நடிகர் சங்க கட்டடம்... ஹைதராபாத்... விஷால் திருமணம் பாதியில் நின்றதற்கு இதுதான் காரணமா?

நடிகர் விஷால் - அனிஷா திருமணம் நின்று போனதற்கு நடிகர் சங்கக் கட்டட விவகாரம் தான் காரணம் என கூறப்படுகிறது.

சென்னை: விஷால் - அனிஷா திருமணம் நின்று போனதற்கான காரணங்கள் குறித்து தெரிய வந்துள்ளது.

கோடம்பாக்கத்தின் தற்போதைய டாபிக் ஆப் தி டவுனே விஷால் திருமணம் நின்று போனது தான். திருமணத்திற்கு இன்னும் இரண்டு மாதமே உள்ள நிலையில், திடீரென இருதரப்பிலும் திருமண வேலைகளை நிறுத்தியது மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

அதோடு, அனிஷா தனது சமூகவலைதளப் பக்கத்தில் இருந்து நிச்சயதார்த்த புகைப்படங்களை நீக்கியதும் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது. அப்போது தான் விஷால் - அனிஷா திருமணம் நிறுத்தப்பட்டது ஏறக்குறைய உண்மையானது.

அதிக எதிர்பார்ப்பு

அதிக எதிர்பார்ப்பு

தமிழ் ஹீரோக்களில் அதிகம் எதிர்பார்க்கப்பட்டது விஷால், ஆர்யா மற்றும் சிம்புவின் திருமணம் தான். இதில், ஆர்யா, நடிகை சாயிஷாவைத் திருமணம் செய்து கொண்டு குடும்பஸ்தன் ஆகி விட்டார். சிம்புவிற்கு இன்னமும் பெண் தேடிக் கொண்டு தான் இருக்கிறார்கள்.

விஷால் காதல்

விஷால் காதல்

ஆனால், விஷால் கதை அப்படியில்லை. முதலில் அவரும், வரலட்சுமி சரத்குமாரும் காதலிப்பதாகச் சொல்லப்பட்டது. ஆனால், திடீரென தெலுங்கு நடிகையும், தொழிலதிபரின் மகளுமான அனிஷாவைக் காதலிப்பதாக அறிவித்தார் விஷால். இருவரும் சேர்ந்திருக்கும் புகைப்படங்களையும் சமூகவலைதளத்தில் வெளியிட்டனர்.

திருமண நிச்சயதார்த்தம்

திருமண நிச்சயதார்த்தம்

அதன் தொடர்ச்சியாக கடந்த மார்ச் மாதம் விஷாலுக்கும், அனிஷாவுக்கும் ஹைதராபாத்தில் ஆடம்பரமாக திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. அப்போது இருவரும் மோதிரம் மாற்றிக் கொண்டனர். திருமணம் அக்டோபர் மாதம் நடக்கும் என்று நிச்சயிக்கப்பட்டது.

விஷால் உறுதி

விஷால் உறுதி

ஆரம்பத்தில் இருந்தே நடிகர் சங்க புதுக் கட்டடத்தில் தான் தனது திருமணம் நடக்கும் என உறுதியாகக் கூறி வருகிறார் நடிகர் விஷால். ஆனால், இன்னமும் கட்டடம் கட்டி முடிக்கப்பட்ட பாடில்லை. இதனால், அந்தக் கட்டிடத்தில் திருமணத்தை நடத்த ஏற்கனவே விஷாலின் அம்மா மறுத்து வருவதாக ஒரு தகவல் வெளியானது.

ஹைதராபாத்தில் திருமணம்

ஹைதராபாத்தில் திருமணம்

எனவே, அனிஷாவின் பெற்றோர் திருமணத்தை ஹைதராபாத்தில் நடத்த ஆசைப்படுவதாகவும் கூறப்பட்டது. ஆனால், அதற்கு விஷால் மறுப்பு கூறுவதாகவும், நடிகர் சங்க கட்டிடத்திலேயே செட் போட்டு திருமணத்தை நடத்த முயற்சித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாயின. இந்தச் சூழ்நிலையில் தான் அதிரடியாக திருமண வேலைகள் நிறுத்தப்பட்டுள்ளன.

புகைப்படங்கள் நீக்கம்

புகைப்படங்கள் நீக்கம்

அனிஷாவும் தனது நிச்சயதார்த்த புகைப்படத்தை சமூகவலைதளப் பக்கத்தில் இருந்து நீக்கி விட்டார். இதனால், விஷால் அனிஷா திருமணம் நிறுத்தப்பட்டு விட்டதாக செய்திகள் வெளியாயின. ஆனால் இது தொடர்பாக அதிகாரப்பூர்வமாக விஷால் தரப்போ அல்லது அனிஷா தரப்போ எதுவும் அறிவிக்கவில்லை.

காரணம் என்ன?

காரணம் என்ன?

இந்நிலையில் ஏன் இவர்களது திருமணம் நிறுத்தப்பட்டது என நமக்குத் தெரிந்த வட்டாரத்தில் விசாரித்தோம். அதில், திருமணம் நடைபெறும் இடம் தொடர்பான பிரச்சினையில் விஷாலின் நிலையில்லா தன்மையே திருமணம் நிறுத்தப்பட்டதற்கு முக்கியக் காரணம் எனத் தெரியவந்துள்ளது. நடிகர் சங்கக் கட்டடமா அல்லது ஹைதராபாத்தா என்ற குளறுபடியே திருமணத்திற்கு வில்லனாகி விட்டதாகக் கூறப்படுகிறது.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு

அதிகாரப்பூர்வ அறிவிப்பு

ஆனால், இதில் எந்தளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை. விஷால் தரப்போ அல்லது அனிஷா தரப்போ இது தொடர்பாக அதிகாரப்பூர்வமாக எதுவும் தெரிவிக்காத வரையில், இது போன்ற தகவல்கள், யூகங்கள் என நிறைய உலா வரத்தான் செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X