»   »  விஸ்வரூபம் 2 தாமதம்: ஆஸ்கர் ரவிச்சந்திரன் சொல்லும் காரணம் ஏற்கும்படி இல்லை- கமல் அதிரடி

விஸ்வரூபம் 2 தாமதம்: ஆஸ்கர் ரவிச்சந்திரன் சொல்லும் காரணம் ஏற்கும்படி இல்லை- கமல் அதிரடி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: விஸ்வரூபம் 2 படம் தாமதமாவதற்கு தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரன் சொல்லும் காரணம் ஏற்கும்படி இல்லை என்று கமல் ஹாஸன் இன்று தெரிவித்தார்.

கமல் நடிப்பில் உருவாகியுள்ள ‘உத்தமவில்லன்' படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கமல் வீட்டில் நடைபெற்றது.அப்போது கமல் நடிப்பில் உருவாகியுள்ள 'விஸ்வரூபம்' படத்தின் இரண்டாம் பாகம் வெளியாவதில் ஏன் இவ்வளவு தாமதம், தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரனுக்கும் உங்களுக்கும் இடையிலான கருத்து வேறுபாடுதான் காரணமா? என்று கேள்வி எழுப்பினர்.


இதற்கு பதிலளித்த கமல், "எங்களுக்குள் நிச்சயமாக கருத்து வேறுபாடு கிடையாது.


ஆனால் இந்தப் படம் தாமதமாவதற்கு சில காரணங்களைச் சொல்கிறார் ஆஸ்கர் ரவிச்சந்திரன். அவை நிச்சயம் ஏற்கும்படி இல்லை என்பதுதான் உண்மை.


அவர் பணக் கஷ்டத்தில் இருப்பதுபோலவும் தெரியவில்லை. இருந்தும் இப்படத்தை வெளியிடுவதில் ஏன் தாமதப்படுத்திகிறார் என்றுதான் புரியவில்லை," என்றார்.


விஸ்வரூபம் முதல் பாகம் வெளியானபோதே, இரண்டாம் பகுதியின் பெருமளவு காட்சிகளை முடித்துவிட்டிருந்தார் கமல். ஆனால் படம் வெளிவந்தபாடில்லை. அந்தப் படம் முடிந்த பிறகு, அடுத்தடுத்து உத்தம வில்லன், பாபநாசம் படங்களில் நடித்துவிட்ட கமல், மேலும் இரு புதிய படங்களில் நடிக்க பேசி வருகிறார்.


ஆனால் விஸ்வரூபம் 2 படத்தின் வர்த்தகம் எதிர்ப்பார்த்த அளவு இல்லாததால், தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரன் படத்தை திரும்ப கமலிடமே திருப்பித் தந்துவிடும் முடிவில் இருப்பதாக ஒரு பேச்சு நிலவுகிறது.

English summary
Kamal Hassan today revealed why his Viswaroopam 2 is getting delayed. He said that the producer Aascar Ravichandiran is intentionally delaying the movie for some reasons.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil