மெர்சல் டீசர் சாதனையை 2.0 டீசர் முறியடிக்கவில்லையா?
சென்னை: மெர்சல் பட டீசர் சாதனையை 2.0 முறியடிக்குமா என கேள்வி எழுந்துள்ளது.
அறிவித்தபடி ரஜினிகாந்தின் 2.0 டீசர் இன்று காலை 9 மணிக்கு சமூக வலைதளங்களிலும், திரையரங்குகளிலும் வெளியிடப்பட்டது.
அசாத்திய சக்தியோடு உலகை அழிக்க திட்டமிடும் வில்லன் அக்ஷய்குமாரின் திட்டத்தை சிட்டி ரோபோ எப்படி எதிர்கொள்கிறது என்பதே படத்தின் கதை எனத் தெரிகிறது.

க்ரோவ் மேனாக அக்ஷய் வருவது, உலகம் முழுவதும் செல்போன்கள் மாயமாவது, பல்லாயிரக்கணக்கான ரோபோக்கள் தோன்றுவது, சிட்டி ரோபோ பறந்து பறந்து ஆக்ஷனில்; ஈடுபடுவது என கிராபிக்ஸ் காட்சிகளில் ரொம்பவே மெனக்கட்டுள்ளனர்.
காலை 9 மணிக்கு ரிலீஸ் செய்யப்பட்ட டீசர் கடந்த ஆண்டு வெளியான விஜய்யின் மெர்சல் திரைப்பட டீசரின் சாதனையை முறியடிக்காது என பரவலாக பேசப்படுகிறது. தமிழில் மட்டுமே வெளியான மெர்சல் டீசர், ஐந்து மணி நேரத்தில் ஐந்து மில்லியன் மற்றும் இந்தியா அளவில் வேகமாக அதிகம் பார்க்கப்பட்ட டீசர் எனும் சாதனையப் படைத்தது. 19 மணி நேரத்தில் பத்து மில்லியன் பார்வையாளர்களை பெற்றது.
ஆனால் 2.0 டீசர், தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் வெளியாகியுள்ளது. தற்போதைய நிலவரப்படி தமிழ், தெலுங்கு மொழிகளில் இரண்டேகால் லட்சம் பார்வையாளர்களைத் தாண்டியுள்ளது. ஒரே மொழியில் வெளியான மெர்சல் டீசரின் சாதனையை 2.0 டீசர் குறிப்பிட்ட காலத்திற்குள் முறியடிக்காது என விஜய் ரசிகர்கள் ட்வீட் செய்து வருகின்றனர்.
ஆனால் 2.0 டீசர் இந்தியில் ஐந்து லட்சத்தை நெருங்கியுள்ளது. இந்த வேகத்தைப் பார்க்கும்போது மிக விரைவாகவே மெர்சல் திரைப்பட டீசரின் சாதனையை முறியடிக்கும் எனத் தெரிகிறது.


Click it and Unblock the Notifications











