twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பாலியல் வன்கொடுமையில் இருந்து ஜீன்ஸ் பேன்ட் ஒரு பெண்ணை காப்பாற்றுமா? வைரலாகும் My Bloody Jeans!

    |

    சென்னை: பாலியல் வன்கொடுமையில் இருந்து இளம் பெண் ஒருவரை ஜீன்ஸ் பேன்ட் காப்பாற்றுவது போல உருவாக்கப்பட்டுள்ள மினி வெப் சீரிஸ் யூடியூபில் சக்கைப் போடு போட்டு வருகிறது.

    Recommended Video

    SHORT HAIR SWEETIES| HEROINES WITH SHORT HAIR| FILMIBEAT TAMIL

    பெண்கள் ஜீன்ஸ் பேன்ட் அணியக்கூடாது என்றும், அப்படி அணியும் பெண்களை தவறாக பார்ப்பதும் சமுதாயத்தில் நடந்து கொண்டு தான் இருக்கிறது.

    ஏன், கல்லூரிகளிலேயே மாணவ மாணவியர்கள் ஜீன்ஸ் அணிந்து கொண்டு வரக் கூடாது என்று பல கல்லூரிகள் தடை விதித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

    18+: கணவருடன் போனில் பேசிக்கொண்டே கையை வைத்து.. அடுத்து நடந்த ஜிலீர்.. மிரள வைக்கும் வெப் சீரிஸ்! 18+: கணவருடன் போனில் பேசிக்கொண்டே கையை வைத்து.. அடுத்து நடந்த ஜிலீர்.. மிரள வைக்கும் வெப் சீரிஸ்!

    ஜீன்ஸ் பேன்ட்டை வைத்து கதை

    ஜீன்ஸ் பேன்ட்டை வைத்து கதை

    இந்நிலையில், ஒரு ஜீன்ஸ் பேன்ட்டை வைத்து எடுக்கப்பட்ட ஷார்ட் பிலிம் ஒன்று 25க்கும் மேற்பட்ட விருதுகளை வாரிக் குவித்துள்ளது. ஒரு ஜீன்ஸ் பேன்ட் எப்படி ஒரு பெண்ணை பாலியல் பலாத்காரத்தில் இருந்து காப்பாற்றுகிறது என்பது போல உருவாக்கப்பட்டுள்ள ‘My Bloody Jeans' குறும்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய பாராட்டுக்களை அள்ளி உள்ளது.

    மலையாள குறும்படம்

    மலையாள குறும்படம்

    மலையாள இயக்குநர்கள் ஜீ, ஆமி மற்றும் ஷிபில் ஆகியோர் இணைந்து இயக்கியுள்ள 25 நிமிட குறும்படம் தான் My Bloody Jeans. கேரளாவின் எர்ணாகுளத்தில் எடுக்கப்பட்ட இந்த குறும்படம் ஒரு ஜீன்ஸ் பேன்ட்டை பற்றிய கதையை அழகாகவும் ஆழமாகவும், பெண்களின் பாதுகாப்பு கருதியும் உருவாக்கப்பட்டுள்ளது.

    25க்கும் மேற்பட்ட விருதுகள்

    25க்கும் மேற்பட்ட விருதுகள்

    தாதா சாகேப் பால்கே திரைப்பட திருவிழாவில் ஸ்பெஷல் ஜூரி விருது உள்பட மொத்தம் 25க்கும் மேற்பட்ட விருதுகளை இந்த குறும்படம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த குறும்படம் மினி வெப்சீரிஸாக தமிழில் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்டு இங்கேயும் வைரலாகி வருகிறது.

    மினி வெப்சீரிஸ்

    மினி வெப்சீரிஸ்

    சித்தாரா விஜயன் லீடு ரோலில் நடித்துள்ள இந்த குறும்படம் தற்போது தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டு மினி வெப்சீரிஸாக வெளியாகி உள்ளது. T Media வின் திருசெந்திலரசு ஸ்ரீனிவாசன் தமிழ் ரசிகர்களுக்காக இந்த சிறப்பான பணியை செய்துள்ளார். மூன்று எபிசோடுகளாக பிரிக்கப்பட்டு, மினி வெப்சீரிஸாக வெளியாகி வைரலாகி வருகிறது.

    ஜீன்ஸ் எப்படி காப்பாற்றும்

    ஜீன்ஸ் எப்படி காப்பாற்றும்

    ஒரு பெண்ணை பாலியல் வன்புணர்வில் இருந்து ஜீன்ஸ் எப்படி காப்பாற்றும் என்பதை இந்த My Bloody Jeans மினி சீரிஸை பார்த்தால், தெளிவாக விளங்கும். மேக்னா பிரசாந்த் எனும் லீடு ரோலில் நடிகை சித்தாரா விஜயன் அருமையாக நடித்துள்ளார். டைட்டான ஜீன்ஸை அவர் ஆரம்பத்தில் அணிய சிரமப்படுவதில் இருந்து இறுதியில் அந்த ஜீன்ஸ் எப்படி அவரை காப்பாற்றுகிறது என்பது வரை இயக்குநர் அற்புதமாக கதை சொல்லி இருக்கிறார்.

    பெண்களின் பிரச்சனை

    பெண்களின் பிரச்சனை

    மேலும், பணிக்கு செல்லும் பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் பிரச்சனைகளையும், அவர்கள் சந்திக்கும் சங்கடங்களையும், பெரும்பாலான பெரிய நிறுவனங்களிலேயே பெண்களின் பீரியட்ஸ் நேரத்தில் அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதி கூட செய்யப்படாமல் இருப்பது என பலவற்றை தோலுரித்துக் காட்டுகிறது இந்த மினி சீரிஸ்.

    சும்மா கதவிடாதீங்க பா

    சும்மா கதவிடாதீங்க பா

    அதெப்படி ஒரு ஜீன்ஸ் பெண்ணை பாலியல் பலாத்காரத்தில் இருந்து காப்பாற்றும் என்ற மனநிலையில், ட்ரோல் செய்பவர்களுக்கு நொய்டாவில் இது போன்ற ஒரு நிஜ சம்பவமே நடந்துள்ள கதை தெரிந்தால், நிச்சயம் அவர்களின் வாய் அடைத்துத் தான் போகும். அதை அடிப்படையாகக் கொண்டே இந்த குறும்படம் உருவாகி உள்ளது.

    உண்மையாவே ஜீன்ஸ் காப்பாற்றுமா?

    இப்படி ஒரு கேள்வி எழும் என்பதை நன்கு உணர்ந்த படக்குழு, எப்போதுமே பெண்களை ஜீன்ஸ் காப்பாற்றும் என்று சொல்ல முடியாது. சமுதாயத்தில் ஒரு பெண்ணுக்கு அநீதி நடக்க விடாமல், அருகில் இருக்கும் மக்கள் தான் குரல் கொடுத்து காப்பாற்ற வேண்டும் என்ற எண்ட் கார்டுடன் அற்புதமாக விழிப்புணர்வு கருத்தை தாங்கி உருவாகி உள்ள இந்த மினி வெப்சீரிஸை பெண்கள் மட்டுமின்றி முக்கியமாக அனைத்து ஆண்களும் பார்க்க வேண்டும்.

    English summary
    My Blood Jeans a Malayalam shortfilm, which was dubbed in Tamil and released as a three episode mini webseries highlight the women safety and how a pair of jeans save a lady from sexual assault.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X