ஹனிமூன் சென்றிருக்கும் பிரேம்ஜி?.. மனைவி பகிர்ந்த புகைப்படங்கள் ட்ரெண்டிங்.. குவியும் வாழ்த்து
சென்னை: பிரேம்ஜி அமரன் கடந்த மாதம் இந்து என்பவரை திருமணம் செய்துகொண்டார். வெங்கட் பிரபு முன்னிலையில் இந்தத் திருமணம் நடைபெற்றது. இந்து சேலத்தை பூர்வீகமாகக் கொண்டவர். இருவருக்கும் சமூக வலைதளங்களில் ஏற்பட்ட பழக்கம் பின்நாட்களில் காதலாக மாறியது குறிப்பிடத்தக்கது. அதேபோல் இரண்டு பேருக்கும் கிட்டத்தட்ட 20 வயதுவரை வித்தியாசம் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்தச் சூழலில் இந்து தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்திருக்கும் புகைப்படங்கள் ட்ரெண்டாகியுள்ளன.
நடிகர், இசையமைப்பாளர், பாடகர் என பன்முகத்திறமை கொண்டவர் பிரேம்ஜி அமரன். பிரபல இயக்குநர் வெங்கட் பிரபுவின் சகோதரரான அவர் இப்போது பிஸியான நடிகராக வலம் வந்துகொண்டிருக்கிறார். விஜய்யை வைத்து வெங்கட் பிரபு இப்போது இயக்கிவரும் GOAT படத்திலும் முக்கியமான வேடத்தில் நடித்துவரும் அவர்; அஜித்தின் தீவிர ரசிகர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது விஜய்யுடன் இணைந்து நடிப்பதால் இப்படத்தில் எந்த மாதிரி நடித்திருப்பார் என்பதை பார்க்க ரசிகர்கள் ஆவலோடு இருக்கிறார்கள்.

நோ திருமணம்: பிரேம்ஜிக்கு 45 வயது ஆகிறது. ஆனால் திருமணம் செய்துகொள்ளாமல் இருந்தார். அதுகுறித்து கேட்டால் ஜாலியான பதிலையே சொல்வார். அதேபோல் தான் அணிந்து வந்த டி ஷர்ட்டுக்களிலும் பெரும்பாலும் நான் ஒரு முரட்டு சிங்கிள் என்ற வாசகம் இருக்கும்படி பார்த்துக்கொள்வார். இதனையெல்லாம் பார்த்த ரசிகர்கள்; ஒருவேளை பிரேம்ஜிக்கு திருமணம் மீது சுத்தமாக ஆசை இல்லையோ என்ற கேள்வியை தொடர்ந்து சமூக வலைதளங்களில் எழுப்பிவந்தனர்.
சிம்பிளாக முடிந்த திருமணம்: இந்தச் சூழலில் திருத்தணி முருகன் கோயிலில் பிரேம்ஜியின் திருமணம் நடைபெற்றது. அவர் இந்து என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டார். அவர் சேலத்தை சேர்ந்தவர் என்றும்; வங்கியில் பணியாற்றுகிறார் என்றும் சொல்லப்படுகிறது. இத்திருமணத்தில் பிரேம்ஜியின் குடும்பத்தினர், நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்துகொண்டனர். ''
காதல் மலர்ந்தது எப்படி?: இருவருக்கும் முதலில் முகநூலில் ஆரம்பித்த பழக்கம்; பிறகு வாட்ஸ் அப்பில் நீண்டிருக்கிறது. அந்த வாட்ஸ் அப் உரையாடலில்தான் இருவருக்குமான காதல் மலர்ந்ததாகவும்; முதலில் இந்துதான் பிரேம்ஜியிடம் தனது காதலை வெளிப்படுத்தியதாகவும் பேச்சு ஒன்று ஓடிக்கொண்டிருக்கிறது. இருவருக்கும் 20 வயதுவரை வித்தியாசம் இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.
ட்ரெண்டாகும் புகைப்படங்கள்: திருமணம் ஆனதிலிருந்து பிரேம்ஜியும், தானும் இருக்கும் புகைப்படங்களையும், வீடியோக்களையும் இந்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து பகிர்ந்துவருகிறார். சமீபத்தில்கூட பிரேம்ஜி சமையல் செய்யும் வீடியோவை பகிர்ந்திருந்தார் இந்து. இந்நிலையில் இப்போது புதிய புகைப்படங்களை பகிர்ந்திருக்கிறார் இந்து. அந்தப் புகைப்படங்களில் இந்துவும் பிரேம்ஜியும் கைகள் கோர்த்தபடியும், ஒருவரையொருவர் அணைத்தபடியும் இருக்கிறார்கள். இதனைப் பார்த்த ரசிகர்கள், ஓஹோ இரண்டு பேரும் ஹனிமூன் போயிருக்காங்களோ.. இப்படியே வாழும் காலம்வரை காதலோடும், ஒற்றுமையோடும் வாழ வாழ்த்துகள் என்று சமூக வலைதளங்களில் கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.


Click it and Unblock the Notifications











