ஏன் வெளியாகவில்லை விஸ்வரூபம் 2?

By Shankar

'விஸ்வரூபம் 2' படம் வெளியாகும் தேதி குறித்து இன்னமும் எந்த அறிவிப்பும் வெளியாகாதது ஏன் என்று நடிகர் கமல் ஹாஸன் விளக்கம் அளித்துள்ளார்.

'விஸ்வரூபம்' வெளியான உடனே, 'விஸ்வரூபம் 2' படத்தை ஆரம்பித்துவிட்டார் கமல். அதற்கு முன்பே கணிசமான பகுதிகளை எடுத்துவைத்திருந்தார்.

ஆஸ்கார் ரவிச்சந்திரன்

ஆஸ்கார் ரவிச்சந்திரன்

அப்போது 'விஸ்வரூபம் 2' படத்தின் உரிமையை வாங்கினார் ஆஸ்கர் ரவிச்சந்திரன். படத்தின் மீதிப் பணிகளையும் கமல் முடித்தார். கடந்த ஆண்டே படம் வெளியாகும் என்றார்கள். ஆனால் இதுவரை வெளியீட்டுத் தேதிகூட அறிவிக்கப்படவில்லை.

மேலும் இரண்டு படங்கள்

மேலும் இரண்டு படங்கள்

இந்தப் படம் வெளியாவதற்குள் ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் 'உத்தம வில்லன்', ஜூது ஜோசப் இயக்கத்தில் 'பாபநாசம்' என இரண்டு படங்களை முடித்து விட்டார் கமல்.

கமல் பதில்

கமல் பதில்

மூன்று படங்களுமே எப்போதும் வெளியாகும் என்ற கேள்விக்கு கமல் கூறியுள்ள பதில்: விஸ்வரூபம்' முதல் பாகத்திற்கு நேர்ந்த பிரச்சினையைத் தொடர்ந்து இரண்டாம் பாகம் குறித்து நான் கவலையடைந்தேன். எனவே அதன் வெளியீட்டுக்கு காத்திராமல், லிங்குசாமியோடு பேசியவுடன் 'உத்தமவில்லன்' படத்தை துவக்கினோம். 'பாபாநாசம்' கதை சுவாரசியமாக இருந்ததால் அதையும் ஒப்புக்கொண்டேன். தற்போது இரண்டு படங்களின் படப்பிடிப்பும் முடிந்துவிட்டன.

தயாரிப்பு பணிகள் தாமதம்

தயாரிப்பு பணிகள் தாமதம்

'விஸ்வரூபம் 2'-ன் படப்பிடிப்பு, ஒரு பாடலைத் தவிர, போன ஆண்டு அக்டோபர் மாதமே முடிந்துவிட்டது. தயாரிப்புப் பணிகள் தாமதமாவதால் இன்னும் காத்திருக்கவேண்டியுள்ளது.

விதி

விதி

ஒரு படம் துவங்கும் முன் எவ்வளவு பூஜைகள் வேண்டுமானாலும் செய்யலாம், ஆனால் அப்படத்தின் விதியை எந்த அமானுஷ்ய சக்தியும் தீர்மானிப்பதில்லை." என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X