twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மெர்சல் பிரச்சினை... பேச வேண்டிய விஷால் மௌனம் காப்பது ஏன்?

    By Shankar
    |

    பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி வரி, பொது மருத்துவம் பற்றி பேசும் மெர்சல் திரைப்படத்தில் அக்காட்சிகளை நீக்க வேண்டும் என்று பற்ற வைத்தவர் பாரதிய ஜனதா கட்சி தமிழக தலைவர் தமிழிசை செளந்தர்ராஜன். அது அனுமார் வால் கணக்காக இப்போது பாஜகவையே எரிக்க ஆரம்பித்திருக்கிறது.

    மெர்சல் காட்சிகளுக்காக தமிழிசை அபத்தமான சில கேள்விகளை முன்வைத்தார். அதற்கு ஒருபடி மேல் மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் அரசை விமர்ச்சிக்க இவர்களுக்கு யார் தைரியம் கொடுத்தது என்று காட்டமாக கேட்க மெர்சல் பிரச்சினை தமிழக அரசியல் களத்தில் - ஊடகங்களில் பிரதான பேசு பொருளானது.

    Why Vishal keeps silence in Mersal issue?

    இவர்களின் விமர்சனங்களுக்கு உடனடியாக பதில் கூறி இருக்க வேண்டிய, இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் சங்கம் இரண்டும் மெளனம் காக்கின்றன.

    சினிமா கலாச்சாரம், ரசிகர் மன்றங்களை மிகக் கடுமையாக எதிர்த்து வரும் பாமாக தலைவர் அன்புமணி ராமதாஸ்கூட, 'விமர்சனங்களை ஏற்றுக் கொள்ள வேண்டும் - மிரட்டும் தொனியில் அரசு அதிகாரத்தை பயன்படுத்தக் கூடாது' என்று மெர்சல் படத்துக்கு ஆதராவாக குரல் கொடுத்தார்.

    அரசியல்வாதிகள் அனைவரும் பாரதிய ஜனதாவுக்கு எதிராக பேசவும், அறிக்கை வெளியிடவும் மெர்சல் பட பிரச்சினையை பயன்படுத்திக் கொண்டார்களே தவிர ஆக்கபூர்வமான விவாதத்தை, விமர்சனங்களை முன்வைக்கவில்லை.

    மெர்சல் பட விவகாரத்தில் சம்மன் இல்லாமல் எல்லோரும் ஆஜராகி கொண்டிருக்கும் போது தமிழ் சினிமாவின் தலைமையான தயாரிப்பபாளர்கள் சங்க தலைவர் விஷால் எந்த கருத்தும் கூறாமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Why Vishal keeps silence in Mersal issue? Here is an analysis
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X