ஆன்ட்டி, லிப்ஸ்டிக் பிரச்சனை: சோனம் கபூரை மன்னித்து திருமணத்திற்கு வருவாரா ஐஸ்வர்யா ராய்?
மும்பை: பாலிவுட் நடிகை சோனம் கபூர் ஐஸ்வர்யா ராயுடன் சமாதானம் ஆகி அவரை தனது திருமணத்திற்கு அழைத்துள்ளார்.
பாலிவுட் நடிகை சோனம் கபூர் தனது காதலர் ஆனந்த் அஹுஜாவை நாளை திருமணம் செய்து கொள்கிறார். திருமணம் மும்பையில் நடைபெறுகிறது.
முன்னதாக நேற்று மெஹந்தி நிகழ்ச்சி நடைபெற்றது.

ஐஸ்வர்யா ராய்
சோனம் கபூர் ஐஸ்வர்யா ராயுடனான பிரச்சனையை முடித்து வைத்துள்ளார். ஐஸ்வர்யாவுக்கு போன் செய்து தனது திருமணத்திற்கு வருமாறு அழைத்துள்ளார். ஐஸ்வர்யாவும் பழைய விஷயங்களை எல்லாம் மறந்துவிட்டு வருகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

ஆன்ட்டி
சில ஆண்டுகளுக்கு முன்பு பேட்டி ஒன்றில் சோனம் கபூர் ஐஸ்வர்யா ராயை ஆன்ட்டி என்று கூறினார். இது ஐஸ்வர்யாவுக்கு பிடிக்கவில்லை. என் அப்பா அனில் கபூருடன் சேர்ந்து நடித்துள்ளார் என்பதால் ஆன்ட்டி என்றேன் என விளக்கம் அளித்தார் சோனம்.

நடிகைகள்
சோனம் ஆன்ட்டி என்று கூறியதில் இருந்து அவருக்கும், ஐஸ்வர்யா ராய்க்கும் இடையே பனிப்போர் நடந்தது. இந்நிலையில் கேன்ஸ் திரைப்பட விழாவில் ஐஸ்வர்யா கண்ணை பறிக்கும் நிறத்தில் லிப்ஸ்டிக் போட்டதையும் விமர்சித்தார் சோனம். இது ஐஸ்வர்யா ராயை மேலும் கோபம் அடைய வைத்தது.

வருவாரா?
நடந்ததை எல்லாம் மறந்துவிட்டு சோனம் ஐஸ்வர்யா ராயை தனது திருமணத்திற்கு அழைத்துள்ளார். ஆனால் ஐஸ்வர்யா ராய் திருமணத்திற்கு வருவாரா என்பது பெரிய கேள்வி. அமிதாப் பச்சன், ஜெயா, அபிஷேக் பச்சன் ஆகியோரை சோனமின் தந்தை அனில் கபூர் மற்றும் தாய் சுனிதா ஆகியோர் அழைத்துள்ளனர். அனில், சுனிதா ஐஸ்வர்யா ராயையும் நேரில் சந்தித்து அழைப்பிதழ் அளித்துள்ளனர்.

ஸ்ரீதேவி
சோனமின் திருமணம் வெளிநாட்டில் பிரமாண்டமாக நடப்பதாக இருந்தது. ஆனால் பெரியம்மா ஸ்ரீதேவி இறந்த நிலையில் பிரமாண்டம் எல்லாம் வேண்டாம் என்று கூறிவிட்டார் சோனம். இதையடுத்து திருமணம் மும்பையில் எளிமையாக நடக்கிறது.


Click it and Unblock the Notifications











