twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    'ஐஸ் பக்கெட் சவாலை' தவிர வேறு எந்த சவாலையும் ஏற்பேன்: நடிகை 'குத்து' ரம்யா

    By Siva
    |

    பெங்களூர்: ஐஸ் பக்கெட் சவாலை ஏற்கப் போவது இல்லை என்று நடிகை குத்து ரம்யா தெரிவித்துள்ளார்.

    ஏ.எல்.எஸ். எனப்படும் நரம்பு தொடர்பான நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், நிதி திரட்டவும் ஐஸ் பக்கெட் சவால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஐஸ் பக்கெட் சவாலை ஏற்போர் தங்கள் தலையில் ஒரு பக்கெட் குளிர்ந்த நீரை ஊற்றிக் கொண்டு ஏ.எல்.எஸ். அசோசியேஷனுக்கு 10 அமெரிக்க டாலரோ அல்லது அவர்கள் விரும்பிய தொகையையோ நன்கொடையாக அளிக்க வேண்டும். மேலும் இந்த சவாலை ஏற்குமாறு அவர்கள் 3 பேரின் பெயர்களை தெரிவிக்க வேண்டும். சவாலை ஏற்காதவர்கள் 100 அமெரிக்க டாலரை நன்கொடையாக அளிக்க வேண்டும்.

    இந்நிலையில் நடிகை குத்து ரம்யா ஐஸ் பக்கெட் சவாலை ஏற்க மறுத்துள்ளார். இது குறித்து அவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது,

    ஐஸ் பக்கெட்

    ஐஸ் பக்கெட்

    ஒரு பக்கெட் குளிர்ந்த நீரை என் தலையில் ஊற்றிக் கொள்வதை பார்க்க பலர் ஆவலாக உள்ளனர் என்று எனக்கு தெரியும். ஆனால் நான் அப்படி எதுவும் செய்யப் போவது இல்லை.

    ஜாலி

    ஜாலி

    ஐஸ் பக்கெட் சவாலை ஏற்கச் சொல்லி என் பெயரை முன்மொழிந்தவர்கள் என்னை மன்னிக்கவும். பலர் ஜாலிக்காக செய்கிறார்கள். அந்த சவாலின் உன்னத நோக்கத்திற்கு உதவி செய்யவில்லை.

    நன்கொடை

    நன்கொடை

    ஐஸ் பக்கெட் சவாலை ஏற்பதே ஏ.எல்.எஸ். அசோசியேஷனுக்கு நன்கொடை வழங்கத் தான்.

    ஐஸ் ஏன்?

    ஐஸ் ஏன்?

    குளிர் எப்படி இருக்கும் என்பதை நீங்கள் உணரத் தான் ஐஸ் போட்ட நீரை உங்கள் தலையில் ஊற்றிக் கொள்ளுமாறு கூறுகிறார்கள். ஏ.எல்.எஸ். நோயாளிகள் குளிரால் உறைந்துவிடுவார்கள்.

    நோய்

    நோய்

    ஏ.எல்.எஸ். நோய் குறித்து ஆராய்ச்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன. இருப்பினும் அது குறித்து அனைத்தும் தெரியவில்லை.

    புத்தகம்

    புத்தகம்

    ஏ.எல்.எஸ். நோய் பற்றி நீங்கள் அறிய விரும்பினால் மிட்ச் ஆல்பம் எழுதிய டியூஸ்டேஸ் வித் மோரி(Tuesdays with Morrie) என்ற புத்தக்கத்தை படித்து பாருங்கள்.

    அழுகை

    அழுகை

    ட்யூஸ்டேஸ் வித் மோரி புத்தகத்தை நான் பதின்வயதில் இருக்கையிலேயே படித்துவிட்டேன். ஒவ்வொரு பக்கத்தை படித்து முடிக்கும்போதும் அழுதேன். இந்த புத்தகம் உங்களுக்கு வாழ்வு மற்றும் இறப்பு குறித்து தெரிவிக்கும்.

    நீர்

    நீர்

    எந்த சவாலையும் ஏற்க நான் தயார். ஆனால் இந்த சவாலை மட்டும் முடியாது. நான் நன்கொடை வழங்குகிறேன். ஆனால் நீரை வீணடிக்க மாட்டேன். நீங்களும் நீரை வீணாக்காதீர்கள். நன்கொடை வழங்குங்கள் என்று தெரிவித்துள்ளார் ரம்யா.

    English summary
    Actress Ramya has refused to take the 'Ice Bucket Challenge'.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X