twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இந்த ஆவி(குமார்)யாவது உதயாவைக் காப்பாற்றுமா?

    By Manjula
    |

    சென்னை: கரண் மற்றும் பிரபு இணைந்து நடித்த திருநெல்வேலி திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் உதயா. 15 ஆண்டுகளாக நடித்துக் கொண்டிருக்கும் இவர், நாயகனாக நடித்து இன்று திரைக்கு வந்திருக்கும் படம் ஆவிகுமார்.

    தமிழ் சினிமாவில் தொட்டுத் தொடரும் பாரம்பரியம் போல தொடர்ந்து வருகிறது பேய்களின் படங்கள், அந்த வரிசையில் இன்று வெளியாகி இருக்கும் ஆவிகுமார் திரைப்படத்திலும் பேய்களைப் பற்றித்தான் கூறியிருக்கிறார்கள்.

    இந்தத் திரைப்படம் எனது சினிமா வாழ்க்கையை மாற்றும் என்று படம் வெளிவருவதற்கு முன்பு நம்பிக்கை தெரிவித்து இருந்தார் நடிகர் உதயா, ஆவிகுமார் உதயாவின் நம்பிக்கையை காப்பற்றி இருக்கிறதா? என்று பார்க்கலாம்.

    ஆவிகுமார் கதை

    ஆவிகுமார் கதை

    படத்தோட தலைப்பே கதையை சொல்லும். ஆவி அமுதா மாதிரி, நம்ம ஹீரோ குமார் ஆவியோட பேசறவர்.

    இவரோட திறமை தொலைக்காட்சி மூலமா ஊருக்கே தெரிய மலேசியாவில ஒரு நிகழ்ச்சி நடத்தறதுக்கு வாய்ப்பு வருது, ஹீரோ மலேசியா போறார். அங்கே மக்கள் முன்னிலையில நிகழ்ச்சி நடத்தும் போது ஒரு கொலையைக் கண்டுபிடிக்கிறாரு ஹீரோ.

    அந்தக் கொலையை யார் செய்தது? இதுதான் படத்தோட கதை. ஹீரோயினே இல்லையான்னு யோசிக்கிறீங்களா... கொல்லப்பட்டவரே ஹீரோயின்தான்!

    ஆவிகுமார் - உதயா

    ஆவிகுமார் - உதயா

    இந்தப் படத்தில் நன்றாக நடித்திருக்கிறார் உதயா. மலேசியாவுக்கு நிகழ்ச்சி நடத்த சென்றவர் அந்தக் கொலையைச் செய்தது யார் என்று கண்டுபிடிக்க மலேசியாவில் வீடு எடுத்துத் தங்குகிறார். அவர் தங்கும் வீட்டில் நாயகி கனிகா சவுத்ரி பேயாக நடமாட அவரைப் பற்றி கண்டுபிடிக்க முயல்வது, கண்டுபிடிக்கும் முயற்சியில் சிக்கல்கள் வர அதனை சரிசெய்து மேலும் முயற்சிகள் எடுப்பது என்று படத்தைத் தாங்கி இருக்கிறார். ஆவிகுமார் உதயாவிற்கு நிச்சயம் சொல்லிக் கொள்ளும் படம்தான்.

    அழகான பேய் -கனிகா திவாரி

    அழகான பேய் -கனிகா திவாரி

    அழகான கனிகா திவாரியை முதல் படத்திலேயே ஆவியாக நடமாட விட்டிருக்கிறார்கள், பேய்களுக்கு உரிய எந்த மேக்கப்பும் இல்லாமல் அழகான பேயாக வந்து போகிறார் நாயகி.அவர் பேய் என்று மக்கள் நம்புவதற்காக கூந்தலை மட்டும் பறக்க விட்டிருப்பது நன்று.

    துடிப்பான காவலர்- நாசர்

    துடிப்பான காவலர்- நாசர்

    மலேசியா போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கும் நாசர், வழக்கம் போல தனது கம்பீரமான நடிப்பை இந்தப் படத்திலும்

    அளித்திருக்கிறார். மூடநம்பிக்கையை மறுக்கும் போதும், உதயாவின் மூலம் உண்மைகள் அறியும் போது அதனை ஏற்று நாயகனுக்கு ஆதரவாக இருப்பது என்று கச்சிதமாக ஜொலித்திருக்கிறார்.

    சொதப்பிய 2 இசையமைப்பாளர்கள்

    சொதப்பிய 2 இசையமைப்பாளர்கள்

    படத்தில் ஸ்ரீகாந்த் தேவா, விஜய் ஆண்டனி என்று 2 இசையமைப்பாளர்கள் இசையமைத்திருக்கிறார்கள். ஆனால் 2 பேர் இசையமைத்தும் கூட பாடல்களும் பின்னணி இசையும்மனதில் நிற்கவில்லை என்பது படத்திற்கு பெரிய பலவீனம். பேய்ப் படத்திற்கு பலமே மிரட்டும் இசைதான், இசையில் கோட்டை விட்டதால் படத்தின் ஓட்டைகள் பெரிதாகத் தெரிகின்றன.

    காண்டிபன் - குறி தவறி விட்டது

    காண்டிபன் - குறி தவறி விட்டது

    சிற்சில இடங்களில் கவரும் இயக்குநர் இன்னும் சற்று மெனக்கெட்டிருந்தால் ஆவிகுமார், எல்லோரையும் கவர்ந்து இழுத்திருக்கும் படமாக அமைந்து இருக்கும். எடுத்துக் கொண்ட கதையில் பெரிய அளவில் மாற்றங்கள் செய்யாதது படத்தில் குறையாகத் தேங்கி நிற்கிறது, மேலும் ஏற்கனவே வெளிவந்த பேய்ப் படங்களின் நெடியும் ஆங்காங்கே சற்று பலமாக வீசுவதால் ஆவி குமார் அரைத்த மாவாகி விட்டிருக்கிறது.

    English summary
    Aavi kumar is a mixture of comedy + thrilling subject.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X