»   »  விக்ரம்- நயன்தாரா படம்... தாணு போய்.. அய்ங்கரன் விலகி... புலி டீம் வந்த கதை!

விக்ரம்- நயன்தாரா படம்... தாணு போய்.. அய்ங்கரன் விலகி... புலி டீம் வந்த கதை!

Posted By:
Subscribe to Oneindia Tamil

'விக்ரமின் அடுத்தப் படத்துக்கு ஒரு வழியா தயாரிப்பாளர் கிடைச்சுட்டார்' என்று சொல்லும் அளவுக்கு, அவரைக் கொண்டுபோய்விட்டது அவரது 10 எண்றதுக்குள்ள ரிசல்ட்!

10 எண்றதுக்குள்ள படம் தயாரிப்பிலிருந்தபோது, அந்தப் படம குறித்து வந்த பில்ட் அப் செய்திகளைப் பார்த்து, "தம்பி விக்ரமின் அடுத்த படத்தை நானே தயாரிக்கிறேன்" என்று கூறி வந்தார் தாணு. படத்தை இயக்கவிருந்த ஆனந்த் சங்கரை அறிமுகப்படுத்தியவர் தாணுதான் என்பதால் இது சரியான கூட்டணியாக பார்க்கப்பட்டது.

Why Vikram - Nayan's project goes to Puli producers?

இந்த நிலையில் 'தாணு வேண்டாம்... அய்ங்கரனுக்கு பண்ணலாம்' என ஆனந்த் சங்கரைக் கூட்டிப் போய்விட்டார் விக்ரம். அந்த நேரம் பார்த்து 10 எண்றதுக்குள்ள வந்தது. படம் படுதோல்வியடை, அய்ங்கரன் மெதுவாகப் பம்மியது. கடைசியில் இப்போதுள்ள சூழலில் இந்தப் படத்தைச் செய்ய எங்களால் முடியாது என விலகிக் கொள்ள, அதிர்ந்து போனார்கள் விக்ரமும் ஆனந்த் சங்கரும்.

கடைசியில் அவர்களுக்குக் கை கொடுத்தது புலி தயாரிப்பாளர்களான ஷிபு தமீன்ஸ் - பிடி செல்வகுமாரின் எஸ்கேடி பிலிம்ஸ் நிறுவனம்.

படத்தின் பட்ஜெட்டில் கொஞ்சம் குறைத்து, இந்தப் படத்தைத் தயாரிக்க ஒப்புக் கொண்டுள்ளது இந்த நிறுவனம்.

முதல் முறையாக இந்தப் படத்தில் விக்ரமுடன் ஜோடி சேர்கிறார் நயன்தாரா என்பது ஏற்கெனவே தெரிந்த செய்திதானே!

English summary
Why Vikram - Nayanthara's Anand Shankar directed movie goes to Puli producers? Here is the story!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil