விருந்து வைக்க அழைத்து சென்று.. விபத்தில் முடித்த யாஷிகா.. புதுச்சேரி சென்றதன் பரபர பின்னணி!
சென்னை: நடிகை யாஷிகா ஆனந்த் நண்பர்களுடன் புதுச்சேரி சென்றது ஏன் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
நடிகை யாஷிகா ஆனந்த் தனது தோழி வள்ளிச்செட்டி பவனி, ஆண் நண்பர்கள் சையது மற்றும் அமீர் ஆகியோருடன் காரில் கடந்த சனிக்கிழமை புதுச்சேரி சென்றார்.
நள்ளிரவில் சென்னை திரும்பியபோது, மாமல்லபுரம் அருகே அவரது கார் விபத்துக்குள்ளானது. இதில் யாஷிகாவின் தோழி வள்ளி செட்டி பவனி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

ஐசியூவில் தீவிர சிகிச்சை
படுகாயம் அடைந்த யாஷிகா ஆனந்த் மற்றும் ஆண் நண்பர்கள் இருவரும் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஐசியூவில் அனுமதிக்கப்பட்டுள்ள அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

2 மாதங்கள் ஆகும்
யாஷிகாவுக்கு இடுப்பு எலும்பு மற்றும் வலது கை கால் எலும்பில் முறிவு ஏற்பட்டுள்ளதால் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. யாஷிகா ஆனந்த் எழுத்து நடக்க 2 மாதங்கள் ஆகும் என தகவல் வெளியாகியுள்ளது.

வேகமாக கார் ஓட்டிய யாஷிகா
இந்த விபத்து குறித்து மாமல்லபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். யாஷிகா வேகமாக கார் ஓட்டியதுதான் விபத்துக்கு காரணம் என்று தெரிய வந்துள்ளது. இதையடுத்து யாஷிகா மீது வேகமாக கார் ஓட்டி உயிரிழப்பு ஏற்படுத்துதல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
Recommended Video

உருக்கமான தகவல்
இதனால் சிகிச்சை முடிந்ததும் யாஷிகா கைதாகலாம் என்றும் கூறப்படுகிறது. இதனிடையே விபத்தில் பலியான யாஷிகாவின் தோழி வள்ளிசெட்டி பவனி பற்றிய உருக்கமான தகவல் வெளியாகி உள்ளது. ஹைத்ராபாத்தை சேர்ந்த பவனி அமெரிக்காவில் சாப்ட்வேர் என்ஜினீயராக பணி புரிந்து வந்தார்.

தோழிக்கு விருந்துகொடுக்க
ஒரு வாரத்துக்கு முன்புதான் இந்தியா திரும்பியுள்ளார் பவனி. சில தினங்களுக்கு முன்பு யாஷிகாவை பார்க்க சென்னை வந்துள்ளார். நீண்ட நாட்களுக்கு பிறகு தோழியை சந்தித்ததால் புதுச்சேரியில் விருந்து வைக்க முடிவு செய்த யாஷிகா நண்பர்களுடன் புதுச்சேரி சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

கிடந்ததே தெரியவில்லை
இதனிடையே விபத்து நடந்த போது பவனி காரில் இருந்து சாலையோர பள்ளத்தில் தூக்கி வீசப்பட்டுள்ளார். சாலையோர பள்ளத்தில் பவனி கிடந்தது தெரியாமலேயே யாஷிகா மற்றும் அவரது இரண்டு நண்பர்களும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

துரதிர்ஷ்டவசமாக மரணம்
பின்னர் முக்கால் மணி நேரம் கழித்தே விபத்து நடந்த சூளேரிக்காட்டை சேர்ந்த மக்கள் அவரை கண்டுபிடித்துள்ளனர். ஆனால் துரதிர்ஷ்டவசமாக மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்துவிட்டார்.


Click it and Unblock the Notifications











