''அக்கா மேல சத்தியம் தம்பி, ராமராஜனை விட நீங்க ரொம்ம்மம்ப நல்லா வருவீங்க தம்பி...!''
அதாவது தெரிந்து செய்தால் தப்பு, தெரியாமல் செய்தால் தவறு என்பார்கள். சில சினிமாப் படங்களைப் பார்க்கும்போது, தெரிஞ்சுதான் இந்தப் படத்தை எடுத்தாங்களா, இல்லாட்டி உண்மையிலேயே தெரியாமல் எடுத்துட்டாங்களா என்ற சந்தேகம் வரும்.
அதே போல ஒவ்வொரு நடிகருக்கும் வழக்கமாக ஒரு வாரிசு வருவார். அவர் குடும்ப வாரிசாக இருப்பார் அல்லது கலையுலக வாரிசாக இருபபார். ஆனால் தமிழ் சினிமாவில் ராமராஜனுக்கு யாரும் கலையுலக வாரிசாக வராத குறையை தீர்க்க வந்துள்ளார் நடிகை தேவயானியின் கணவர் ராஜகுமாரன் என்று திரையுலகில் பேசிக் கொள்கிறார்கள்.
ராமராஜன் - ராஜகுமாரன் ... ஒரு சின்ன 'ஆர் என் டி..'

ரெண்டு பேருக்குமே உதடுதான் பெஸ்ட்
நடிகைகளின் உதடுகள் பற்றித்தான் பேசனுமாக்கும்.. ராஜகுமாரனுக்கும், ராமராஜனுக்கும் கூட சூப்பரான உதடுகள்தான். என்ன ராஜகுமாரன் உதடுளில் லிப்ஸ்டிக் கொஞ்சம் கம்மியா இருக்கு.. ராமராஜன் பர்பெக்ட்டாக போட்டு அப்பியிருப்பார்.. அதான் வித்தியாசம்

டான்ஸில் கிளாஸ்
ரெண்டு பேருக்குமே டான்ஸ் சுட்டுப் போட்டாலும் வராது என்பது அவர்களை விட அவர்களை விட அவர்களைச் சுற்றியிருப்பவர்களுக்கு நன்றாகவே தெரியும். ஒன் டூ த்ரீ சொல்லி கை, கால்களை முதலில் இடமிருந்து வலமாகவும், பிறகு வலமிருந்து இடமாகவும், அப்புறம் மேலிருந்து கீழாகவும், அதற்குப் பிறகு கீழிலிருந்து மேலாகவும் அசைக்க வைத்துத்தான் படமாக்குவார்கள் என்று தெரிகிறது. அதை இருவருமே பர்பக்ட்டாக செய்துள்ளனர் என்றே சொல்ல வேண்டும்....என்ன, ஆடும்போது சைடில் அண்டா, கிண்டா ஏதும் இல்லாம பார்த்துக்கனும், தட்டுமுட்டுச் சாமான்களை தூக்கி வச்சுடனும்.

ஸ்டைல் ராசாக்கள்
அப்படியே ஒரு பசுவின் நளினத்தை ராமராஜன் ஸ்டைலில் பார்க்கலாம். ராஜகுமாரன் ஸ்டைல் என்ன என்பது இன்னும் யாராலும் பகுத்துச் சொல்ல முடியாத அளவுக்கு ரொம்ப டெலிகேட்டாக இருக்கிறதாம்.. இருந்தாலும் படத்தைப் பார்த்து விட்டால் குத்துமதிப்பாக எதையாவது சொல்லி விடலாம் என்று நம்புவோம்.

இவருக்கு 'கெள'... அவருக்கு 'கெளபாய்'
ரமராஜன் படத்தில் சண்டைக் காட்சிகளின்போது பசுக்களும், எருமைகளும் குறுக்கே புகுந்து ஓடும். அத்தோடு சேர்ந்து ராமராஜனும், வில்லன்களும் ஓடுவார்கள். சில நேரம் தாண்டிப் போவார்கள். சில நேரம் உள்ளே புகுந்து வெளியே வருவார்கள். ராஜகுமாரன் ஒரு படி மேலே போய் கெளபாய் ஸ்டைலில் கைக்கு ரெண்டு துப்பாக்கியும், கண்ணை மறைக்கும் கண்ணாடியும், தலையை மறைக்கும் தொ்ப்பியையும் போட்டுக் கொண்டு அதகளம் செய்துள்ளார்... பார்க்கவே பயந்து வருதே...
கரகாட்டக்காரன் படத்தில், வீட்டுச் சுவரில் குத்த வைத்து உட்கார்ந்து கொண்டு, வெற்றிலையை எடுத்து வாயில் வைத்தபடி பேசும் சண்முக சுந்தரம் சொல்வார்... தம்பி நீங்க நல்லா வருவீங்க தம்பி.. என்று. அதையேதான் ராஜகுமாரனையும் பார்த்து சண்முகசுந்தரம் சார்பில் நாம் சொல்லி வைப்போம்.


Click it and Unblock the Notifications











