பிக்பாஸில் மீண்டும் ஈழத்தமிழ்.. அத்தானுக்கு ஆசையாய் பால் கொழுக்கட்டை செய்து கொடுத்த ஆரியின் மனைவி!

சென்னை: நடிகர் ஆரியின் திருமண நாளை முன்னிட்டு அவரது மனைவி அவருக்கு ஆசை ஆசையாய் பால்கொழுக்கட்டை செய்து அனுப்பி வைத்தார்.

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள போட்டியாளர்களில் ஒருவர் ஆரி அர்ஜுனன். பிக்பாஸ் வீட்டில் நேர்மையாக விளையாடி ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

இந்நிலையில் ஆரி நேற்று தனது திருமண நாளை கொண்டாடினார். இதனை முன்னிட்டு பிக்பாஸ் வீட்டில் உள்ள கேமராவில் தனது மனைவிக்கு வாழ்த்து கூறினார்.

மனைவிக்கு வாழ்த்து

மனைவிக்கு வாழ்த்து

கடந்த வாரம் ஞாயிற்றுக் கிழமை கமல் வந்தபோதே அவரது வாயால் திருமண நாள் வாழ்த்து பெற விரும்பினார் ஆரி. அப்போது தன்னுடைய கல்யாண நாளை சொல்லி தனது மனைவிக்கும் மகளுக்கும் வாழ்த்து கூறுமாறு கூறினார்.

உருக்கமாக பேசிய ஆரி

உருக்கமாக பேசிய ஆரி

இந்நிலையில் நேற்றைய எபிசோடில் என்னை மணப்பதற்காக உன் தாய் தந்தையை பிரிந்தாய் உன் குடும்பத்தை பிரிந்தாய். உன் தாய் நாட்டை பிரிந்தாய்.. என்ன கொடுப்பேன் உனக்கு.. என் அன்பை இறுதிவரை கொடுத்துக் கொண்டே இருப்பேன் உனக்கு என உருக்காமாக பேசி தனது மனைவிக்கு வாழ்த்து கூறினார்.

அத்தானுக்கு வாழ்த்து

அத்தானுக்கு வாழ்த்து

இதனை தொடர்ந்து பிக்பாஸ் வீட்டில் உள்ள டிவியில் ஆரியின் மனைவி தனது குழந்தையோடு வந்து வாழ்த்து சொல்லும் வீடியோ ஒளிபரப்பப்பட்டது. அதில் பேசிய அவரது மனைவி நதியா, திருமண நாள் வாழ்த்துகள் அத்தான்.. நாம ரெண்டு பேரும் 2வது முறை கல்யாண நாளில் பிரிந்திருப்பது.

பால் கொழுக்கட்டை

பால் கொழுக்கட்டை

உங்களை ரொம்ப மிஸ் பண்றேன். பால் கொழுக்கட்டை செய்து கொடுத்திருக்கேன். நீங்களும் சாப்பிடுங்க.. எல்லாருக்கும் கொடுங்க.. ஃபேமிலில எல்லாரும் பிக்பாஸ் பாக்குறாங்க.. பிரண்ட்ஸ் பாக்குறாங்க.. நல்லா விளையாடுறீங்க.. ஐ லவ் யூ.. ஐ மிஸ் யூ.. லாட்ஸ் ஆஃப் கிஸஸ் டூ யூ.. என்று கூறினார்.

கிளிப்பிள்ளை போல் க்யூட்டாக

கிளிப்பிள்ளை போல் க்யூட்டாக

தொடர்ந்து தனது மகளுடன் பேசிய நதியா, அவரிடம் வாழ்த்து சொல்லி, சொல்ல சொன்னார். மேலும் அப்பா ஐ மிஸ் யூ, லாட்ஸ் ஆஃப் கிஸஸ் டூ யூ.. ஐ லவ் யூ என அம்மா சொல்ல சொல்ல அதை அப்படியே கிளிப்பிள்ளை போல க்யூட்டாக சொன்னார் ஆரியின் குட்டிமகள். அந்த வீடியோவை அப்படி ரசித்து பார்த்தார் ஆரி.

மீண்டும் ஒலித்த ஈழத்தமிழ்

மீண்டும் ஒலித்த ஈழத்தமிழ்

கடந்த சீசனில் தர்ஷன், லாஸ்லியா என இலங்கையை சேர்ந்த ஈழத்தமிழ் போட்டியாளர்கள் பங்கேற்றனர். அப்போது பிக்பாஸ் வீட்டுக்குள் ஒலித்த ஈழத்தமிழ் தற்போது ஆரியின் மனைவியின் மூலம் மீண்டும் ஒலித்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X