டியர் விஜய் சேதுபதி..இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம்.. சைரா நரசிம்ம ரெட்டிக்கு குட்டு மேல குட்டு!

சைரா நரசிம்ம ரெட்டி படத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடித்த காட்சிகள் பெரிய அளவில் விமர்சனத்திற்கு உள்ளாகி உள்ளது.

Recommended Video

SYERAA MOVIE FDFS | PUBLIC RESPONSE | VIJAY SETHUPATHY | CHIRANJEEVI |FILMIBEAT TAMIL

சென்னை: சைரா நரசிம்ம ரெட்டி படத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடித்த காட்சிகள் பெரிய அளவில் விமர்சனத்திற்கு உள்ளாகி உள்ளது.

எல்லோரும் எதிர்பார்த்த சைரா நரசிம்ம ரெட்டி இன்று வெளியானது. பாகுபலி படத்திற்கு பிறகு தெலுங்கு பட உலகிலிருந்து பெரிய பட்ஜெட் படமாக இது உருவாகி உள்ளது.

சிரஞ்சீவி ஹீரோவாக இந்த படத்தில் நடித்துள்ளார். நடிகர் விஜய் சேதுபதி, அமிதாப் பச்சன், நயன்தாரா, தமன்னா ஆகிய பல நடிகர்கள் இதில் நடித்துள்ளனர்.

மோசம்

மோசம்

இந்த படம் காலையில் இருந்து மோசமான ரிவ்யூக்களை பெற்று வருகிறது. முக்கியமாக படத்தில் சிரஞ்சீவி பாத்திரம் மோசமாக இருக்கிறது. அவருக்கு போராளி பாத்திரம் சரியாக செட்டாகவில்லை என்று பலர் விமர்சனம் வைத்து இருக்கிறார்கள்.

சண்டை

சண்டை

சண்டை காட்சிகளில் அவர் பார்க்க காமெடியாக இருக்கிறார். பாகுபலி படம் போலவே சண்டை வைக்க வேண்டும் என்று முயன்று இருக்கிறார்கள். ஆனால் அந்த காட்சிகள் பெரிதாக வொர்க் அவுட் ஆகவில்லை.

இரண்டு பேர்

இரண்டு பேர்

அதேபோல் படத்தில் அவர் இரண்டு ஹீரோயின்கள் உடன் நடிப்பதும் பெரிதாக ஏற்றுக்கொள்ளும்படி இல்லை. முக்கியமாக தெலுங்கு பேசி போராளியாக அமிதாப் நடித்து இருப்பதும் உறுத்தலாக இருக்கிறது. அவரின் பாத்திர அமைப்பே புதிராக உள்ளது.

ஏன் இருக்கிறார்

ஏன் இருக்கிறார்

புலி படத்தை லோ பட்ஜெட்டில் எடுத்தது போல இருக்கிறது. அமிதாப் ஏன் படத்தில் இருக்கிறார் என்று தெரியவில்லை என்று மோசமாக ரிவ்யூக்கள் வெளியாகி வருகிறது. இதுமட்டுமன்றி விஜய் சேதுபதி குறித்தும் மோசமான ரிவ்யூக்கள் வெளியாகி வருகிறது. அவரின் பாத்திரத்தை படத்தில் டம்மி செய்துவிட்டனர்.

எப்படி ஒப்புக்கொண்டார்

எப்படி ஒப்புக்கொண்டார்

அவர் இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொள்ளாமல் இருந்திருக்கலாம். தயிர் சாதத்தில் இருக்கும் கடுகு போல அவர்
இருப்பதே தெரியவில்லை. அவர் இதில் தேவையில்லாமல் நடித்துள்ளார். அவருக்கு சரியான காட்சிகள், வசனங்கள் வழங்கப்படவில்லை. அவர் வரும் சண்டை காட்சிகள் மட்டும் உணர்ச்சிகரமாக இருக்கிறது.

மோசம் பாஸ்

மோசம் பாஸ்

ஆனால் அவருக்கு படத்தில் பெரிதாக வாய்ப்பு வழங்கப்படவில்லை. அதேபோல் அவர் வரும் நேரமும் குறைவாக இருக்கிறது. தமிழ் ஆடியன்ஸை கவர இப்படி செய்துள்ளனர். ஆனால் அது பெரிதாக பலன் அளிக்க வாய்ப்பில்லை என்று நெகட்டிவ் ரிவ்யூக்கள் வெளியாகி வருகிறது .

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X