உரிமம் கிடச்சுடுச்சு...ஆனா டைரக்டர் கிடைக்கல... இந்தி த்ரிஷியம் 2 தாமதத்திற்கு இது தான் காரணமா ?
மும்பை : மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் 2013 ம் ஆண்டு வெளியான த்ரிஷியம் படம் தமிழ், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. இதன் ஒரிஜினல் படம் மட்டுமல்ல ரீமேக் படங்களும் சூப்பர் ஹிட் ஆகின.

இதனையடுத்து மலையாளத்தில் த்ரிஷியம் படத்தின் இரண்டாம் பாகம் தயாரிக்கப்பட்டு, சமீபத்தில் ரிலீஸ் செய்யப்பட்டது. முதல் பாகத்தை போன்றே 2 ம் பாகமும் திரில்லர் நிறைந்ததாக எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழிலும் பாபநாசம் 2 தயாரிப்பிற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது.
இந்தியிலும் 2 ம் பாகத்தை தயாரிக்க படக்குழு முடிவு செய்துள்ளது. இதற்கான உரிமத்தையும் தயாரிப்பாளர் குமார் மங்கட் பெற்று விட்டார். இதையும் அஜய் தேவ்கன் இணைந்து தயாரிக்க முடிவு செய்துள்ளார்.
ஆனால் அஜய் தேவ்கன் வேறு சில படங்களில் பிஸியாக இருப்பதால் இந்த ஆண்டு இறுதியில் இப்படத்தின் வேலைகளை துவக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. த்ரிஷியம் இரண்டாவது பாகத்திலும் நடிகை தபுவை நடிக்க வைக்க முயற்சி நடந்து வருகிறது.
அஜய் தேவ்கன் மற்ற படங்களின் வேலைகளை முடித்த பிறகு இந்த ஆண்டு இறுதியில் த்ரிஷியம் 2 ம் பாகத்தின் சூட்டிங்கை துவக்கி, அடுத்த ஆண்டு ரிலீஸ் செய்ய திட்டமிட்டு வருகின்றனர். தபு, ஸ்ரேயா சரண், இஷிதா தத் ஆகியோரை அதே வேடங்களில் மீண்டும் நடிக்க வைக்க முயற்சி நடக்கிறது.
எல்லாம் ஓகே தான். ஆனால் டைரக்டர் யார் என்று தான் இதுவரை முடிவுக்கு வர முடியாமல் தயாரிப்பு குழு தவித்து வருகிறது. முதல் பாகத்தை இயக்கிய நிஷிகாந்த் கமத் திடீரென மரணமடைந்ததால், டைரக்டரின் இடம் மட்டும் தற்போது வரை காலியாகவே உள்ளது. படத்தின் பணிகள் தள்ளி போவதற்கு இது தான் முக்கியமான காரணம் என கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











