For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  சும்மா இருந்த சங்கை ஊதிக் கெடுத்துட்டாரே விவேக்.. திரும்பவும் சேரனை திட்டி தீர்க்கும் கவிலியா ஆர்மி

  |
  Bigg Boss Kavin Busy in Shooting: Kavin வெளிநாட்டில் பட Shooting

  சென்னை: கவின், லாஸ்லியா விவகாரம் தொடர்பாக அட்வைஸ் செய்து விவேக் வெளியிட்ட பதிவால் மீண்டும் சேரனைத் திட்டி கவிலியா ஆர்மியினர் பதிவுகள் வெளியிட்டு வருகின்றனர்.

  பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற சேரனுக்கு, கவின், லாஸ்லியா விவகாரம் பெரும் தலைவலியாக மாறிவிட்டது. பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்த போது, லாஸ்லியாவை சேரன் மகளாகக் கருதி வந்தார். லாஸ்லியாவும் சேரப்பா என்றே அவரை அழைத்து வந்தார்.

  எனவே, பொறுப்பான அப்பாவாக காதல் விஷயங்களை எல்லாம் வெளியில் போய் பார்த்துக்கொள்ளுங்கள் என கவின் மற்றும் லாஸ்லியாவுக்கு சேரன் அட்வைஸ் செய்தார்.

  இந்து கடவுள்களை அசிங்கமாக பேசிய காரப்பா சில்க்ஸ்.. காரப்பா.. ஜோரப்பா.. கமல்ஹாசன் விளம்பரம்?

  சேரப்பா

  சேரப்பா

  இதனை லாஸ்லியாவின் நிஜ அப்பா மற்றும் குடும்பத்தினரும் ஆதரித்தனர். இதனால் கூடுதல் அக்கறை எடுத்துக் கொண்டு சேரன் மேலும் சில அறிவுரைகளை கூறினார். ஆனால் கவின் மற்றும் லாஸ்லியா ரசிகர்களுக்கு சேரனின் இந்த அறிவுரைகள் ஆரம்பத்தில் இருந்தே பிடிக்கவில்லை.

  எதிரி பிம்பம்

  எதிரி பிம்பம்

  இதனால் சமூக வலைதளங்களில் சேரனுக்கு எதிராக தொடர் பிரச்சாரங்கள் செய்தனர். கவிலியா காதலுக்கு ஆதரவாக வசந்தபாலன் உள்ளிட்டோரும் சில பதிவுகளை வெளியிட்டனர். இதனால் கவிலியா காதலுக்கு பிக் பாஸ் வீட்டில் சேரன் தான் எதிரி என்பது போன்ற பிம்பம் உருவானது.

  சேரன் பற்றி அவதூறு

  சேரன் பற்றி அவதூறு

  தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்துவிட்ட நிலையிலும் இந்த பிரச்சினை ஓய்ந்தபாடில்லை. கவிலியா ஆர்மியினர் தொடர்ந்து சேரன் மீது அவதூறு பரப்பி வருகின்றனர். இதனால் கோபமடைந்த சேரன் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கோபமாக ஒரு டிவீட் வெளியிட்டிருந்தார்.

  சேரன் கோபம்

  சேரன் கோபம்

  அதில், ‘அவர்களது நன்மைக்காகத் தான் அப்படி பேசினேன். இனி என் நாவில் கவின், லாஸ்லியா பெயரே வராது. என்னை தொந்தரவு செய்யாமல் ஒதுங்கிவிடுங்கள்' என டிவீட் செய்திருந்தார். இதையடுத்து இந்த பிரச்சினை ஒரு முடிவுக்கு வந்ததாகக் கருதப்பட்டது.

  விவேக் டிவீட்

  இந்நிலையில் நடிகர் விவேக் சேரனுக்கு இந்த விவகாரம் தொடர்பாக அட்வைஸ் செய்து ஒரு புதிய டிவீட் வெளியிட்டார். அதில், " சேரன் சார்! நீங்கள் மிக சிறந்த சமுதாய நோக்கம் உள்ள தேசிய விருது பெற்ற படைப்பாளி. ஆகவே விஜய் சொல்வது போல் "இக்னோர் நெகட்டிவிட்டி". அஜீத் சொல்வது போல் " லெட் கோ". நல்ல கருத்தினை பதிவிட்டு அமைதி, ஆனந்தமுடன் இருங்கள். எல்லோருக்கும் அமைதி நிலவட்டும்", என விவேக் குறிப்பிட்டிருந்தார்.

  கோரிக்கை

  விவேக்கின் இந்த பதிவு முடிந்து போன பிரச்சினையை மீண்டும் கிளப்பிவிடுவது போல் ஆகிவிட்டது. திரும்பவும் சேரனைப் பற்றி கவிலியா ஆர்மியினர் திட்டி பதிவுகள் வெளியிடத் தொடங்கி விட்டனர்."சேரன் பற்றி இதுவரை கவின் ஒரு வார்த்தை கூட தவறாக பேசவில்லை. ஆனால் தப்புதப்பாக பேசுகிறார். தயது செய்து கவினின் வாழ்க்கையை கெடுக்காதீர்கள்", என இவர் தெரிவித்துள்ளார்.

  மிடில் கிளாஸ் பையன்

  "ஏன் இப்படி சேரன் செய்யும் தவறை யாரும் கண்டிக்க மாட்டேங்குறீங்க. கவின் மாதிரி ஒரு மிடில் கிளாஸ் பையனுக்கு நாம தான் ஆதரவு தர வேண்டும். இல்லைனா சேரன் மாதிரி உள்ளவங்க ஏறி மிதிச்சிட்டு போய்டுவாங்க", என இவர் குறிப்பிட்டுள்ளார். இதுபோல் கவின் ஆதரவாளர்கள் நிறைய பேர் சேரனை மீண்டும் திட்ட ஆரம்பித்துவிட்டனர்.

  விவேக்கிற்கு அறிவுரை

  விவேக்கிற்கு அறிவுரை

  ஏதோ நல்லது செய்கிறேன் என நினைத்து விவேக், பொதுவெளியில் இப்படி பதிவிட்டது, சேரனுக்கு எதிராக திரும்பியுள்ளது. சிலர் இந்த விவகாரத்தில் விவேக் தலையிட வேண்டாம். தேவையில்லாமல் அவரும் பிரச்சினையில் சிக்க வேண்டாம் என விவேக்கிற்கு அறிவுரை கூறியுள்ளனர்.

  English summary
  Comedy actor Vivek's advice to director Cheran has made Kavin army angry.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more