாய்ப்பை இழந்ததை அறிந்த அவரது ரசிகர்கள் இப்படி ஒரு வாய்ப்பை மிஸ் பண்ணிவிட்டாரே என உச்சு கொட்டி வருகின்றனர்.