twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஸ்ரீதேவிக்கு எதற்கு அரசு மரியாதை?: இது தான் காரணமாம்

    By Siva
    |

    Recommended Video

    குடிபோதையில் இறந்த ஸ்ரீதேவிக்கு அரசு மரியாதை?- வீடியோ

    மும்பை: ஸ்ரீதேவிக்கு எதற்காக அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடத்தப்பட்டது என்ற கேள்விக்கு பதில் கிடைத்துள்ளது.

    திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள துபாய் சென்ற இடத்தில் மதுபோதையில் குளியல் தொட்டியில் விழுந்து நீரில் மூழ்கி உயிர் இழந்தார் நடிகை ஸ்ரீதேவி.

    மும்பை கொண்டு வரப்பட்ட அவரது உடலுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நேற்று நடந்தது.

    எதற்கு?

    எதற்கு?

    மதுபோதையில் இறந்த ஸ்ரீதேவியின் உடல் மீது மூவர்ண கொடியை போர்த்துவதா? அவருக்கு எதற்காக அரசு மரியாதையுடன் கூடிய இறுதிச்சடங்கு என்று ஆளாளுக்கு சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பினார்கள்.

    மாநில அரசு

    மாநில அரசு

    சட்டப்படி பார்த்தால் முன்னாள், தற்போதைய பிரதமர்கள், முன்னாள் மற்றும் தற்போதைய மாநில, மத்திய அமைச்சர்கள் இறந்தால் அவர்களுக்கு அரசு மரியாதையுடன் கூடிய இறுதிச்சடங்கு நடத்தப்படும். ஆனால் அந்த சட்டம் தற்போது மாறிவிட்டது.

    முடிவு

    முடிவு

    யாருக்கு அரசு மரியாதையுடன் கூடிய இறுதிச்சடங்கு நடத்துவது என்பதை மாநில அரசுகளே முடிவு செய்கின்றன. அரசு மரியாதை அளிக்கப்படும் நபரின் உடல் மீது தேசியக் கொடியை போர்த்தி, துப்பாக்கி குண்டுகள் முழங்க வீர வணக்கம் செய்யப்படும்.

    மரியாதை

    மரியாதை

    அறிவியல், சினிமா, இலக்கியம், சட்டம், அரசியல் உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்குபவர்கள் இறந்துவிட்டால் அவர்களை கவுரவிக்கும் விதமாக அரசு மரியாதை அளித்து வருகிறது மாநில அரசுகள்.

    கவுரவம்

    கவுரவம்

    ஸ்ரீதேவி சினிமாத் துறையில் சிறந்து விளங்கினார். பாலிவுட்டின் முதல் பெண் சூப்பர் ஸ்டார் ஆன அவரை கவுரவிக்கும் விதமாக அரசு மரியாதை அளிக்கப்பட்டதாம்.

    English summary
    Sridevi an icon of Indian cinema was laid to rest with full state honours on Wednesday. As the outpouring of grief continued, there was a debate in certain quarters about her body being draped in the Tri-Colour. She was given state honour as she excelled in film industry.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X