பாலாவின் அவன் இவன்.. இன்னும் தீராத அந்தப் பிரச்னை.. ஷூட்டிங்கிற்கு திடீர் லீவு போட்ட விஷால்!

By

சென்னை: பாலாவின் அவன் இவன் படத்தில் நடித்தபோது ஏற்பட்ட பிரச்னையால் நடிகர் விஷால் இப்போதும் தவித்து வருகிறார்.

சக்ரா படத்தில் நடித்து முடித்திருக்கிறார் நடிகர் விஷால். இதை எம்.எஸ். ஆனந்தன் இயக்கி இருக்கிறார்.

இதில் அவர் ராணுவ அதிகாரியாக நடிக்கிறார். ஸ்ரத்தா ஶ்ரீநாத், ரெஜினா காஸன்ட்ரா முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர்.

தீபாவளி ரிலீஸ்

தீபாவளி ரிலீஸ்

கொரோனா லாக்டவுன் காரணமாக இதன் ஷூட்டிங் ரத்து செய்யப்பட்டிருந்தன. தளர்வுகள் அறிவிக்கப்பட்டதை அடுத்து படப்பிடிப்பு மீண்டும் தொடங்கி முடிவடைந்துள்ளது. இதை ஓடிடியில் வெளியிட உள்ளனர். தீபாவளிக்கு படம் ரிலீஸ் ஆகும் என்று விஷால், ஏற்கனவே கூறியிருந்தார்.

ஆனந்த் ஷங்கர்

ஆனந்த் ஷங்கர்

இது தொடர்பாக சில ஓடிடி தளங்களில் அவர் பேசி வருகிறார். இந்தப் படத்தை அடுத்து ஆனந்த் ஷங்கர் இயக்கும் படத்தில் நடிக்கிறார் விஷால். இவர், விக்ரம் பிரபு நடித்த அரிமாநம்பி, விக்ரம், நயன்தாரா நடித்த இருமுருகன், விஜய் தேவரகொண்டா நடித்த நோட்டா படங்களை இயக்கியவர்.

வில்லன் ஆர்யா

வில்லன் ஆர்யா

இந்தப் படத்தில், விஷாலின் நெருங்கிய நண்பர் ஆர்யா, வில்லனாக நடிக்கிறார். விஷால் ஜோடியாக மிருணாளினி ரவி நடிக்கிறார். தெலுங்கில் சில படங்களில் நடித்துள்ள மிருணாளினி, தமிழில் எம்.ஜி.ஆர் மகன், கோப்ரா உட்பட சில படங்களில் நடித்து வருகிறார்.

திடீர் பிரேக்

திடீர் பிரேக்

ஆனந்த் ஷங்கர் இயக்கும் படத்தின் ஷூட்டிங், ஐதராபாத்தில் தொடங்கி நடந்து வருகிறது. இதில் பங்கேற்க சென்ற விஷால், படப்பிடிப்பில் 3 நாட்களாக கலந்து கொள்ளவில்லை என்று கூறப்பட்டது. அயோக்யா படப்பிடிப்பிலும் அவர் இப்படி திடீரென இரண்டு மூன்று நாட்கள் திடீர் பிரேக் எடுத்துக் கொண்டதாகக் கூறப்பட்டது.

அவன் இவன் பிரச்னை

அவன் இவன் பிரச்னை

இதுபற்றி விஷால் தரப்பில் விசாரித்தபோது, அது, பாலா படத்தில் விஷால் நடித்தபோது ஏற்பட்ட பிரச்னை என்றனர். பாலா இயக்கிய அவன் இவன் படத்தில் விஷால், ஆர்யா நடித்தனர். அந்தப் படத்தில் விஷால், மாறுகண் தோற்றமுடையவராக நடித்திருந்தார். அதற்காக ஒரு கண்ணை எங்கோ பார்ப்பது போல மாற்றி நடித்திருந்தார்.

கண்களுக்கு சிகிச்சை

கண்களுக்கு சிகிச்சை

இந்தப் படம் எப்போதோ முடிந்துவிட்டாலும் அந்த கேரக்டருக்காக அவர் ரிஸ்க் எடுத்து நடித்த பிரச்னை, இப்போதும் தொடர்கிறது. அந்த கண்களுக்குத் தொடர்ந்து சிகிச்சை எடுத்து வருகிறார். இருந்தும் வலி விடவில்லையாம். அதனால் அவ்வப்போது சில நாட்கள் அவர் கடும் அவஸ்தையை சந்திப்பார் என்கிறார்கள்.

அவர் தரப்பில்

அவர் தரப்பில்

அந்த நேரத்தில் எதிலும் கவனம் செலுத்த முடியாதாம். இதனால்தான் அவர் ஷூட்டிங்கில் மூன்று நாட்கள் பங்கேற்கவில்லை என்றும் பிறகு அவர் தொடர்ந்து பங்கேற்று வருகிறார் என்றும் அவர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்தப் படத்தை அடுத்து, துப்பறிவாளன் 2 படத்தை விஷால் இயக்கி நடிக்க இருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X