Don't Miss!
- Automobiles
காரா? இல்ல கப்பலா? டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காரின் புதிய அவதாரத்தை கண்டு மிரளும் போட்டி நிறுவனங்கள்!
- News
இருக்குற சிக்கல்ல பேனா நினைவு சின்னம் எதுக்கு? உருப்படியா ஏதாவது செய்யுங்க.. சீமானுக்கு சசிகலா ஆதரவு
- Lifestyle
கருட புராணத்தின் படி இந்த 5 விஷயங்களை செஞ்சா, மரணத்திற்கு பின் நரகம் செல்வதை தவிர்க்கலாம்..!
- Sports
"கேப்டன் குற்றச்சாட்டு; துணைக்கேப்டன் பாராட்டு" நியூசி,தொடரில் ஏற்பட்ட சர்ச்சை..குழம்பும் ரசிகர்கள்
- Technology
தரமான 5G ஸ்மார்ட்போனை இந்தியாவுக்கு கொண்டுவரும் விவோ.! என்னென்ன அம்சங்கள்?
- Finance
பொறுப்புக்கு வந்த வாரிசுகள்.. குமார் மங்கலம் பிர்லா நிம்மதி..!
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
எவிக்ஷனில் தப்பிய தாமரை... அப்போ இந்தவாரம் வெளியேற்றப்படுவது இவரா?
சென்னை: நட்பு, உழைப்பு, அதிர்ஷ்டம் என தொடர்ந்து தாமரையை ஏகப்பட்ட விஷயங்கள் இந்த வாரம் நாமினேஷனில் இருந்து அவரை காப்பாற்றி உள்ளது.
கடைசி வரை தப்பித்து விட வேண்டும் என போராடிய அபிநய்க்கு கடைசி நேரத்தில் அதிர்ஷ்டம் அடிக்காததால் நாமினேஷனில் இடம்பெற்றுள்ளார்.
2021ல்
பெரிய
நடிகர்கள்
இல்லாமல்
வெற்றி
பெற்ற
5
தமிழ்
படங்கள்!
இந்த வார இறுதியில் இதன் விளைவு அபிநயை பாதிக்குமா என்பதை ஆவலோடு காண ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

பிக் பாஸ் பண்ண நாமினேஷன்
இந்த வாரம் ஹவுஸ்மேட்களை நாமினேட் செய்ய சொன்ன பிக் பாஸ் கடைசியில் அவரே கடுப்பாகி ஒட்டுமொத்த 11 பேரையும் நானே நாமினேட் செய்கிறேன் என அனைவரையும் நாமினேட் செய்து விட்டார். ஆனால், நாமினேஷனில் இருந்து தப்பிக்க சில பல டாஸ்க்குகளில் வெல்ல வேண்டும் என்கிற வாய்ப்பையும் ஏற்படுத்தி கொடுத்தார்.

நம்பர் ஒன் சிபி
நம்பர் ஒன் இடத்தை தயங்காமல் பிடித்துக் கொண்ட சிபி நிரூப், அமீர், சஞ்சீவ், ராஜு என யார் வந்தாலும் சற்றும் சறுக்காமல் வாதாடி முதல் இடத்தை பிடித்த நிலையில், முதல் ஆளாக நாமினேஷனில் இருந்து இந்த வாரம் காப்பாற்றப்பட்டார்.

இரண்டாவது சேவ்
இந்த வாரம் நாமினேஷனில் வந்தால் நம்மை தான் வெளியே அனுப்பி விடுவார்கள் என நினைத்து பயந்த நிரூப் சிபியிடம் அப்படி சண்டை போட்டும் முதல் டாஸ்க்கில் ஜெயிக்க முடியவில்லை. இரண்டாவதாக கொடுக்கப்பட்ட பஸ் டாஸ்க்கிலாவது ஜெயித்தே ஆக வேண்டும் என நினைத்து கடைசி வரை பஸ்சில் இருந்து இறங்காமல் விளையாடி இரண்டாவதாக சேவ் ஆனார்.

தாமரைக்கு அதிர்ஷ்டம்
சிபி மற்றும் நிரூப் ஜெயித்தது போல ஒரே ஒரு டாஸ்க்கில் ஜெயிக்காமல் மற்ற ஹவுஸ்மேட்கள் அனைவரிடமும் பிசிக்கல் மற்றும் மென்ட்டல் டாஸ்க் என அனைத்திலும் போட்டி போட்டு கடைசியாக அபிநயிடம் ஒன் டு ஒன் மோதலாக நடந்த சீட்டு கட்டு டாஸ்க்கில் அதிர்ஷ்டம் அடிக்கவே மூன்றாவது நபராக இந்த வாரம் நாமினேஷனில் இருந்து சேவ் ஆனார் தாமரை.

அபிநய் தான் அவுட்டா?
நிரூப்பை போலவே நாமும் நாமினேஷனில் வந்தால் வெளியேறி விடுவோம் என நினைத்து பயந்த அபிநய் கடைசி வரை டஃப் போட்டி கொடுத்து வெற்றி பெற்று வந்தாலும், கடைசியாக அவருக்கு அதிர்ஷ்டம் அடிக்காத காரணத்தினால் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து அபிநய் எவிக்ட் செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அபிநய்க்கு பதிலாக அமீர், அக்ஷரா அல்லது வருணை வெளியேற்றினாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை.