அச்சச்சோ.. பிக்பாஸ் தள்ளிப்போறதுக்கான காரணம் இதானாம்.. இது என்னடா விஜய் டிவிக்கு வந்த சோதனை!

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்குவதில் ஏன் தாமதம் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

Recommended Video

Bigg Boss 4 Tamil காக 4 போட்டியாளர்களை மட்டும் தனிமைப்படுத்துஉள்ளனர்

பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்த பேச்சுதான் தற்போது சமூக வலைதளங்களிலும் ஊடகங்களிலும் ஹாட் டாப்பிக்காக உள்ளது.

100 நாட்கள் நடைபெறும் பிக்பாஸ் நிகழ்ச்சி பார்வையாளர்களுக்கு செம என்டெர்டெயின்மென்ட்.

அலம்பல்கள்

அலம்பல்கள்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கும் பிரபலங்கள் பண்ணும் களேபரங்களும் அலம்பல்களும் ஒவ்வொன்றும் ஒரு ரகமாய் இருக்கும். பிக்பாஸ் நிகழ்ச்சி ஒரு புறம் இருக்க அதன் புரமோவே எதிர்பார்ப்பை எகிற வைக்கும். இந்த ஆண்டுக்கான பிக்பாஸ் நிகழ்ச்சி கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

தள்ளிப்போகும் பிக்பாஸ்

தள்ளிப்போகும் பிக்பாஸ்

இந்நிலையில் ஒரு வழியாய் இந்த ஆண்டு பிக்பாஸ் நிகழ்ச்சிக்கான புரமோக்கள் வெளியாகி நிச்சயம் நிகழ்ச்சி தொடங்கி விடும் என்ற உறுதியை கொடுத்துள்ளது. முதலில் செப்டம்பர் 27ஆம் தேதி நிகழ்ச்சி தொடங்கும் என்று கூறப்பட்டது. ஆனால் போட்டியாளர்கள் தேர்வு, குவாரண்டைன் போன்ற காரணங்களால் தள்ளிப்போவதாக தகவல் வெளியானது.

ஸ்பான்சர் கிடைக்கவில்லை

ஸ்பான்சர் கிடைக்கவில்லை

தற்போது அக்டோபர் 4 ஆம் தேதி அல்லது அக்டோபர் பத்தாம் தேதிக்கு பிறகு நிகழ்ச்சி தொடங்கும் என கூறப்படுகிறது. இந்நிலையில் நிகழ்ச்சி மேலும் மேலும் தள்ளிப்போவதற்கான காரணம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு விளம்பரதாரர்கள் கிடைக்கவில்லை கூறப்படுகிறது.

வெறும் 10 நாட்கள்

வெறும் 10 நாட்கள்

இனிப்பு நிறுவனம் ஒன்று வெறும் 10 நாட்களுக்கு மட்டுமே ஸ்பான்சர் வழங்க ஒப்பந்தம் செய்துள்ளதாக கூறப்படுகிறது. ஸ்பான்சர் இல்லாமல் வெறும் எண்டமோல் நிறுவனம் மட்டும் கொடுக்கும் ஃபண்டை வைத்து மட்டும் நிகழ்ச்சியை தள்ள முடியாது என்பதால் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

நியாயம் கிடைக்காது

நியாயம் கிடைக்காது

அதேபோல் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க பிரபலங்களும் தயக்கம் காட்டி வருகிறார்களாம். அதற்கு காரணம் அந்த சேனலில் சம்பள பிரச்சனை ஏற்படும் என்றும் தங்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் நியாயம் கிடைக்காது என்றும் அஞ்சுகிறார்களாம் பிரபலங்கள்.

மதுமிதா மீது புகார்

மதுமிதா மீது புகார்

கடந்த சீசனில் நடிகர் சரணவனை அழைத்து வந்த நிகழ்ச்சி குழு மன்னிப்பு கேட்ட பிறகும் கூட அவரது கண்களை கட்டி வெளியே அழைத்து சென்று அவமானப்படுத்தியது. அதோடு அவருக்கு சொன்னப்படி சம்பளம் தரவில்லை என்றும் கூறப்பட்டது. இதேபோல் மதுமிதா தற்கொலை முயற்சி செய்தபோது அதற்கு காரணமானவர்களை கண்டிக்காமல் விஜய் டிவி நிர்வாகம் அவர் மீது புகார் அளித்தது.

கேரியருக்கு வேட்டு

கேரியருக்கு வேட்டு

மேலும் நடிகை மீரா மிதுனுக்கு சம்பள பாக்கி வைத்தது போன்ற பிரச்சனைகளை எழுப்புகிறார்களாம் பிரபலங்கள். நிகழ்ச்சியில் பங்கேற்கும் வரை ஒரு மாதிரியாகவும் பங்கேற்ற பிறகு பெயரையும் கெடுத்து மொத்தத்துக்கும் வேட்டு வைப்பதாகவும் பிரபலங்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

இதோ அதோ என இழுப்பு

இதோ அதோ என இழுப்பு

இதனால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க பல பிரபலங்கள் தயக்கம் காட்டுகிறார்களாம். ஒரு பக்கம் ஸ்பான்சர் கிடைக்காமலும் மறுப்பக்கம் போட்டியாளர்கள் கிடைக்காமலும் அல்லாடி வருகிறதாம் நிகழ்ச்சி குழு. இதனால் தான் பிக்பாஸ் நிகழ்ச்சி இதோ அதோ என இழுத்தடிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X