பாரதிராஜா இறக்கும்போது யாரும் இல்லை.. ஏன்? அவருடைய தம்பியே சொல்லும் காரணம் என்னனு பாருங்க

சென்னை: தமிழ் சினிமாவின் இமயமாய் திகழ்ந்த இயக்குனர் பாரதிராஜாவின் மறைவு ஒட்டுமொத்த திரையுலகையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ள நிலையில், அவரது இறுதி அஞ்சலியின் போது இசையமைப்பாளர் கங்கை அமரன் ஆதங்கத்தில் பேசிய பேச்சு தற்போது சோசியல் மீடியாவில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. இதற்கு பாரதிராஜாவின் தம்பி ஜெயராஜ் தற்போது அதிரடி விளக்கம் அளித்துள்ளார்.

இயக்குனர் பாரதிராஜாவின் மறைவுச் செய்தி கேட்டு, திரையுலகமே திரண்டு வந்து அஞ்சலி செலுத்தியது. பாரதிராஜாவின் உடலை அடக்கம் செய்யும் வரை உடன்கட்டையாக இருந்த கங்கை அமரன், அஞ்சலி செலுத்த வந்த பாரதிராஜாவின் மனைவியைப் பார்த்ததும் அப்படியே உணர்ச்சிவசப்பட்டு வெடித்தார்.

"அவரை இப்படி தனியாக விட்டுவிட்டுப் போய்விட்டீர்களே... சாகும்போது அவரை அனாதையாக சாகவிட்டுவிட்டீர்களே!" என்று மிகுந்த வருத்தத்துடனும் ஆதங்கத்துடனும் பாரதிராஜாவின் மனைவியிடம் கங்கை அமரன் முகத்திற்கு நேராகவே பேசினார்.

இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி, நெட்டிசன்கள் மத்தியில் காட்டுத்தீயாய் பரவி பெரும் விவாதத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது. "கடைசி காலத்தில் பாரதிராஜாவை யாரும் கவனிக்கவில்லையா?" என்ற கேள்விகளும் எழத் தொடங்கின.

Why Was Bharathiraja Alone at the End Brother Jayaraj Breaks the Silence

உண்மை என்ன? தம்பி ஜெயராஜ் கொடுத்த நெத்தியடி விளக்கம்: இந்த விவகாரம் இணையத்தில் பூதாகரமான நிலையில், பாரதிராஜாவின் உடன் பிறந்த தம்பியான ஜெயராஜ் தற்போது ஊடகங்களுக்குப் பேட்டி அளித்து, இந்தச் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

அவர் தனது பேட்டியில் கூறியிருப்பதாவது: "கங்கை அமரன் எங்கள் குடும்பத்தில் ஒருவர் போன்றவர். அண்ணன் மீது அவருக்கு இருந்த அதிகப்படியான பாசத்தின் காரணமாக, விஷயம் என்னவென்று தெரியாமல் அந்த ஆதங்கத்தில் அப்படி பேசிவிட்டார்.

எங்கள் அண்ணி, அண்ணனை எப்போதுமே மிக நன்றாகத்தான் கவனித்துக் கொண்டார். சம்பவத்தன்று தேனியில் ஒரு முக்கியமான குடும்ப நிகழ்ச்சி இருந்தது. அதில் கலந்து கொள்ள வேண்டிய கட்டாயச் சூழ்நிலை இருந்ததால் அண்ணி தேனிக்கு வந்திருந்தார்.

துரதிர்ஷ்டவசமாக, அவர் தேனிக்கு வந்து இறங்கிய அதே நேரத்தில் தான் சென்னையில் அண்ணன் காலமானார் என்ற துயரச் செய்தி வந்தது. தகவல் தெரிந்த அடுத்த கணமே அண்ணி பதறியடித்துக்கொண்டு மீண்டும் சென்னைக்குக் கிளம்பி வந்துவிட்டார். இதுதான் அங்கு நடந்த உண்மை" என்று விளக்கியுள்ளார்.

Why Was Bharathiraja Alone at the End Brother Jayaraj Breaks the Silence

மேலும் பேசிய ஜெயராஜ், "இந்த விபரம் தெரியாமல் தான் கங்கை அமரன் அங்கே உணர்ச்சிவசப்பட்டுப் பேசிவிட்டார். அதன் பிறகு நாங்கள் அவரிடம் பேசி, நடந்த சூழ்நிலையை விளக்கிப் புரிய வைத்துள்ளோம். இப்போது அவர்களுக்குள் எந்தப் பிரச்சனையும் இல்லை, எல்லாம் சுமுகமாக முடிந்துவிட்டது" என்று கூறி இந்த விவாதங்களுக்கு எண்ட் கார்டு போட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X