அக்கம் பக்கத்து நாடுகள்ல கரோனா பீதி... தாய்லாந்து ஷூட்டிங்கை சத்தம் போடாமல் தள்ளி வைத்த படக்குழு

By

Recommended Video

மரண படுக்கையிலும் மாறாத காதல்.. கொரோனாவால் பாதிக்கப்பட்ட வயசான தம்பதியின் கடைசி குட்பை - வீடியோ

ஐதராபாத்: கரோனா வைரஸ் தீவிரம் காரணமாக தாய்லாந்தில் நடக்க இருந்த ஷூட்டிங் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

சீனாவில் உள்ள உஹான் நகரத்தில் நோவல் கொரானா என்ற புதிய வகை வைரஸ் தொற்று நோய் தாக்குதல் கண்டறியப்பட்டது.

ஒருவரில் இருந்து இன்னொரு மனிதருக்கு எளிதாகப் பரவ கூடிய இந்த வைரஸால் உலகம் முழுவதும் பீதி ஏற்பட்டுள்ளது.

உலகம் முழுவதும்

உலகம் முழுவதும்

இந்த வைரஸ் காரணமாக சீனாவில் வுஹன் நகரம் மூடப்பட்டுள்ளது. சீனா மட்டுமின்றி உலகம் முழுக்க மொத்தம் 23 நாடுகளில் இந்த வைரஸ் பரவிதுள்ளதாகக் கூறப்படுகிறது. கொரோனா வைரஸால் சீனாவில் பலி எண்ணிக்கை 425 ஆக உயர்ந்துள்ளது. மொத்தம் 20,400 பேர் வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடைந்துள்ளனர்.

சிறப்புக் குழுக்கள்

சிறப்புக் குழுக்கள்

இந்த வைரஸ் இந்தியாவில் கேரளாவில் மூன்று பேரைத் தாக்கியுள்ளது. மூன்று பேருமே சீனாவிற்கு படிக்க சென்றவர்கள். இதில் ஒருவர் மாணவி. இதனால் கேரளாவில் மாநில பேரிடர் அறிவிக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து குறிப்பாக சீனாவில் இருந்து வரும் பயணிகளை கண்காணிக்கும் வகையில் விமான நிலையங்களில் சிறப்புக் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.

நாகார்ஜுனா

நாகார்ஜுனா

இந்நிலையில், நாகார்ஜுனா நடிக்கும் படத்தின் ஷூட்டிங்கை கொரானா வைரஸ் காரணமாக தள்ளி வைத்துள்ளனர். நடிகர் நாகார்ஜுனா வைல்ட் டாக் என்ற படத்தில் இப்போது நடித்துவருகிறார். சையாமி கெர் ஹீரோயினாக நடிக்கிறார். சாலமன் இயக்கும் இந்தப் படத்தில் நாகார்ஜுனா, தேசிய பாதுகாப்பு படை வீரராக வருகிறார்.

தாய்லாந்து காடுகளில்

தாய்லாந்து காடுகளில்

இதன் ஷூட்டிங் இப்போது கோவாவில் நடந்துவருகிறது. இதன் அடுத்த ஷெட்யூலை தாய்லாந்து காடுகளில் நடத்த படக்குழு திட்டமிட்டிருந்தது. அங்கு 20 நாட்கள் படப்பிடிப்பை நடத்த முடிவு செய்திருந்தது. இந்நிலையில் கரோனா வைரஸ் தாய்லாந்திலும் கடுமையாகப் பரவி இருப்பதால் படப்பிடிப்பை தள்ளி வைத்துள்ளது.

தற்காப்புக் கலை

தற்காப்புக் கலை

இதுபற்றி ஹீரோயின் சையாமி கெர் கூறும்போது, 'இந்தப் படத்துக்காக கடந்த ஒரு மாதமாக தற்காப்புக் கலை பயிற்சி பெற்றுவந்தேன். அதோடு தாய்லாந்தில் நடக்கும் ஷூட்டிங்கை ஆவலோடு எதிர்பார்த்திருந்தேன். ஆனால் கரோனா வைரஸ் காரணமாக, படக்குழு ஷூட்டிங்கை தள்ளி வைத்துவிட்டது என்று தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Read more about: nagarjuna
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X