»   »  'உதயநிதியிடம் ஏன் நல்ல பெயர் வாங்க நினைக்கிறார் விஷால்?'

'உதயநிதியிடம் ஏன் நல்ல பெயர் வாங்க நினைக்கிறார் விஷால்?'

Posted By: Rajiv
Subscribe to Oneindia Tamil

தமிழ் சினிமாவில் இப்போதைய திருட்டு டிவிடி ஒழிப்புத் துறை தலைவர், செயலாளர் எல்லாமே விஷால்தான். அப்படித்தான் ஓடி ஓடி திருட்டு டிவிடிகளையும் புது படங்களை போடும் லோக்கல் சேனல்களையும் கையும் களவுமாகப் பிடித்து வருகிறார்.

ஆனால் 'அதிலும் ஒரு அரசியல் இருக்கிறது' என்கிறார்கள்.

Why Vishal tries to impress Udhayanidhi?

சென்ற முறை பெங்களூரு பேருந்தில் பிடித்ததாக சொல்லப்பட்ட படம் உதயநிதி ஸ்டாலின் நடித்து சமீபத்தில் வெளியான மனிதன் படம். நேற்று முன் தினம் கும்பகோணத்தில் பிடிபட்டதும் அதே படத்தை ஒளிபரப்பிய லோக்கல் சேனல்தான்.

ஏற்கெனவே விஷாலுக்கு திமுக முத்திரை விழுந்துள்ளது. அதிமுக கூட்டணியில் இருக்கும் சரத்குமார் மற்றும் ராதாரவியை எதிர்த்தது முதல் ஸ்டார் கிரிக்கெட்டை ஒளிபரப்பி திமுக பிரசாரத்துக்கு உதவியது வரை விஷாலின் நடவடிக்கைகள் எதுவுமே ஆளுங்கட்சிக்கு திருப்தி தரவில்லை.

இச்சூழலில் உதயநிதியிடம் ஏன் நல்ல பெயர் வாங்கி நட்பு பாராட்ட நினைக்கிறார் விஷால்? என்று தெரியாமல் முழிக்கின்றனர் திரைத் துறையினர்.

English summary
It seems that Nadigar Sangam secretary and actor Vishal is trying to impress Udhayanidhi Stalin by his anti piracy activities.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil