இந்த விளக்கம் எல்லாம் செல்லாது செல்லாது யோகிபாபு.. நீங்க கூர்கா வெற்றிவிழாவை புறக்கணிச்சது சரியில்ல!
கூர்கா வெற்றி விழாவில் யோகி பாபு கலந்து கொள்ளாதது பல சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை: கூர்கா திரைப்படத்தின் வெற்றி விழாவில் அப்படத்தின் நாயகன் யோகி பாபு கலந்துகொள்ளாதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சாம் ஆண்டன் இயக்கத்தில் யோகி பாபு நடித்த கூர்கா திரைப்படம் கடந்த வாரம் வெளியானது. இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
இதையடுத்து படத்தின் வெற்றி விழா சென்னையில் வடபழனியில் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சி மாலை 6 மணிக்கு ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் 8 மணிக்கு தான் விழாவை தொடங்கினர்.

காத்திருப்பு:
நிகழ்ச்சியில் நிச்சயம் கலந்துகொள்வதாக யோகி பாபு கூறியிருந்தாராம். ஆனால் கடைசி நேரத்தில் அவரால் வரமுடியவில்லை. யோகி பாபு நிச்சயம் வந்துவிடுவார் எனும் நம்பிக்கையில் இயக்குனரும், விநியோகஸ்தரும் காத்திருந்தினர். அவர் வராததே நிகழ்ச்சி தொடங்க தாமதமானதற்கு காரணமாகும்.

விசாரிப்பு:
தான் ஹீரோவாக நடித்த படத்தின் வெற்றி விழாவுக்கே யோகி பாபு ஏன் வரவில்லை என்ற கேள்வி சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுகுறித்து பத்திரிகையாளர்கள் சிலர் யோகி பாபுவை தொலைபேசியில் அழைத்து விசாரித்தனர்.

கோமாளி படப்பிடிப்பு:
அப்போது, " தற்போது ஜெயம் ரவி நடித்து வரும் கோமாளி திரைப்படத்தில் நடித்து வருகிறேன். அந்த படத்தின் டப்பிங் பணி நடைபெற்று வருவதால் என்னால் வர இயலவில்லை. கோமாளி படத்தில் டப்பிங் பேசி முடித்துவிட்டு, நாளை (இன்று) மீண்டும் ஷூட்டிங் செல்ல வேண்டும்.

கட்டாயம்:
நான் எப்படியாவது வந்து விழாவில் தலைகாட்டிவிட்டு சென்று விடலாம் என முயற்சித்தேன். ஆனால் முடியவில்லை. பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும், படத்திற்கான படப்பிடிப்பு சுமார் 25 நாட்கள் வெளியூரில் நடைபெறுகிறது. நாளையில் இருந்து இதில் நான் கலந்துகொள்கிறேன். எனவே கோமாளி படத்திற்கு டப்பிங் பேசி முடிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன்.

மனக்கசப்பு இல்லை:
அதனால் தான் என்னால் கூர்கா வெற்றி விழாவில் கலந்துகொள்ள முடியவில்லை. மற்றப்படி, இயக்குனர் மற்றும் தயாரிப்பாளருடன் எனக்கு எந்த மனக்கசப்பும் இல்லை. இந்த காரணத்தை நான் அவர்களிடம் தெரிவித்துவிட்டேன்", என யோகி பாபு விளக்கமளித்தார்.


Click it and Unblock the Notifications











