Just In
- 12 hrs ago
கொல மாஸ்.. சிறுவர் சீர்த்திருத்த பள்ளியில் ‘குட்டி ஸ்டோரி’ பாடும் விஜய்.. வெளியானது வீடியோ பாடல்!
- 12 hrs ago
டைட்டான டிரஸ்ஸில் மெட்ராஸ் பட நடிகையின் அசத்தல் லுக்!
- 12 hrs ago
செவுத்துல பல்லி மாதிரி ஒட்டிக்கிட்டு சமந்தா கொடுத்த கலக்கலான கிறங்க வைக்கும் போஸ்!
- 12 hrs ago
ஆக்ட்ரஸ் ரோஷினி கிட்ட பந்தா கிடையாது காஸ்டியும் டிசைனர் ப்ரீத்தியின் முதல் பேட்டி
Don't Miss!
- News
நாம் யானையை எப்படி பார்க்கிறோம்.. யானை நம்மை எப்படி பார்க்கிறது? நீங்களே பாருங்க!
- Lifestyle
இந்த வாரம் இந்த 4 ராசிக்காரர்கள் பணப் பிரச்சனையை சந்திப்பாங்களாம்...
- Automobiles
டாடா ஹாரியர் காரின் விற்பனை அமோகம்... அடுத்து இந்திய சந்தையை கலக்க வருகிறது புதிய சஃபாரி...
- Sports
தம்பிகளா.. அப்படி ஓரமா போய் உட்காருங்க.. இளம் வீரர்களுக்கு நோ சான்ஸ்.. இந்திய அணி முடிவு!
- Finance
யூனியன் பட்ஜெட் 2020-க்காக சிறப்பு ஆப்.. மோடி அரசின் புதிய டிஜிட்டல் சேவை..!
- Education
10-வது தேர்ச்சியா? ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் அரசு வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ஆரி ஜெயிக்கவே கூடாதுன்னு ஏன் சொன்னீங்க.. எதிர்பார்க்காத இடி.. கமல் கேள்வியால் பயந்து நடுங்கிய பாலா!
சென்னை: ஆரி மேல் தான் ஒட்டுமொத்த தப்பும் இருக்குன்னு சண்டை போட்டுவிட்டு, கமல் கேட்டதும் ஒட்டுமொத்த ஹவுஸ்மேட்களும், பெரிய பிரச்சனைலாம் இல்லை சார், சின்ன பிரச்சனை தான் என பம்மினர்.
பாலாஜி முருகதாஸ், ஆரியை பற்றி நல்லா போட்டுக் கொடுத்து கமலிடம் மாட்டி விடலாம் என பேச ஆரம்பித்தார்.
வெடிச்சு சிதற வாய்ப்பு இருந்தும்.. மன உறுதியுடன் இருந்தீர்கள்.. ஆரியை மனதார பாராட்டிய கமல்!
கடைசியில், ஆரி ஜெயிக்கவே கூடாதுன்னு ஏன் சொன்னீங்க என்கிற ஒரே கேள்வியால் பாலாவை பந்தாடிவிட்டார் கமல்.

அப்ரிசியேட் பண்ணல
ஆரியோட என்ன பிரச்சனை என கமல் ஹவுஸ்மேட்களை பார்த்து கேட்டதும், அவர் மத்தவங்க பண்ற நல்ல விஷயத்தை அப்ரிசியேட் பண்ணாமல் அதில் உள்ள சின்ன குறையை கண்டுபிடிக்கிறார், அது மட்டுமே அவரிடம் நான் பார்க்கும் சின்ன குறை என ஆரி செய்யும் அதே வேளையை செய்து விட்டு கமலுக்கு ரியோ பதில் அளித்தார்.ஆரியோட என்ன பிரச்சனை என கமல் ஹவுஸ்மேட்களை பார்த்து கேட்டதும், அவர் மத்தவங்க பண்ற நல்ல விஷயத்தை அப்ரிசியேட் பண்ணாமல் அதில் உள்ள சின்ன குறையை கண்டுபிடிக்கிறார், அது மட்டுமே அவரிடம் நான் பார்க்கும் சின்ன குறை என ஆரி செய்யும் அதே வேளையை செய்து விட்டு கமலுக்கு ரியோ பதில் அளித்தார்.

சோமை பாராட்டிய கமல்
சட்டென கோபம் ஆகிடுறான், அவ்ளோ தான் மத்தபடி ஆரி செய்வது சரி தான் என சோம் மட்டுமே ஆரி பக்கத்தில் உள்ள நியாயத்தை கவனித்து பேசியுள்ளார். உடனே கமல் சார், சண்டை நடக்கும் சூழ்நிலையில், அதை தடுத்து நிறுத்திய சோமசேகரை வெகுவாக பாராட்டினார் கமல்.

90 நாள் பேகேஜ்
ஷிவானி, ஆஜீத், கேபி எல்லாம் ஆரிமேல சின்ன தப்பு மட்டுமே இருக்கு என பேசிவிட்டு சேஃப் ஆகிவிட்டனர். ரியோ, பாலாவை போல ரம்யா பாண்டியனும் வாய் கொடுத்து மாட்டிக்கிட்டார். போன வாரம் நடந்ததை பத்தி பேசாதீங்கன்னு ஆரியிடம் பாலா சண்டை போட்ட நிலையில், வீட்டுக்கு வந்த 90 நாட்களும் ஆரியை புடிக்கல என 90 நாள் பேகேஜ் வைத்து நாமினேட் செய்தேன் என ரம்யா சொல்லி மாட்டிக் கொண்டார்.

சிரிப்பு போச்சு
ரம்யா பாண்டியன் எப்போதுமே நக்கலாக சிரிக்கும் சிரிப்பு முகத்தை கமல் சட்டென பாலாவுக்கு மட்டும் தான் நீங்க சப்போர்ட் பண்றீங்க, ஆரிக்கு ஏன் அப்படி சப்போர்ட் செய்வதில்லை என ஆரி வைத்த அதே குற்றச்சாட்டை ரம்யாவிடம் வைத்ததும் அவர் முகத்தில் வழியும் போலி புன்னகை காணமல் போச்சு.

பஞ்சரான பாலா
ஆரியை பற்றி கமல் ஏன் கேட்கிறார், பின்னாடி என்ன ஆப்பு இருக்கு என எதுவும் யோசிக்காமல், அந்த ஆப்பில் போய் சொருகிக் கொண்டு பஞ்சராகிவிட்டார் பாலா. வெள்ளிக்கிழமை எபிசோடில் அப்படி காட்டு கத்தல் கத்தியதற்கு, பாலாவுக்கு ரெட் கார்டு கொடுக்கப்படும் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், கமல் நறுக்கென குட்டு மட்டும் வைத்து அவரை காப்பாற்றி விட்டார்.

அசிங்கமா திட்டுவியா
ஆரி மன்னிப்பு கேட்டது உங்களுக்கு கேட்கவில்லையா பாலா என கமல் கேட்க, தெரியல சார், கோபத்தில் இருந்தேன் எதுவும் கேட்கல, ஆரி பேசிய எல்லாத்தையும் சொல்றீங்க, வெளியே வந்து வச்சிக்கிறேன் சொல்றீங்க என்ன பண்ணுவீங்க என கேட்டதும், திட்டியிருப்பேன்னு பாலா கமலையும் மதிக்காமல் பேச, கடுப்பான கமல் அதுதான் எல்லாத்தையும் திட்டிட்டியே, வெளியே வந்தா என்ன அசிங்கமா திட்டுவியா என வெளுத்துவிட்டார்.

ஆரி ஜெயிக்கக் கூடாது
யாரு ஜெயித்தாலும் பரவாயில்லை ஆனால், ஆரி ஜெயிக்கக் கூடாதுன்னு ஏன் சொன்னீங்க பாலா என்றதும், அப்போதும் பாலா கஜினியாக மாறிவிட்டார். அப்படியா, நான் எப்போ சொன்னேன். சொல்லவே இல்லையே என்பது போல திருட்டு முழு முழிக்க, குறும்படம் போடாமல் கமலே அதை இனி திருத்திக்கோங்க, அவங்க பார்க்கிறாங்க என முழுக்க முழுக்க பாலாவை நொறுக்கித் தள்ளி விட்டார்.